பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 எரிகேசி

272 எரிகேசி இயக்கம். (accelerating pump system) காற்றுக் கட்டுப்படுத்தி ஆரம்ப நிலை இயக்கம். குறைபாடு: எரிகலப்பியில் வேலைச்சுமைக்கேற்ப எரிபொருளை அளவிட்டுக் கொடுப்பதற்குப் பல வசதிகள் இருந்தும், சில சமயங்களில் பொறியின் நிலைக்குத் தக்கவாறு எரிகலவையை செலுத்த முடிவ தில்லை. ஆகாயவிமானங்களில் பயன்படும் எரிகலப்பி யில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சில: காற்றுக் குழாயில் ஏற்படும் அழுத்தக் குறைவில் ஒரு பகுதி பயன்படாமல் போகிறது. இதனால் குறுவழியும் உள்வழிப் பாதையும், காற்றின் பாய்விற்குச் சிறிது தடை கொடுக்கின்றன. இதற் காக அவற்றின் அளவைப் பெரிதாக்க முடியாது. அப்படி ஆக்கினால், எரிபொருள் நுண்துகள்களாய்த் தெளிக்கப்படுவதற்குத் தேவையான அழுத்தக் குறைவு ஏற்படாது. எரிகலப்பியின் குறுவழியில், எரிபொருள் நுண் திவலைகளாகி ஆவியாகும்போது அவை வெளிக் காற்றின் வெப்பத்தைப் பெற்றுக் கொள்கின்றன. இதனால் வெளிக்காற்றின் வெப்பநிலை குறைந்து, காற்றின் ஈரப்பதத்திலிருக்கும் நீர் உறைந்து பனிக் கட்டியாகிவிட வாய்ப்புண்டு. இவ்வாறு குறுவழியில் ஏற்படும் வாய்ப்பு அதிகமிருப்பதால், குறுவழி பனிக் கட்டியால் அடைபட்டு பொறியின் செயல் பாதிக்கப் படலாம். எரி கலத்திலிருந்து தவறிப் பின்னோக்கி வரும் தீப்பொறி அல்லது தீச்சுடர், உள்வழிப் பாதையில் இருக்கும் எரிகலவையைப் பாதித்து எதிர்ச்சுடர் (back fire) அபாயத்தை ஏற்படுத்தலாம். எரிகலப்பியினுள் நேர் அழுத்தம் அல்லது மிகை அழுத்தம் இல்லாவிடில் ஆவித்தடை (vapour lock) ஏற்படக் கூடும். அதிக உயரமும், மித வெப்ப நிலை யும் ஆவித்தடை ஏற்படச் சாதகமான நிலை களாகும். எரிகலப்பி சாய்வாகவோ சீரான அமைப் பில் பொருத்தப்படாமலோ இருந்தால் பொறி சிறந்த முறையில் இயங்காது. க பொறியில் சிறந்த பங்கீட்டிற்கான வழிமுறை. செயல்படும் அனைத்து உருளைகளுக்கும் சம அள வான எரிபொருளைப் பிரித்துக் கொடுக்கப் பல முன் னேற்றச் செயல்முறைகள் எரிகலப்பியில் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: உள்வழிப் பாதையில் முடிந்த அளவு எரிபொருளை அதிக அளவில் ஆவி யாக்க வேண்டும். எளிதில் ஆவியாகக் கூடிய எரி பொருள் உபயோகிக்கப்பட வேண்டும் உள்வழிப் பாதையில் வெப்ப அளவு சற்றுக் கூடியிருக்க வேண்டும். எரிபொருள் திறந்த முறையில் நுண் துகள்கள ளாக்கப்படுதல் வேண்டும். எரிபொருள் திவலைகள் காற்றுடன் கலந்து செலுத்தப்படும் வகை யில். போதிய அளவு திசைவேகம் இருக்க வேண்டும். இதற்கு உள்வழி அமைப்பு சற்றுக் குறுகியதாக இருக்கலாம். உள்வழிப் பாதையில் காற்று செல்லும், செலுத்தப்படும் முறைகளைக் கருத்திற்கொண்டு தக்க இடத்தில் எரிபொருள் கலவையைச் செலுத்தவேண்டும். உள்வழிப்பாதையில் எவ்விதமான திடீர் மாற்றமும், கூர்மையான வளைவு முனைகளும் தவிர்க்கப்பட வேண்டும். எரிகலவையில் எவ்வித மாறுபாடுகள் இல்லாதவாறும், திசைவேகத் தில் மாறுதல் இல்லாதவாறும், சிறந்த முறையில் எவ் விதத் தடையுமின்றிக் கலவை தன் பாதையில் சென்று உருளைகளை அடையுமாறும் உள்வழிப் பாதையின் உள்ளமைப்பு, சீராக இருக்க வேண்டும். குழிகளோ பிரிவுகளோ இருந்தால் எரிபொருள் துகள்கள் தேங்கிவிடலாம். எரிகலப்பியின் வகை. தானியங்கி உந்துகளில் பயன்படும் எரிகலப்பிகள் பல வகைகளாக உள்ளன. ஜெனித் (Zenith) ஜெனித்-ஸ்ரோம்பெர்க் (Zenith - Stormberg) எஸ் பு. (S.U) ஸோலக்ஸ் (Solex (Clavdel-Hobsun) aLLİ க்ளாடல் - ஹாப்ளின் (Carter) மார்வெல்-ஸகப்ளர் (Marvel-Scheb!er) சேன்ட்லர்-க்ரூவ்ஸ் (Chandler-grooves) டில்லட்ஸன் (Tillotson) ஃபோர்ட் (Ford T.V.O) என்பன வழக்கத்தில் உள்ளன. மின்பொறி எரிபற்றுப்பொறியின் முதன்மை அமைப்பான எரிகலப்பியின் திட்ட அமைப்பும் வடிவமுமே, எதிர்பார்க்கும் பயனைத் தரவல்லன. தானியங்கியின் சிறந்த பயனை முழுமையாகப் பெற எரிகலப்பி முறையான வகையில் செயலாற்ற வேண்டி உள்ளது. எரிபொருள் செலவீடு கட்டுக்குள் இருக்கவும் எரிகலப்பியின் பங்கு முதன்மையானது. எரிகேசி - கே.ஆர்.கோவிந்தன் இத்தாவரக்குடும்பம், டைகாட்டிலிடனஸ் எனப்படும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இக் குடும்பத்தில் 50 இனங்களும் 1350 சிற்றினங்களும் உண்டு. இவை பாலைநிலங்கள், வெப்ப மண்டல மலையுச்சிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் காணப்படும். ஆஸ்திரேலியாவில் இக்குடும்ப இனங் களைக் காண்பதரிது. இக்குடும்பம் பொருளாதாரச் சிறப்புப் பெற்றதன்று. வளரியல்பு. வேர்ப்பகுதியில் மைக்கோரைஸர் (mycorrhiza) தொடர்பு காணப்படுவது இக்குடும் பத்தின் சிறப்புப் பண்பாகும். பூஞ்சைகள் வேரின் திசுக்களில் காணப்படுவதால் இதை எண்டோட்