பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிமலை 293

எரிமலை 293 எண்ணெய், அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகியவை இருக்கக்கூடும். நீர்மமாக்கப்பட்ட வளிமம். இவை இயல்பான வளி மண்டல அழுத்த - வெப்பநிலைகளில் வளிம நிலையில் இருக்கும். ஆனால் இப்பெட்ரோலிய வளிமங்களை மிகு வெப்ப அழுத்த நிலையில் நீர்மம் ஆக்கி விடலாம். எளிய வீடுகளில் அடுப்புகளில் (stove) இவை பயன்படுத்தப்படுகின்றன. லால் துணை இவை எண்ணெய் வளிமம். உலை எண்ணெயை மிகு வெப்பப்படுத்துவதால் பிரித்தெடுக்கப்படும் வளிமங் கள் எண்ணெய் வளிமங்கள் எனப்படும். எண்ணெய் தூய்மைப்படுத்தப்படும்போது வெப்பப் பதப்படுத்த (thermal processing) வெளிப்படும் விளை பொருளே எண்ணெய் வளிமமாகும். முதலில் எண்ணெய் தூய்மைப்படுத்தும் கருவிகளில் வெப்பமூட்டவே பயன்படுத்தப்பட்டன. இவ்வளிமத் தில் மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன், பியூட்டேன், எத்திலின், புரோப்பிலின் ஆகியவை உள்ளன. எண்ணெயை வெப்பப் பதனிடல் (heat treatment) செய்து வளிமமாக்கும்போது வெளிப்படும் முதன்மை யான எண்ணெய், எரிவளிமங்களில் குறிப்பிடத் தகுந்தது. இது அதிக அளவு வெப்ப அளவினைக் கொண்டிருக்கும். கரியடுப்பு வளிமம். எரி து கொள்கலன் கரி வளிமம் போலவே தயாரிக்கப்படுகிறது. உலை வளிமம். சிறிது உயரத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டுள்ள கரிப்பாளத்தினூடே நீராவி காற்று ஆகியவற்றை விசையுடன் செலுத்தும்போது உலை வளிமம் உண்டாகிறது. இதில் நைட்ரஜன் மிகு அளவில் இருக்கும். மேலும் இதில் வெப்ப அளவு குறைவாகவும் வினையுறாப் பொருள்கள் மிகுதி யாகவும் இருக்கும். இவ்வளிமம் வாசனையற்று இருக் கும். இதில் 25% கர்ர்பன் மோனாக்சைடும் கலந்திருக் கும். முன்பு மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய தொழிற்சாலை வளிமமாக இருந்த இவ்வளிமம் வியத்தகு பயன்தரக்கூடிய பல எரிவளிமங்கள் தற் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையால் நடைமுறை யில் பயன்படுத்தப்படுவதில்லை. நீரக வளிமம். இது நீல வளிமம் (blue gas) என்றும் குறிப்பிடப்படுகிறது. வெப்பத்தோடு ஒளி விடுகிற கார்பனுடன் நீராவி இணைவதால் ஏற்படு வது நீல வளிமம் (நீர்) எனப்படும். இந்தச் செய் முறை தொடர்ச்சியாக இல்லாமல் இடைவிட்டு செயல் முறைகளுடன் வெவ்வேறு நடைபெறும். அச்செய்முறைகளில் ஒன்று ஊதுதல் பகுதி (blow period) ஆகும். இப்பகுதிச் செய்முறையில் எரி பொருள், விசையுடன் ஊதப்படும் காற்றின் மூலம் வெப்பப்படுத்தப்படுகிறது. பிறிதொரு செயற்கை யான வளிமம் தோற்றுவிக்கும் முறையில் வெப்பத் துடன் ஒளி விடுகின்ற எரிபொருளின் பாளத்தின் ஊடே நீராவி செலுத்தப்படுகிறது. இவ்விரு செய் முறைகள் அடுத்தடுத்தும் தொடர்ந்தும் நடத்தப் படும். மிகுதியான ஹைட்ரஜன், கார்பன் மோனாக் சைடு கொண்டிருக்கும் இச்செய்முறையில் தோன்றும் தீப்பிழம்பு நீல நிறத்தில் இருப்பதால் இதற்கு நீல வளிமம் என்று பெயர் நீராவியினால் தோற்றுவிக்கப்படுவதால் இதற்கு நீராவி வளிமம் என்றும் பெயர். எரி-வளிமம்,நீல வளிமமும் எண்ணெய் வளிமமும் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டுப் பிறகு கலக்கப் படுவதால் வெளிப்படும் கலவை எரி வளிமம் ஆகும். சூளை வளிமம். இது தேனிரும்பு தயாரிக்கப்படும் சூளையிலிருந்து துணை விளைபொருளாக வளிப்படும் எரி வளிமம் ஆகும். இதில் நிலக்கரி பகுதியளவு கனற்சிக்குள்ளாகும்போது இவ்வளிமம் வெளிப்படுகிறது. இவ்வளிமம் கனற்பொறிகளிலும் எரி அடுப்புகளிலும் எஃகு தொழிற்சாலைகளிலும், கொதிகலன்களிலும் செப்பமற்ற (crude) வெப்பப் படுத்தலிலும் பயன்படுத்தப்படுகிறது. எரிமலை உள்ள -கே.ஆர்.கோவிந்தன் பாறை உயர் வெப்ப கி புவியின் உள்ளே அழுத்தத்தால் நீர்ம - வளிம - ஆவி நிலையடைந்து, அழுத்தம் தாங்காமல் புவியின் மேற்பரப்பிலுள்ள வெடிப்பு, பிளவு அல்லது சிறு குழாய்போன்ற துளை வழியே பீறிட்டு வெளிவருகிறது. இதுவே எரிமலை (volcano) எனப்படுகிறது. சில நேரங்களில் உருகி யுள்ள பாறைகளின் தன்மை, அடங்கியுள்ள கனிமங் களின் வேதி உட்கூறு, மேற்பரப்பிலுள்ள பாறை களின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வெளி உமிழ்வு எரிமலை தோன்றக்கூடும். மேலும் பாறைக் குழம்பில் அடங்கியுள்ள வளிமங்களின் தன்மையைப் பொறுத்து எரிமலைகள் உள் உமிழ்வு எரிமலை, உமிழ்வு என வகைப்படுத்தப் வெளி பட்டுள்ளன. எரிமலை புவியைவிடச் சந்திரன், செவ்வாய், வியாழன். வள்ளி ஆகிய கிரகங்களில் எரிமலைகளும் அதனைச் சார்ந்த பொருள்களும் மிகுதியான அளவில் உள்ளன என்று கோள்களின் ஆய்வு கின்றன. முடிவுகள் தெரிவிக் புவி ஒரு திண்மையான பிழம்பாகும். இதன் வெவ்வேறு ஆழங்கள் குறிப்பிட்ட வெப்ப-இயக்கச்