282 எரிதல் திசைவேக அளவீடு
282 எரிதல் திசைவேக அளவீடு r XU S = = Usin x 2 r² + h³ இந்தச் சமன்பாட்டின் மூலம் திசைவேகம் கணக்கிடப் படும். அனைத்து அமைப்பும் சரிவர இருந்து தீப்பிழம்பு முறையான மாதிரியாக இருப்பின் வளிமம், அனைத் துப்பகுதிகளிலும் ஒரே வேகத்தைக் கொண்டிருக்கும்; எரிவிளக்கின் அச்சுக்கு இணையாகப் (paralle ) பாதையில் வெளிப்படும்; முக்கியமாக வினை மண்டலம் மிகமிக மெல்லியதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் இது இயல்வதன்று. தீப்பிழம்பின் எல்லைப்பரப்பு மிக மெல்லியதாக அமையாதது பெரும் பிரச்சினையேயாகும். பரவளைய வடிவ (parabolic) முறையில் கலவை பாய்வது, பிழம்பின் நுனி சீரற்று இருப்பது, எரி விளக்கின் விளிம்பில் வெப்பம் தங்குவதால் ஏற்படும் விளைவு ஆகிய பிரச்சினைகளை ஈடு செய்யும் பொருட்டுச் சில திருத்தங்களும், காரணிகளும் கருத் திற் கொள்ளப்படும். சிரிலியன் (schlieren) மிகுவேகப் புகைப்பட முறை என்ற நுட்ப அமைப்பால் தீப்பிழம் பின் கூம்பு அளவிடப்படும்போது தீப்பிழம்பின் வேகம் து சரியாகக் கணக்கிடப்படும். வேக அளவீட்டு நுட்பம். நகரும் தீப்பிழம்பின் எரிதிசைவேகத்தை அளவிட வெவ்வேறான கருவி கள் உள்ளன. திறந்த வெளிக்குழாய் மூலம் செலுத் தப்படும் தீப்பிழம்புகள், நிலையாக இருக்கும் எரிவளி மங்களின் வழியாகவும் செல்லும். அப்போது திடீர் குளிர்வித்தல். வெப்பச் சலனம், ஒலி வேக விளைவு களுக்கு உட்படுவதால் அளவீடு செய்யும்போது தவறு ஆகியவை ஏற்படக் கூடும். தீப்பிழம்பின் முன்மண்ட லத்தில் பின்புறமாக இருக்கக்கூடிய எரிந்தவளிமங்கள் விரிவு அடையலாம். இந்த விரிவாக்கத்தால் திசை வேகம் பெருக்கம் அடையக்கூடும். மேற்கூறியவகையில் உள்ள தீப்பிழம்பின் திசை வேகத்தை அளவிட மிகுவேகப் புகைப்பட நுணுக்கம் பயன்படுவதுண்டு. இம்முறையில் புகைப்படக் கருவி யில் இருக்கக்கூடிய சிறு புழை அல்லது கீற்று (slit) மூலம் தீப்பிழம்பின் ஆரம் மிகுவதைக் காணலாம். புகைப்படச்சுருள், கீற்றைக் கடக்கும்போது தீப் பிழம்பின் ஆரம் நோக்கப்படுகிறது. வளிமத் தின் கன பரிமாணம் மிகும்போது அதன் ஆரம் T என்பது, எரிவதால் I, என்ற அளவுக்கு அதிகரிக் கிறது. இந்த வேறுபாடு SE என்ற திசை வேகத்தில் நகரும் புகைப்படச் சுருள் மூலம் அளவிடப்படுகிறது. Ss = mSr tan e என்ற சமன்பாட்டின்மூலம் தீப்பிழம்பின் திசைவேகம் புகைப்படச் சுருள் N msp. Ss படம் 2 கீற்று கணக்கிடப்படுகிறது. m என்பது மிகக் குறைவான வேகத்தில் நகரும் புகைபடச் சுருளின் திசை வேகத்தை விரைவுபடுத்தும் காரணியாகும். C என் பது விரிவடையும் தீப்பிழம்பு புகைப்படச் சுருளின் அச்சுடன் ஏற்படுத்தும் கோணமாகும். விரிவாற்றல் விகிதம் (expansion ratio) E எனக் கொண்டால் கன பரிமாணத்தின்படி, E = 3 X f1 எனவே விரிவாக்க விகிதம் எரிந்த வளிம அடர்த்திக் கும் 1. எரியாமல் இருக்கும் வளிம அடர்த்திக்கும் 1. உள்ள விகிதத்தைப் பொறுத்து இருக்கிறது எனத் தெளிவாகிறது. ஹைட்ரோ கார்பன் கொண்ட எரிகலவையின் எரியும் திசைவேகப் பெரும (maximum) அளவு, வளி மண்டலத் தட்பவெப்ப நிலையில் 25-100 செ. மீ] நொடி என்ற அளவில் வேறுபடும். பொதுவாக கேசொலின் (gasoline) எரி பொருள்களின் எரிதல் திசைவேகம்35 செ.மீ/நொடி இருக்கும். கே.ஆர்.கோவிந்தன்