பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எர்மின்‌ 267

எர்மின் 267 செஸ்குயி ஆக்சைடு (Er, O) கிடைக்கிறது. இது அமிலத்தில் கரைந்து சிவப்பு நிற உப்புகளைக் கொடுக் கிறது. இதன் உப்புகள் காந்த ஈர்ப்புத் தன்மை உடையவை. எர்பியம் அயனிகள் மூவிணைதிறன் கொண்டு விளங்குகின்றன. குறைந்த வெப்பநிலையில் இவ்வுலோகம் எதிர் அயக்காந்தத்தன்மையுடையதாக வும் மிகவும் குறைவான வெப்பநிலையில் அயக் காந்தத்தன்மையுடையதாகவும் உள்ளது. இளஞ்சிவப்பு வண்ணக் கண்ணாடி செய்யவும் பீங்கான் பொருள்களின் மீது வண்ணம் பூசவும் எர்பி யம் ஆக்சைடு பயன்படுகிறது. சிறிதளவு எர்பியம் சேர்ந்த வனேடிய உலோகக் கலவை, குறைந்த கடினத்தன்மை பெற்றுள்ளதால், இது எளிதில் பல பொருள்கள் செய்ய உதவுகிறது. எர்மின் ந.சு. ஞானப்பிரகாசம் பாலூட்டிகளின் வகுப்பைச் சேர்ந்த ஊனுண்ணி விலங்குகளுள் எர்மினும் (mustela ermina) ஒன்று. இவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, கிரீன் லாந்த் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. மஸ்டெலா எர்மினியா, அல்ஜிரியா என்ற உள்ளினம் (mustela, erminea, algeria) அல்ஜீரியாவில் காணப் படுகிறது. இவ்விலங்குகள் புல்வெளிகள், ஆற்றுப் படுகைகள், பயிர் நிலங்கள் போன்ற வாழிடங் களிலும், காடுகளில் 3400 அடி உயரம் வரையிலும் வாழ்கின்றன. பாறை இடுக்குகளிலும், கற்களுக் டையி லும் மற்ற விலங்குகளின் வலைகளிலும் வாழ்கின்றன. இவை பெரும்பாலும் அந்திப்பொழு திலும் இரவிலும் வெளியில் நடமாடுகின்றன. எர்மின் கள் பொதுவாகத் தனித்து வாழ்கின்றன. கி எர்மின் ஏறக்குறைய 43 செ.மீ. நீளமுள்ளது. ஆண் எர்மின்கள் பெண் எர்மின்களை விட உருவில் பெரியவை. ஆணின் எடை 100-500 கிராம் வரையும் பெண் எர்மினின் எடை 80-300 கிராம் வரையும் உள்ளன. உடல் மயிர் செம்பழுப்பு நிறங்கொண்டது. உடலின் கீழ்ப்புறம் வெண்மையாகவும் தொண்டைப் பகுதி வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். வால் செம்பழுப்பு நிறமானது; வாலின் நுனியில் நீண்ட கருநிற மயிர்கள் அடர்த்தியாகக் குஞ்சம் போன்று அமைந்துள்ளன. இதன் கால்கள் குட்டையானவை. இவை ஒரு குறிப்பிட்ட பரப்புள்ள இடத்தில் வாழ் கின்றன. இந்தப் பரப்பளவின் எல்லை மலப்புழைச் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் ஒருவகைச் சுரப்பியின் மணத்தினால் குறிக்கப்படுகிறது. எர்மின்கள் மிகவேகமாகத் தாவிச் செல்லும் இயல்புடையவை. இவ்வாறு ஒடும்போது ஒரே தாவலில் ஒரு மீட்டர் தொலைவைக் கடந்து செல் கின்றன. இவை ஒரே நேரத்தில் முன்கால்களையும், பின்கால்களையும் தூக்கியவாறு விரைவாகத் தாவி ஓடுவதால் தரையின் மீது சரிந்து ஒடுவது போலத் தோற்றமளிக்கின்றன. ஓடும்போது இடையிடையே நின்று முன்கால்களைத் தூக்கிப் பின் கால்களையும் வாலையும் தரையில் ஊன்றி நின்று சுற்றுப்புறத்தை நோட்டமிடும். மோப்பம், ஒலியறிதல், பார்வை ஆகிய மூன்று வகை உணர்வுகளாலும் இது இரையை அறிந்து கொள்கிறது. எர்மின்கள் எலி, அணில், முயல், பறவை, மீன், பூச்சி போன்றவற்றை உண்பவை. இரையைப் பார்த்தவுடன் எர்மின் கழுத்தை முன்னோக்கி நீட்டி, தலையைத் தரையை ஒட்டியவாறு வைத்துக் கொண்டு இரை விலங்கு எழுப்பும் ஒலியைக் கொண்டு அதை நோக்கிச் செல்கிறது. இரை விலங்கு தரைக்கடியில் இருப்பதை அது உண்டாக்கும் ஒலியைக் கொண்டோ தன் மோப்ப உணர்வாலோ அறிந்து கொண்டால் உடனடியாகத் தரையைத் தோண்டும். சில மீட்டர் தொலைவிலுள்ள இரை யைப் பார்த்து விட்ட எர்மின் அதைத் துரத்திச் சென்று அதன் தலையைக் கவ்விக் கொண்டு, பின் கால்களால் இரை விலங்கை இறுகப் பற்றிக்கொண்டு