270 எரிகலப்பி
270 எரிகலப்பி பணி. முழுமையாக எரிவதற்கு இக்கலப்பியையே பொறி சார்ந்திருக்கிறது. எனவே, இக்கலப்பியின் பணி இன்றியமையாத ஒன்றாகும். மாறா நிலை யளவில் ஒரே மட்டத்தில் எரிபொருளினைத் தேக்கி வைத்திருத்தல், எரிபொருளை முதலில் நுண் துகளாக்கி (பின்னர் ஆவியாக்கி) ஒரு படித்தான எரிகலவையை (nomogencous mixture) உருவாக்குதல், பொறியின் இயக்கத்துக்குத் தகுந்தவாறு எரிகலவை யின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கச் செய்தல், எவ்வெப்ப நிலையிலும் பொறியின் இயக் கத்தை எளிதாக இருக்கச் செய்தல், பொறியை இயங்குநிலைகளுக்கேற்றவாறு உடனடியாகச் செயல் படச் செய்தல் ஆகியவை இக்கருவியின் சில முக்கிய பணிகளாகும். ஒரு பொறியிலிருக்கும் எரிகலப்பிகள் ஒரே மாதிரியான இயக்கம், அமைப்பைக் கொண் டிருக்க வேண்டும். எளிதான மேலும் அவ்வப் போது ஏற்படக் கூடிய குறைகள் எளியமுறை யில் தீர்க்கப்படும்படியாகவும் இருக்கவேண்டும். வளிமண்டல வேறுபாடுகளுக்கு தகுந்தவாறு இயங்கவேண்டும். மேலும் வளிமண்டலத்தில் ஏற் படும் தீவிர மாறுதல்களினால் தாக்கமுறாவண்ணம் இருக்க வேண்டும். அமைப்பு: எரிகலப்பியின் எளிய அமைப்பு படம் 1-இல் காட்டப்பட்டுள்ளது. எளிய அமைப்புள்ள எரிகலப்பியின் முக்கிய பாகங்கள், மிதவைக்கலம் (float chamber) குறுவழி (venturi) குறுவழி இதழ் (throttle) காற்று சுட்டுப்படுத்தி (choke) ஆகியன. சி மிதவைக் கலம். எரிகலப்பியில் எப்போதும் எரி பொருளின் அளவை ஒரே மட்டத்தில் இருக்குமாறு பாதுகாப்பதுதான் மிதவைக்கலத்தின் முக்கிய பணி ஆகும். எரிபொருளை இவ்வாறு ஒரே மட்டத்தில் தேக்கி வைக்க ஓர் உள்ளீடற்ற பித்தளை மிதவையும், இதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஓர் உள அடைப்பிதழும் மிதவைக்கலத்தினுள் அமைக்கப் பட்டிருக்கும். மிதவைக் கலத்தின் மேற்பகுதியில், எரிபொருள் வரும் வழியான உள்வழிக்கு நேராக மேல் மிதவையின் இந்த ஊசி அடைப்பிதழ் பொருத்தப்பட்டிருக்கும். கலத்தினுள் எரிபொருளின் அளவு அதிகமாகும்போது, அதில் மிதக்கும் மிதவை சிறிது சிறிதாக மேலேற ஊசி அடைப்பிதழ் வேற்றுமையத் திரிமுனை இயக்குபுயம் கலவை எரிபொருள் உள்ளிடல் வளி மண்டல அழுத்தம் குறுவழி இதழ் எரிபொருள் ஏற்றுப்பொறி மிதவைக்கலம் காற்று அளவீடு நுண்துளை உள்வழி அடைப்பிதழ் குறுவழி 01 பொறி மட்டும் காற்றுக்கட்டுப்படுத்தி படம் 1. எரிகலவை செலுத்தப்படல்