{{rh}284 எரிபொருள் உட்செலுத்துதல்}}
284 எரிபொருள் உட்செலுத்துதல் வடிகட்டிகள் நீர்த் திவலைகளை அகற்றுவதில்லை. மேலும் 76×10-6 மீ 152×10-6 மீ அளவுடைய தூசுகள் மட்டுமே நீக்கப்படும். மேற்காணும் வகை களன்றி உலோகத்தகட்டு வகை, இழை, காகிதச் சுருள், மட்பாண்ட வகை ஆகியவற்றால் ஆன வடி கட்டிகளும் பயன்படும். இருப்பினும் காகிதத்தால் ஆன வடிகட்டிகளே மிகவும் புகழ் பெற்றவை. -கே.ஆர்.கோவிந்தன் எரிபொருள் உட்செலுத்துதல் வாகனங்களை பேருந்து, லாரி போன்ற கனரக இயக்கப் பயன்படும் உட்கனற்பொறியில் (அழுத்த எரிபற்றுப் பொறி) முதலில் காற்று மட்டும் உள்ளிழுக் கப்பட்டு, அழுத்த வீச்சின் இறுதியில் எரிபொருள் தெளிக்கப்படுகிறது. நுண்துகள்களாகத் முழுதும் எரிவதற்கு ஒவ்வோர் உருளையிலும் சுழற்சியின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவு எரிபொருள் நுண்துகள்களாகச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவு எரிபொருளை உட்செலுத்தும் ஓர் அமைப்பின் பெயரே எரிபொருள் உட்செலுத்தி (fuel injection). ஆகும். இது உட்கனற் பொறியின் மிக முக்கியமான உறுப்பாகும். நோக்கம். அழுத்த எரிபற்றுப் பொறியில் எரி பொருள் உட்செலுத்தும் இயக்கம் திறம்பட இயங்கப் பின்வரும் முறைகள் நிறைவேற்றப்பட வேண்டும். சுமை பொறியுடன் இணைக்கப்படும் வேலைச் சுமைக் கேற்ப, குறிப்பிட்ட அளவு எரிபொருள் ஒவ்வோர் உருளையினுள்ளும் அளவிட்டுச் செலுத்தப்பட வேண்டும். அதாவது அதிகமான வேலைச் (load) இணைக்கப்பட்டால் அதிகமான எரிபொரு ளும், குறைந்த வேலைச்சுமை ணைக்கப்பட்டால் குறைவான எரிபொருளும் அளவிட்டுச் செலுத்தப்பட வேண்டும். அளவிட்டுச் செலுத்தப்படும் இந்த எரிபொருள். ஒவ்வொரு சுழற்சியிலும் ஒவ்வோர் உருளையிலும் மாறாமல் ஒரே அளவாக இருக்கவேண்டும், பொறியின் சுழல் வேகமாறுதல்களிலும் ஒவ் வொரு சுழற்சியிலும் குறிப்பிட்ட நேரத்தில் எரி பொருள் செலுத்தப்பட வேண்டும். பொறியின் வேக மாறுபாடுகளுக்கேற்ப எரிபொருளின் அளவீடு கட்டுப் படுத்தப்பட வேண்டும். தேவைப்படும் இயல்புகளுக்கேற்ற வகையில் எரி பொருள் நுண்துகள்களாக்கப்பட வேண்டும். எரிகலம் (combustion chamber) முழுதும் எரி பொருள் சம அளவில் தூவப்படுதல் வேண்டும். எரிபொருள் செலுத்துதலின் தொடக்கத்திலும், போதிய அளவு செலுத்தப்பட்ட பின் முடிவிலும் எவ்விதமான கசிவும், எரிபொருள் உட்செலுத்தியில் இருக்கலாகாது. அழுத்த எரிபற்றுப் பொறியில் எரிபொருள் உட் செலுத்துதல். அழுத்த எரிபற்றுப் பொறியில் எரி பொருள் உட்செலுத்துதல் காற்றுடன் செலுத்துதல், காற்றின்றிச் செலுத்துதல் என இரண்டு வகைப் படும். காற்றுடன் செலுத்துதல். இவ்வகை இயக்கத்தில் வேசுத்துடன் இயங்கும் அதிக அளவு அழுத்தமுள்ள காற்றினால், எரிபொருள் நுண்துகள்களாக்கப்பட்டு எரிகலத்தினுள் செலுத்தப்படுகிறது. இவ்வாறு வெப்ப ஆலையினுள் நுண்துகள்களாக அளவிடப் பட்ட எரிபொருள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அதிக அழுத்தமுள்ள காற்றுடன் செலுத்தப்படுவதால், எரிபொருள் எரிகலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சென்று முழுதுமாக எரியும். அதிக அழுத்தமுள்ள காற்றினைச் செலுத்தக் காற்றழுத்திச் செலுத்தி (blower) ஒன்று தேவைப்படுகிறது. இக்காற்றுச் செலுத்தி, தான் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பொறி யின் வணரித் தண்டிலிருந்து (crank shaft) எடுத்துக் கொள்ளும். மேலும் நெம்புருளுடன் (cam) இணைக் கப்பட்டு இயங்கும் எரிபொருள் எக்கி (fucl pump) ஒரு குறிப்பிட்ட அளவு எரிபொருளை எரிபொருள் அடைப்பிதழ் வழியாக எரிபொருள் உட்செலுத்திக் குள் செலுத்துகிறது. காற்றழுத்திச் செலுத்தியி லிருந்து வரும் அதிக அழுத்தக் காற்று இணைப்பு டன் இந்த அடைப்பிதழ் எப்போதுமே தொடர்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த அடைப் பிதழ் மூலம் எரிபொருளும் அதிக அழுத்தக் காற்றும் செலுத்தப்படும். இதனால் கனற்சிக் கலத்துக்கும் இந்தக் காற்று செல்லும். இதனால்தான் இம்முறை காற்றுடன் செலுத்துதல் என்று கூறப்படுகிறது. காற்றின்றிச் செலுத்துதல். இவ்வகை இயக்கத் தில், தேக்கி வைக்கப்பட்ட கலத்திலிருக்கும் எரி பொருள் முதலில் எரிபொருள் எக்கியின் மூலம் ஒரு வடிகட்டியின் வழியாகக் குறைந்த அழுத்தத்தில் செலுத்தப்படும். இங்கிருந்து வெளியாகும் குறைந்த அழுத்தத்திலுள்ள எரிபொருள் இரண்டாம் நுண் ணிய பெரிய வடிகட்டிக்குச் செலுத்தப்படும். இங்கு மீதமுள்ள எல்லாத் தூசிகளும், மிதப்புக்களும் நீக்கப் படும். இவ்வகை இயக்கத்தில் தூசிகள் முழுதுமாக நீக்கப்பட வேண்டும். ஏனெனில் எரிபொருள்