எரிபொருள் மின்கலம் 291
எரிபொருள் மின்கலம் 291 இயல்புகள் பெரிதும் உதவும். இருப்பினும் இதன் விலை அதிகம்; எளிதில் தீப்பற்றக்கூடியது. டீசல். இது நில எண்ணெயிலிருந்து, வேதியியல் முறைப்பிரிகையின்போது அதிகளவு எடையுடன் ஒதுக்கப்படும் எளிதில் ஆவியாகாது. எண்ணெய், . விலை குறைந்தது. மண்ணெண்ணெயும் ஒருவகை வளிம எண்ணெயும் நயமாகக் கலக்கப்பட்டுக் குளிர் விக்கப்பட்ட கலவையான எண்ணெயே 'டீசல்' ஆகும். 'டீசல் நிலத்திலிருந்து பீச்சப்பட்டு, மாறா நிலையில் செப்பமுறாத வேதியியல் முறைப்படி வினையூக்கியின் உதவியால் வினைக்கூறுகளாக்கப் படும்போது கிடைக்கப்பெறும். இது அழுத்த எரிபற்றுப் பொறியிலும் கொதிநிலை உலைகளிலும் பயன்படும். அழுத்த எரிபற்றுப்பொறியியல் அறிஞர், 'டீசல்' என்பவரால் பயன்படுத்தப்பட்டதால் இது இப்பெயர் பெற்றது. களை உலை எண்ணெய். இது கொதிகலனின் எரிபற்று தலுக்கும், வேதியத்தொழிற்சாலை, இரும்புக்கம்பி வெப்பப்படுத்தி நீட்டி, மடக்கி உற்பத்தி செய்யும் உருக்கு ஆலைகள் போன்றவற்றின் உலை களில் தீப்பிழம்பாக உட்செலுத்துவதற்கும் (flame injection) பயன்படும். இது வணிகத்துறையில் ஒரு குறியீட்டு எண்ணால் குறிக்கப்படுகிறது. இவ்வெண் அதிகமாக இருந்தால் அது எளிதில் நுண்துகளாகும் தன்மையைக் குறிக்கும். புகையற்ற கனற்சிக்கு உட் படுத்துவது கடினம். அதன் பாகுத்தன்மையும், ஒப்பு அடர்த்தியும் அதிகம். உலையில் உட்செலுத்துவதற்கு முன்னர் சற்றே சூடாக்கப்படுதல் அவசியம். எரிபொருள் உலையில் பயன்படுத்தப்பட்டு நேரிடையாக வெப்பத்தை வெளிப்படுத்தும். சில சமயம் கொதிகலன்களில் பயன்படுத்தப்பட்டு வெளிப் படும் வெப்பம் நீராவியை உற்பத்தி செய்யப் பயன் படலாம் அல்லது உட்கனற்பொறி போன்ற அமைப்பில் கனற்சிப் பொருள்களின் வெப்பநிலை அழுத்தம் இவற்றை அதிகரிக்கத் தேவையான பொருளாகவும் பயன்படலாம். திண்மப் பொருள்களின் கரி வகையினைத் தேர்ந்தெடுக்கும்போது வெளிப்படும் வெப்ப அளவுக்கு எவ்வளவு விலை என்ற வகையாலும், வடிவ அளவாலும், நீர்மங்களின் அளவுகளில் தேங்கும் சாம்பல்களின் அளவுகளாலும், வெளிப் படும் புகையின் தன்மைகளாலும் இதை வகைப் படுத்தலாம். நீர்ம வகை எரிபொருள்கள் பெரும்பாலும் பெட்ரோலிய வகையினைச் சார்ந்தவை. தொன்மைக் காலத்தில் கரி எண்ணெய் (தாரிலிருந்து பிரிக்கப்படும் கெரஸின்) பயன்படுத்தப்பட்டது. நீர்ம வகை எரி பொருளைத் தேர்ந்தெடுக்கையில் அதன் வெப்ப அளவு பாய்மத் தன்மை (iuidity) கொதிநிலை (boiling point), கந்தகம் போன்ற தூசுகள், நீர்மங்கள் படிவுகள். தங்காது. இருத்தல் ஆகி ஆகிய வற்றைக் கொண்டு பயனுறு வகையில் முடிவெடுக் கலாம். காண்க: டீசல் எண்ணெய், எரிபொருள் எண்ணெய், காசொலின். வளிம எரிபொருள்களில் இயற்கைவளிமம் (natural gas) பெட்ரோலியம், மீத்தேன் ஆகியவற்றிலி ருந்து பிரித்தெடுக்கப்படும் வளிமங்கள் சிறப்பானவை. புகழ் பெற்றவை. மேலும் கரி அடுப்பு வளிமம், எரிபொருள் வளிமக் கலவை (carburetted mixture) நீர்வளிமம் போன்றவை கரி, நீராவி பெட்ரோலிய எண்ணெயிலிருந்து. பிரித்தெடுக்கப்படுகின்றன. இவை யும் வியத்தகு பயன்களை அளிக்கின்றன. மேலும் தொழிற்சாலைகளில் பல்வேறு உற்பத்தி முறைகளில் வெளிப்படும் துணை விளைவு (byproduct) வளிமங்களும் உண்டு. இதில் கரி அடுப்பு வளிமம், சூளைவளிமம் (blast furnace gas) ஆ கியவை குறிப் பிடத்தக்கவை. மேலும் சிவக்க வெப்பமூட்டப்பட்ட கரியின் ஊடாகக் காற்றைச் செலுத்தும்போது உண்டாகும் தோற்றுவிக்கும் வளிமமும் (producer gas) தனித்தன்மை வாய்ந்தது. காண்க, எரிபொருள் வளிமம். எரிபொருள் மின்கலம் ஓர் எரிபொருளின் வேதி ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்றும் மின்கலம் (electric cell) எரி பொருள் மின்கலம் (fuel cell) எனப்படும். இம்மின் கலத்தின் ஆற்றலை வெப்பத்தால் கிடைக்கும் மின் சாரத்தின் ஆற்றல் அளவை விட அதிகரிக்கச் செய்ய லாம்; பின்னர் சொன்ன முறையில் வேதிவினையில் எரிதலின் மூலம் வெப்பம் உண்டாக்கப்படுகிறது. இவ்வெப்பம் வெப்ப எந்திரத்தால் பகுதியளவில் எந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது. இது மின் ஆக்கியை (generator) இயக்கப் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் நேரடி மின் ஆற்றலை மாறு மின் ஆற்றலாக (alter- nating current) மாற்றும்போது மேலும் வெப்பம் வீணாகிறது. கொள்கையளவில் பயன்படுத்தப்படும் வினைப் பொருள்கள் பலவாக இருப்பினும் பொது எரி பொருள் மின்கல வினை என்பது ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ணையும் வினையாகவே கருதப் படுகிறது.