எரிதல் 279
எரித்ரோமைசினை. அவசர நிலைகளில் எரித்ரோ மைசின் எத்தில் சக்சினேட் மற்றும் லாக்டோப்யனேட், குளுசிபிளேட் போன்றவற்றை ஊசி மருந்தாகப் பயன்படுத்தலாம் மணி ஸ்டீரேட் அல்லது எஸ்டோலேட் வகைகளை 500மி.கி. அலகில் உட்கொள்ளும்போது 1-4 நேரத்தில் இரத்தத்தில் 5-15 மைக்ரோகிராம்/ மி.லி காணப்படுகிறது. இது பித்தநீர் வழியாக வெளி யேற்றப்படுகிறது. சிறுநீரில் 2-5% காணப்படுகிறது. பென்சிலின் ஒவ்வாமை நோய்களில் எரித்ரோ மைசினைப் பயன்படுத்தலாம். சிலர், இதை மேக நோய்க்கும், வெட்டை நோய்க்கும் பயன்படுத்துகின்ற னர். குழந்தைகளிடம் தோன்றும் நடுச்செவி அழற்சி மற்றும் காற்றுக் குழிவு அழற்சி, ஹீமோஃபிலஸ் இன்புளுயென்சா மற்றும் ஸ்ட்ரேப்டோகாக்கஸ் நிமோனியா என்பவை நுண்ணுயிர்களால் உண்டாவ தால் இவற்றிற்கு எரித்ரோமைசின் நல்ல பயனளிக் கும். வேண்டா விளைவுகள். இதன் வேண்டாவிளைவு கள் குறைவே. வயிற்றுப்போக்கு, குமட்டல், வற்யிறுவலி ஆகியவை புரோபியோனேட் மற்றும் எஸ்டோலேட் எரித்ரோமைசின் மாத்திரைகளைப் பயன்படுத்துகையில் உண்டாகின்றன. தோல் பொரிவுகளும் உண்டாகின்றன. சிரை வழியாக எரித் ரோமைசின் செலுத்தப்படும் போது சிரை அழற்சி உண்டாகலாம். பத்து நாளுக்கு மேல் எரித்ரோ மைசின் கொடுக்கப்பட்டால், ஈரல் அழற்சி ஏற்பட லாம். அப்போது காய்ச்சல். வீங்கிய தொடு வலி கொண்ட கல்லீரல், கருமையான சிறுநீர், இரத்தத் தில் இயரேசினோபில் செல்கள் மிகைப்பு ஆகியவை தோன்றுகின்றன. எரித்ரோமைசின், மாத்திரையாக வும், ஊசி மருந்தாகவும், களிம்பாகவும், குதத்தின் வழிச் செலுத்தும் மருந்தாகவும் கிடைக்கிறது. எரிதல் யான ஆக்சிஜன் அ. கதிரேசன் திண்ம, நீர்ம, வளிம நிலைமைகளில் இருக்கும் பொருள்கள் காற்றால் ஆக்சிஜனேற்றமடைந்து வெப்பத்தையும் ஒளியையும் தரும் வினையே எரிதல் (combustion) எனப்படும். இவ்வினைக்குத் தேவை கிடைக்க காற்றிலிருந்துதான் வேண்டும் என்ற தேவையில்லை. நைட்ரிக் அமிலமும், அம்மோனியம் பெர்குளோரேட் போன்ற சேர்மங்க ளில் இருக்கும் ஆக்சிஜனும் அப்பொருள் எரிதலுக்குக் காரணமாக அமைகின்றன. மேலும், ஆக்சிஜனேற்றி என்பது ஆக்சிஜனாக மட்டுமல்லாமல் ஃபுளூரின் எரிதல் 279 இருக்கலாம். ஓர் போன்ற வேறு பொருளாகவும் ஆக்சிஜனேற்றி, எரிபொருளுடன் சேர்ந்து எரியும் போது வெப்பத்தையும் ஒளியையும் கொடுக்கிறது. தனியொரு பொருள் வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்ந்து சிதைவடைவதால் எரியலாம். இதற்கு அசெட்டிலீன், ஓசோன், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அசெட்டிலின் சிதைவடைவதால் கரியும் ஹைட்ரஜ னும், ஓசோன் சிதைவடைவதால் ஆக்சிஜனும், ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதால் நீரும் ஆக்சிஜனும் உண்டாகின்றன. . . திண்ம, நீர்மப் பொருள். நிலக்கரி, மரம் போன்ற திண்மங்களின் எரிதல் படிப்படியாக நிகழ்கிறது. முதலில் இவற்றிலுள்ள ஆவியாகும் பொருள்கள் வெப்பச் சிதைவடைந்து காற்றில் எரிகின்றன. சாதாரணமாக எரிதல் வெப்பத்தில் வெப்பமிக்க திண்மப்பொருள் எரிவதை அவற்றின் பரப்பில் காற்றி லிருக்கும் ஆக்சிஜன் நுழைவதைக் கட்டுப்படுத்திக் குறைக்கலாம். கரி அல்லது கல்கரி எரிவதால் முதலில் உண்டாகும் விளைபொருள் கார்பன் மோனாக்சைடு ஆகும். வெப்பம் குறையும்போது இவ்வளிமம் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. கார்பன் மோனாக்சைடு நச்சுத் தன்மை வாய்ந்தது; மணமில்லாதது. சரியாக வடிவமைக்கப்படாத அல்லது திறந்த வெளி வெப்ப மூட்டிகளிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் கார்பன் மோனாக்சைடு உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நீர்ம எரிபொருள்கள் அப்படியே முழுதும் எரிவ தில்லை. இவற்றின் புறப்பரப்பின் மேலுள்ள ஆவியே எரிகிறது.எரிதலின்போது உண்டாகும் வெப்பத்தால் மேலும் அதிக அளவில் நீர்மம் ஆவியாகிக் காற்றி லுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிகிறது. தொடர் எரிதல். அதிக அளவிலிருக்கும் சில பொருள்கள் தொடர்ச்சியாக எரிகின் றன. இப் பொருள்களிலுள்ள மிக நுண்ணிய கிருமிகளின் ஆக்சிஜனேற்றப் பண்பால் அவை தொடக்க வெப்பத்தை உண்டாக்குகின்றன. வெப்பநிலை மிகும்போது காற்று, பொருள்களில் நுழைந்து எரி தலை விரைவுபடுத்துகின்றது. சுற்றுப்புறத்தில் வெப்பம் சிதறலைச் செய்ய முடியாமையால் பொருளின் வெப்பம் மிக, ஆக்சிஜனேற்ற வேகம் அதிகரிக்கின்றது. இதனால் அப்பொருள் தீப்பற்றும் நிலையை அடைந்து தீச்சுவாலையுடன் எரிகிற நிலக்கரியை இவ்வாறு தொடர் எரிதலுக்குட் படுத்தலாம். றது. வளிமங்கள். சாதாரண வெப்பநிலையில் மூலக் கூறுகள் மோதுவதால் எரிதல் நடைபெறுவதில்லை.