எரிகேசி 275
எரிகேசி 275 என்ற இனத்தில் மகரந்தச் சேர்க்கை வெடி வகை யைச் (explosive mechanism) சேர்ந்தது. இம்மலரின் அல்லிவட்டம் மணி போன்று இருப்பதோடு, அல்லிக் குழலின் நடுப்பகுதியில் 10 சிறு பைகளைக் கொண்டு மிருக்கும். ஒவ்வொரு பையிலும் மகரந்தத்தாளின் நுனிப்பகுதி வளைந்த நிலையிலிருப்பதைக் காண லாம். மகரந்தத்தாள்கள் தொடப்பட்டால் மகரந்தப் பைகள் விடுபட்டு, மகரந்தத் தூள்களைத் தூவிவிடும். வகைப்பாடு இக்குடும்பம் கனிவகை, மகரந்தப்பை நீட்சிகள், பனிக்காலக் குருத்துகள், செதிலிலைகள், விதை - இறகு அடிப்படையில் 4 னங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ரோடோடெண்ராய்டியே (Rhododendroideae). கிழக்கு ஆசியா, நியூகினி, வட்ட அமெரிக்காவில் மட்டுமே இவ்வினங்கள் உண்டு. ஆப்ரிக்காவில் அரிது. செதிவிலைகள் உண்டு. பொதுவாக மகரந்தப்பை நீட்சிகள் இல்லை. கனி செப்டிசைடல் கேப்சூல் வகை. விதைகள் இறகு கொண்டவை. எரிகாய்டியே (Ericoideae). ஆப்ரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி, ஐரோப்பா ஆகிய இடங்களில் இவ்லினங்கள் காணப்படுகின்றன. செதிலிலைகள் இல்லை. மகரந்தப்பை நீட்சிகளுண்டு; கனி லாகுலி சைடல் கேப்சூல். விதைகள் இறகற்றவை. வாக்கியாய்டியே (Vaccinioideae). அமெரிக்காவிலும் ஆசியாவிலும் மட்டும் பரவியுள்ளன. ஆப்பிரிக்காவில் இல்லை. செதிலிலைகள் உண்டு. மகரந்தப்பை நீட்சிக ளுண்டு; கனி லாகுலிசைடல் கேப்சூல்; பொரி ட்ரூப் விதைகள் இறகற்றவை. எபிஜீயாய்டியே (Epigaeoideae). மலர்கள் ஒருபால், ஈரில்ல வகை, மகரந்தப்பைகள் நீட்சிகளற்றவை. சூலகப் பிளாசண்டா பிளவுபட்டது. பொருளாதாரச்சிறப்பு. இக்குடும்ப இனங்கள் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவையல்ல. இக் குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்கள் கால்நடை நச்சுச் செடிகளாகக் கருதப்படுகின்றன. எடுத்துக் காட்டாக மேற்கு இமய மலையில் தன்னிச்சையாக வளரும் ரோடோடெண்ட்ரான் கம்பேனாலேனம் (Rhodd ndron campanulanum) என்னும் செடியைப் பொதுவாக ஆடுகள் தின்பதில்லை. ஆனால் கோடை யில் வேறு உணவு கிடைக்காத சூழ்நிலையில் ஆடுகள் இவ்விலைகளைத் தின்று இறந்து விடுகின்றன. இதே கால்மியா, ஆண்ட்ரோமீடா லையோனியா முதலியவை ஆண்ட்ரோமீடாடாக்சின் என்ற நச்சுப் பொருளைக் கொண்டவையாகும். இந்த நச்சுத் தன்மை மலரிலுள்ள தேனுக்கும் பொருந்தும் என்ற பொதுக் கருத்துண்டு. போல் கால்தீரியா. இந்த இனத்தில் இலைகள் நறுமண எண்ணெயைப் பெற்றுள்ளமையால், அவை மண எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த எண்ணெய் மருந்துகளுக்கு நறுமணம் கொடுக்கும் பொருளாகப் பயன்படுவதுடன் முடக்குவாதத்திற்கு மருந்தாகவும் செயல்படுகிறது. இம்மரம் நீலகிரி, காடைக்கானல் பகுதிகளில் தன்னிச்சையாக வளர் கிறது. இந்த இனத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், விண்டர் கிரீன் எனப்படும். ரோடோடெண்ட்ரான். து ஒரு பெரிய இன மாகும், இம்மரங்கள் அவற்றின் வண்ணப் பூக்களுக் காக வளர்க்கப்படுகின்றன. தோட்டக் கலையியலா ளர்களால் அஸேலியா (Azalea) என்று குறிப்பிடப் படும் வகைகள் தாவரவியலர்களால் ரோடோ டண்ட்ரான் னத்தோடு சேர்க்கப்படுகின்றன. நீலகிரி ரோடோடெண்ட்ரானை அழிஞ்சி என்று கூறுவர். தி. ஸ்ரீ க ணசன் மகரந்தத்தாள்கள் அ.க. 6-18அ