பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 எரிதல்‌

280 எரிதல் உயர்வெப்பத்தில், வெப்பத்தால் கிளர்வுற்ற மூலக் கூறுகள் அதிகமாகவே மோதிக்கொள்கின்றன. இம் மோதுகையில் மிகு ஆற்றல் உள்ளடக்கப்படுகின்றது. மூலக்கூறுகளிடையே ஏற்படும் மோதலால் மிகக் குறைந்த அளவே எரிதல் நடைபெறுகின்றது. ஆனால் மிகு ஆற்றல் கொண்ட மோதல் நடைபெறும்போது மூலக்கூறுகள் அணுக்களாக அல்லது தனித்தியங்கு உறுப்புகளாகப் பிரிவுறுகின்றன. இவ்வாறு பிரிவுறும் உறுப்புகள் தொடர்ச்சியாக வினைபுரிகின்றன. இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து எரிந்து நீர் உண்டாகும் வினை ஒரே படியில் நிகழ்வதில்லை. இதில் ஏறக்குறைய 14 வினைப்படிகள் பெறுவதாக அறியப்பட்டுள்ளது. முதல் மோதலால் ஹைட்ரஜன் அணு உண்டாகிறது. பின்னர் இது ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் வினையுற்று ஹைட் ராக்சில் உறுப்பு உண்டாகிறது. H + O, → OH - + [O] இடம் ஹைட்ராக்சில் உறுப்பு ஹைட்ரஜன் மூலக்கூறுடன் வினைபுரிவதால் நீரும் ஹைட்ரஜன் அணுவும் உண்டாகின்றன. இந்த வினை, தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. சில நேரங்களில் ஆக்சிஜன் அணு ஹைட்ரஜன் மூலக்கூறுடன் வினைபுரிய ஹைட்ராக் சில் தொகுதியும் ஹைட்ரஜன் அணுவும் உண்டா கின்றன. எனவே, தனியொரு ஹைட்ரஜன் அணு புதிய ஹைட்ரஜன் அணுவையும் உண்டாக்க முடியும். அணுக்களும், தனித்தியங்கு உறுப்புகளும் மீண்டும் ஒருங்கிணைந்து நடுநிலை மூலக்கூறை உண்டாக்கு கின்றன. கிளைத் தொடர் வினைகள், தொடர் முடிவுறும் வேகத்திற்குச் சமமாக அல்லது அதைவிட அதிகமாக இருந்தால் வெடித்தலுடன் எரிதல் நடைபெறுகிறது. இந்தக் கிளைத்தொடர் வினை அணுக்கருப் பிள வினைப் போன்றது. ஒன்றுக்கு மேற்பட்ட நியூட்ரான் கள் யுரேனியம் அணுக்கரு நியூட்ரானால் தாக்கப் படுவதால் பிளவு வினை உண்டாகின்றது. வளிம நிலையில் வெடித்தலுடன் எரிதல் நிகழ்வதற்கு மற்றொரு காரணம் வினையினால் விளையும் வெப்பத்தின் வேக அளவு சுற்றுப்புறத்திற்குப் பரி மாற்றப்படும் வேகத்தைவிடக் குறைவாக இருப்பதே யாகும். வெப்பநிலை அதிகரிக்கும்போது வினையின் வேகம் அதிகரிக்கின்றது. இதனால் அதிக வெப்பம் வெளிப்படுகிறது. இது வளிமக் கலவை முழுதும் வினைபுரியும் வரையில் நடக்கிறது. இதற்கு வெப்ப வழி வெடித்தல் என்று பெயர். எரிதல் மெதுவாக நிகழுமானால் இடைநிலைப் பொருள்களைப் பிரித்து எடுக்கலாம். ஹைட்ரோ கார்புன்களை மெதுவாக எரிதலுக்கு உட்படுத்தினால் ஆல்டிஹைடுகள். அமிலங்கள், பெராக்சைடுகள் போன்றவை விளைகின்றன. இதேபோல் ஹைட்ரஜன் பெராக்சைடு மெதுவாக எரிந்தால் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் உண்டாகின்றன. மிகக்குறைந்த வெப்ப நிலையில் பாரஃபின் ஹைட்ரோகார்பன்கள் (புரோப் பேன், பியூட்டேன், ஈதர்கள்) நீலநிறத்துடன் எரி கின்றன. வளிம நிலை எரிதலும், வெடித்தல் வினைகளும் வினை நடைபெறும் கலன் முழுதும் சீராக நடை பெறுகின்றன. ஒரு கலனில் இருக்கும் வளிமக் கலவையுள் சிறு பொறியை அல்லது பிழம்பைக் கொண்டு பற்றவைத்தால் அது கலவையுள் மிகச் சீராகச் செல்கிறது. பெட்ரோல் எந்திரங்கள் இவ்வாறே இயங்குகின்றன. இந்த எரிதல் அலை சராசரியான வேகத்தால் பரவுகிறது. இது 1 அடி வினாடி (0.38168) அளவு ஹைட்ரோகார்பன் களிலும், காற்றுக்கு 20-30 அடி/வினாடி (6-9 மீ |M) அளவிலும் இருக்கிறது. காற்றாடி கொண்டு சுழற் றினால் எரிதல் அலை அதிகரிக்கின்றது. எரிதல் கலவையை மிகக் குறைந்த வெப்பநிலை யில் வினையூக்கியைப் பயன்படுத்தி எரிக்கலாம். இதனால் மூலக்கூறுகள் வினையூக்கியின் மேல் படி கின்றன. அங்கு இவை அணுக்களாகவும், தனித் தியங்கு உறுப்புகளாகவும் பிரிவடைகின்றன. இதற்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றைச் சாதாரண வெப்ப நிலையில் பிளாட்டின உலோகத்தின் மேல் இணையும் வினையினைக் கூறலாம். இவ்வினையில் வெப்பம் உண்டாவதால் பிளாட்டினம் ஒளிர்கின்றது. நிரலியல். எரிதலின் நிரலியல் (spectroscopy of combustion) பிழம்பைப் பற்றி அறிய உதவும் ஓர் ஆய்வுக் கருவி ஆகும். சுவாலையில் எரியும் பொருள் களைப் பொறுத்து ஒளி உட்கவர்வது அல்லது உமிழ் வது நடக்கின்றது. பிழம்பு நிரலியல், எரிதலின் வினைவழி முறை களையும் பிழம்பு வெப்ப நிலைகளையும் அறியப் பயன் படுகிறது. பல்வேறுவிதமான நிரலியலில் தொழில் நுட்பங்கள் தேவைகளுக்கேற்ப உள்ளன. நேர் கோட்டு எதிர்ப்பாடு (line reversal) என்னும் முறையில் வெப்பத்தால் சூடுபடுத்தப்பட்ட உலோக அணுக்களி லிருந்து வெளிப்படும் ஒளிச் சிதறலின் அளவு கறுப்பு விளக்கு இழையிலிருந்து வெளிப்படும் ஒளிச் சிதற லோடு ஒப்பிடப்பட்டு, வெப்பநிலை அறியப்படுகிறது. ஒளி வடிப்பான்களைப் பயன்படுத்திச் சிறு ஆய்வுக் கருவியால் இதை அறியலாம். இதற்கு, மிகக் குறைந்த அளவு சோடியம் உப்புகளை வளிம அல்லது நீர்ம எரிபொருள்களுடன் சேர்த்துக் சேர்த்துக் கண்டுபிடிப்பதைச்