பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரித்ரைட்‌ 277

குளிர்காலவானம் எரிடானஸ், எரிடானஸ் விண்மீன்குழு வளைந்திருக்கும் இக்குழுவிற்கு எரிடானஸ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். மிகவும் ஒளியை உடைய விண்மீன்களில் ஒன்பதாவதாகக் கருதப்படு வதும் முதலாம் பொலிவுப்பரிமாணமுடையதுமான அச்செர்னர் (Achernur) என்ற விண்மீன் இவ்விண் மீன் குழுவின் தென் முனையில் உள்ளது. இதில் உள்ள மற்றொரு விண்மீன் அகேனார் (Acanar) ஓர் இரட்டை விண்மீன் ஆகும். இக்குழுவின் வல ஏற்றம் 1.5-5 மணி நேரமாகவும், நடுவரை விலக்கம் 058° வரை தெற்காகவும், பரப்பு 1138 சதுர பாகையாகவும் அமையும். எரித்ரைட பங்கஜம் கணேசன் இது ஒற்றைச் சரிவு படிகத்தொகுதியைச் சார்ந்த நீர்மக் கோபால்ட் ஆர்சினேட் கனிமமாகும். இதன் வேதியியல் உட்கூறு CogAs, Os 8H,0. இதில் கோபால்ட் பென்டாக்சைடு 37.5%ம், ஆர்சனிக் பென்டாக்சைடு 38.4%ம்,நீர் 24.1%ம், உள்ளன. இதிலுள்ள கோபால்ட் சில சமயங்களில் இரும்பு, நிக்கல், கால்சியத்தால் இடப்பொர்ச்சியடைந்து எரித்ரைட் 277 காணப்படும். படிகங்கள் பட்டக வடிவிலும், நீண்ட நெடுக்கு வரிகளைக் கொண்ட கோள வடிவிலும், சிறுநீரக வடிவிலும் (reniform), நீண்ட தூண் வடி விலும், அடுக்குக்குறைப்படிக வடிவிலும் இயற்கையில் காணப்படுகின்றன. இவை செங்கற் சிவப்பு, சாம்பல் நிறப் பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இவற் றின் உராய்வுத்துகள் வெளிர்நிறப் பழுப்பாக இருக் கிறது. இதன் கடினத்தன்மை 1.5 2.5; அடர்த்தி 2.95; படிகம் தெளிவான குறுஇணை வடிவப்பக்கக் கனிமப்பிளவு கொண்டது. குறைவான செவ்விணை வடிவப்பக்கம் (100), பட்டகப்பக்கப் (101) பிளவும் கொண்டது. இவை ஒளி ஊடுருவும் தன்மை முதல், குறை ஒளிக்கசிவுத் தன்மை வரை கொண்டவை. இவற்றின் ஒளியியல் அச்சுத்தளம் (optical axia plane) குறுஇணைவடிவப் பக்கத்திற்குச் (010) செங்குத்தாக உள்ளது. பலதிசை அதிர்நிறமாற்றம் கொண்டது. விரை ஒளித்திசையில் (y) சிவப்பாகவும், இடை ஒளித்திசை யில் (B) வெளிர் ஊதாநிறமாகவும், மெதுஒளித்திசை யில் (a) வெளிர் இளஞ்சிவப்பு நிறமாகவும் பல அதிர் நிறமாற்றப் பண்பைக் காட்டும். இதன் ஒளி விலகல் எண் விரை ஒளித்திசையில் (Y) 1.701 ஆகவும்.மெது ஒளித்தி செயில் (கூ) 1.629 ஆகவும். டை ஒளித் திசையில் (B) 1.663 ஆகவும் உள்ளது. வை சாய்வு மறை கோணம் (inclined extinction) உடையவை. ஊது குழல் ஆய்வு முறையில் (blow pipe test) இளம் சூட்டில் நீர்த்திவலைகளை ஈந்து நீலநிற மாக மாறும். அதிகச் சூட்டின்போது ஆர்செனிக்ட்ரை ஆக்சைடை வெளியேற்றி ஆய்வுக் குழாயின் குளிர்ந்த பாகங்களில் படிகமாகப் படியும். இப்படிவு பழுப்பு, கறுப்பு நிறமாக இருக்கும். கரிக்குழியில் இதனை ஊதுகுழலால் சூடு செய்யும்போது ஆர் செனிக்கின் மணத்தைக் கொடுக்கிறது. பின் உருகிக் கரும்பழுப்பு நிற ஆர்சனைடைக் கொடுக்கும். கரும் தனை வெங்காரத்துடன் சேர்த்துக் கரிக்குழியில் சூடு செய்யும்போது கருநீலநிறமாக மாறும். இச் சோதனையிலிருந்து இதில் கோபால்ட் உள்ளதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஹைடிரோ குளோரிக் அமிலத்தில் கரைந்து ரோஜா சிவப்பு நிறக்கரைசலைக் கொடுக்கிறது. லாவண்டிலன் என்பது ஒரு குப்ரியன் வகை எரித்திரைட்டாகும். பரவல். இது ஓர் இரண்டாம் நிலைத் தோற்றக் கனிமம். கோபால்ட் கனியப் படிவுகளின் மேற்பரப்பில் யல்பாகக் கிடைக்கும். கோபால்ட் படிவுகள் ஆக்சிஜ னேற்றம் அடைவதால் இது உண்டானது எனக் குறிப்பிடுகின்றனர். உலகில் ருமேனியாவில், டோக் னஸ்காவிலும், செக்கஸ்லோவியாவில், பொகிமியாவிக் கருகிலுள்ள ஜோஷிம்டால் என்ற இடத்திலும், சுவீட னில் சோர்டர்மாண்டிலுள்ள துனபெர்கிலும், கம்பர் லாந்தில் அல்ஸ்டன்குரிலும், கார்ன்வால் பகுதியில்