எரிகலப்பி 271
எரிகலப்பி 271 வ எரிபொருளின் உள்வழியை அடைத்துவிடும். கலத் திற்கு வரும் எரி பொருள் முழுமையாக நிறுத்தப்படும். எரிபொருளின் அளவு குறையும்போது மிதவையும் கீழிறங்குவதால், கலத்தின் உள்வழி திறக்கப்பட்டு எரிபொருள் கலத்தை அடையும். இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட அளவு மட்டத்தில் கலத்தினுள் எரி பொருள் தேக்கி வைக்கப்படுகிறது. கலத்தின் மேற் பரப்பிலுள்ள ஒரு சிறு துளையினால் எரி பொருள் எப்போதுமே வளிமண்டல அழுத்தத்துடன் தொடர்பு கொண்டிருக்கும். குறுவழி, எந்த ஒரு நீர்மமும் தான் பாய்ந்து கொண்டிருக்கும் பாதையில் சிறு வேறுபாடு ஏற்பட் டாலும் (பாதையின் குறுக்களவு குறைக்கப்பட்டால்) குறைந்த அழுத்தமும் அதிக வேகமும் பெறும். இம் மாற்றம் தொடர்ந்தால் நீர்மத்தின் அடர்த்தி குறை யக்கூடும். ஆனால் பொறியின் உருளைகளுக்கு அதிக அடர்த்தியுள்ள எரிகலவை செலுத்தப்பட வேண்டும். இதனால் எரி கலப்பியில் மேற்சொன்ன பாதை வேறுபாடு. குறுவழி என்ற வடிவில் அமைக் கப்பட்டுள்ளது. வீச்சின்போது காற்று குறுவழியின் உறிஞ்சு வழியே அதிக வேகத்துடனும், குறைந்த அழுத்தத் துடனும் செல்கிறது. இந்த எரிகலப்பிக் குறையழுத் தத்தினால் (carburettor depression) எரிபொருள், தாரையின் (jet) வழியே உறிஞ்சப்படுகிறது. இந்தத் தாரை குறுவழியின் நடுவில் பொருத்தப்பட் டிருக்கும். தாரையின் மறுமுனை மிதவைக் கலத் துடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாகத் தாரையின் வழியே வரும் எரிபொருள் குறுவழியி னுள் அனுப்பப்படும். காற்றினால் சிறுதுகள்களாக்கி ஆவியாக்கப்படுகிறது. எரிபொருள் ஆவியாவது அதன் தன்மை, வெப்பநிலை, காற்றின் திசைவேகம், குறு வழியின் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்தது. 1 குறுவழிக் கதவு. தாரைக் குழலின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் குறுவழிக் கதவு, பொறியின் உருளைக்குச் செலுத்தப்படும் எரிகலவையின் அள வினைக் கட்டுப்படுத்துகிறது. சில எந்திரவியல் இணைப்புகளால் பொறியின் முடுக்கியுடன் பொருத் தப்பட்ட இந்தக் குறுவழிக் கதவு, முடுக்கியின் இயக் கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இக்கதவு முழுமை யாகத் திறந்திருக்கும் போது, எரிகலவை அதிகமான அளவில் உருளையினுள் செலுத்தப்படப் பொறியின் வேசும் அதிகரிக்கிறது. இந்த வேசு அதிகரிப்பு பொறி யின் திறனுக்கும், பொறியில் இணைக்கப்படும். வேலைப் பளுவுக்கும் ஒரு சமநிலை ஏற்படும்வரை தொடரும். எனவே, இக்கதவினைத் திறந்து மூடு வதன் மூலம் பெரும சுழல்வேக வேறுபாட்டை அடைய இயலும். வெளிக் கட்டுப்படுத்தி. ஒரு பொறி குறைந்த வெப்பநிலையில் இயக்கப்படும்போது. பின்வரும் குறைகள் காணப்படுகின்றன. குறைந்த திசைவேக முள்ள காற்று குறுவழியின் மையத்தில் சிறு அளவு அழுத்தவேறுபாட்டையே கொடுக்கும். இதனால் குறைந்த அளவு எரிபொருளே தாரைக் குழாயின் வழியே உறிஞ்சப்படும். எரிபொருள் கலவையிலுள்ள சிறிதளவு எரிபொருள் நீர்மமாகிக் கலவை செல்லும் குழாயின் சுவரில் படிந்துவிடுவதால் கலவையின் அடர்த்தி குறைகிறது. இக்குறைந்து அடர்த்தி, மற்றும் ஒருபடித்தான மில்லாத (non-homogeneous) கலவையால் பொறி யினைச் சரிவர இயக்க இயலாது. எனவே, அதிக அடர்த்தியுள்ள கலவை குறைந்த வெப்ப நிலையில் இருக்கும் பொறியை இயக்கத் தேவைப்படுகிறது. இந்த அதிக அடர்த்தியுள்ள எரிகலவை குறுவழியுடன் கூடுதலாக இணைக்கப்படும் காற்றுக் கட்டுப்படுத்தி யால் பெறப்படுகிறது. காற்றுக்கட்டுப்படுத்தி, காற்றின் உள்வழியில் அமைக்கப்பட்டிருக்கும். காற் றுக் கட்டுப்படுத்தி பாதி திறந்திருக்கும்போது, உறிஞ்சு வீச்சினால் ஏற்படும் அழுத்தக் குறைவு அதிகமாகிறது. எரிபொருள் மிதவைக் கலத்தில் காற்று அழுத்தத் துடன் தொடர்பு கொண்டிருப்பதால், குறுவழிக் குழாயருகில் அதிக அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் அதிக அளவு எரிபொருள் உறிஞ்சப்பட்டு, பொறி இயங்க ஆரம்பிக்கிறது. பொறி இயங்கும் போது, வெப்பநிலை உயர்வின் காரணமாகக் காற்றுக் கட்டுப்படுத்தி முழுதும் திறந்து கொள்ளும். இதன் பின்னர் சரியான அளவு விகிதத்தில் எரிகலவை உரு வாக்கப்பட்டு உருளைக்குள் செலுத்தப்படும். எரிகலப்பியினுள் காற்று செல்லும் திசையை வைத்து அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல்வழி எரிகலப்பியில் காற்று கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும். கீழ்வழி எரிகலப்பியில் காற்று மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும். கிடை மட்ட எரிகலப்பியில் காற்றின் ஓட்டம் கிடை மட்டமாக இருக்கும். எரிகலப்பியின் இணை இயக்கம். தற்காலத்தில் தானியங்கு வாகனங்களில் பொருத்தப்படும் பொறி கள் குறிப்பிட்ட வேலைச்சுமையில் மட்டுமே இயங்கும் படி இருக்கலாகாது. வேலைச்சுமை மாறக் கூடியது. அதற்கேற்றவாறு பொறியின் திறனும் சுழல் வேகமும் மாறும். எனவே, வேலைச்சுமை இல்லாதபோது பொறியில் எரிபொருளைச் சேமிக்கவும், அதிக வேலைச் சுமையில் எரிபொருளின் அளவைத் தேவை யான விகிதத்தில் அதிகப்படுத்தவும் எரிகலப்பியின் பொறுப்புகளை நிறைவேற்றவும் அதில் சில முக்கிய இணை இயக்கங்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படு கின்றன. அவற்றுள் முக்கியமானவை முதன்மை அளவீடு இயக்கம் (main metering system), பழுவில்லா ஓட்ட இயக்கம் (idling system), ஆற்றல் பெருக்கு இயக்கம் (power enrichment system), முடுக்க எக்கி