292 எரிபொருள் வளிமம்
292 எரிபொருள் வளிமம் Hg(வ) + 40 (வ] → H, O(நீ) 25*(இல், ஒரு வளிமண்டல அழுத்தத்தில் அதாவது நியம வெப்ப, அழுத்தங்களில் இவ்வினையின் கட்டுறா ஆற்றல் (AG)-56.69 கிகலோ மோல் அதா வது 2,37,000 ஜீல்கள்/மோல். ஆக இருக்கிறது. நூறு விழுக்காடு நன்கு இயங்கக்கூடிய ஒரு கால்வேனிக் மின்கலத்தில் இவ்வினையை நடைபெறச் செய்தால் 1.23 வோல்ட் மின்சாரம் கிடைக்கிறது. நடைமுறையில் இம்மீன்கலங்கள் 73-90 விழுக்காடு திறமையுள்ளனவாகவும், 0.9-1.1 வோல்ட் உற்பத்தி செய்வனவாகவும் உள்ளன. எரிபொருள் மின்கலங்கள் ஆனால் மின் 200-500 வாட் மின்னாற்றல் உடையனவாகவும், 50-100MA/செமீ: மின் அடர்த்தி உடையனவாகவும் உள்ளன. மேலும் உற்பத்தி 15kw அளவு மின்சாரம் செய்யும் மின் சுலங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. 10kw அளவு உற்பத்திக் கலங்களும் தயாரிக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டிருக்கும் அறிவியல் முன்னேற் றத்தில் எரிபொருள் மின்கலன்களின் வகைகளை வகைப்படுத்துவது கடினமாகும். ஆனால் இவற்றில் மிக முக்கியமானதும் பலராலும் பயன்படுத்தப் படுவதும் வழிவழியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரஜன் - ஆக்சிஜன் நேரடி அல்லது மறைமுக எரிபொருள் மின்கலமாகும். நேரடிமுறையில் ஹைட்ர ஜனும், ஆக்சிஜனும் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன.மறைமுக முறையில், பல்வேறு விதமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. இதில் நேர்மின்முனை, எதிர் மின்முனைகளில் நடைபெறும் வினைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2H, + 40H O. + 2 H, O + 4e- 40H-(எதிர் மின்முனை) 4H,O + 4e- (நேர் மின்முனை) மின்பகுளிகளில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியன குறைவாகவே கரைவதால் வினை மின்முனை, மின் பகுளி இருதளமுகப்புகளுக்கிடையே நடைபெறுகிறது. இதனால் அதிகமான பரப்புத் தேவைப்படுகிறது. இதைத் துளையுள்ள பொருள்கள் மூலம் பெறலாம். இது மின்பகுளி, வளிமம் ஆகியவற்றிற்கிடையே தொட்டுக் கொண்டிருக்கும் பரப்பை அதிகரிக்க வேண்டும். வினையை ஊக்கப்படுத்த வேண்டும். மின்முனையின் மேற்பரப்பில் மெல்லிய மின்பகுளிப் படலத்தை ஏற்படுத்த வேண்டும். த.தெய்வீகன் எரிபொருள் வளிமம் வெப்பமூட்டப் பயன்படும் வளிம எரிபொருள். எரி பொருள் வளிமம் (fuel gas) எனப்படுகிறது. இவ் வளிமம் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து குழாய்களின் மூலம் தேவைப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும். எரிபொருள் வளிமத்தில் பின்வருபவை குறிப் பிடத் தகுந்தவை; அவை, நிலத்தில் இருந்து வெளிப் படும் இயற்கை வளிமம், நிலக்கரி வளிமம் (coal gas), நீர்மமாக்கப்பட்ட வளிமம் (liquified gas), எண்ணெய் வளிமம் (oil gas) கல் கரியடுப்பு வளிமம் (coke oven gas), உலை வளிமம் (producer gas), நீரக வளிமம் (water gas),சூளை வளிமம் (blast furnace gas). கலவை வளிமம், சாக்கடை வளிமம் (sewage gas), கூட்டு வளிமம் பல்பொருள் செயற்கை அல்லது (synthesis gas) என்பன ஆகும். எரிபொருள் வளிமத்தில் முழு அளவிலோ பகுதி யாகவோ பின்வரும் கனற்சியுறும் (combustible) பொருள்கள் இருக்கும். அவையாவன, ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, ஈத்தேன், புரோப்பேன். பியூட்டேன், எண்ணெய் ஆவி. இயற்கை வளிமம். நிலத்தின் அடியிலிருந்து தானாக இயற்கை மாறுபாடுகளால் அல்லது பெட்ரோலிய நிலவியல் காரணமாக வெளிப்படும் எரிவளிமம் இயற்கை வளிமம் எனப்படும். இவை எளிதில் கனற்சியுறும் தன்மை கொண்டவை. இருப் பினும் தீப்பற்றாக் கலவைகளான கார்பன் டைஆக் சைடு, நைட்ரஜன், ஹீலியம் போன்றவையும் இருக் கின்றன. கேசொலினை உலர்வளிமம் (dry gas), ஈர வளிமம் (wet gas) என்று வகைப்படுத்துவர். இந்த இயற்கை வளிமம் தூய்மையாகவும். எளிதில் கொண்டு செல்லத் தக்கதாகவும் உயர் வெப்ப அளவினைக் கொண்டதாகவும், அதிக வெப்பநிலை யுடையதாகவும் இருக்கும். இதனை எளிதில் பயன் படுத்தலாம். கரி வளிமம். இது கரியினைக் காற்றுடன் சேர்த்து வெப்பமூட்டிச்சிதைத்துக் காய்ச்சி வடித்தல் (destru- ctive distillation) மூலம் வெளிப்படும் வளிமம் ஆகும். இம்முறை கரியாக்கம் (carbonisation) எனப்படு கிறது. பயன்படுத்தப்படும் கருவி, வெப்பநிலை உற்பத்தி ஆகியவற்றைப் பொறுத்துப் புகைமிகு நிலக்கரி (bituminous coal) பயன்படுத்தப்படுவ தானால் இவ்வகை வளிமம் வெவ்வேறு கலவைகளில் கிடைக்கிறது. காய்ச்சி வடித்தலில் பயன்படுத்தப் படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கொள் கலத்திலிருந்து (retart) நேரிடையாகவே இவ்வகை வளிமங்கள் வருவதால் இவற்றில் தார், கழிவு