பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh}298 எரிமலைக்‌ கண்ணாடி}}

298 எரிமலைக் கண்ணாடி எரிமலைக் கண்ணாடி பாறைக்குழம்பு, எரிமலை வழியாகப் புவியின் மேற் பரப்பிற்கு எரிமலைக் குழம்பாக வெளியேறி வெப்பத் பலவிதப் தாழ்வால் குளிரும்போது உண்டாகும் பாறைப் பொருள்களில் எரிமலைக் கண்ணாடியும் (volcanic glass) ஒன்று. தோற்றத்தில் கண்ணாடியை. ஒத்த ஒளிப்பிரதிபலிப்புத் தன்மையும், வழவழப்பும், ஒளி ஊடுருவும் தன்மையும் கொண்டுள்ளமையால் இது எரிமலைக் கண்ணாடி எனப் பெயர் பெற்றது. இது அனற்பாறைகளில் ஒருவகை ஆகும். அனற் குழம்பு திடீரென்று குளிரும்போது இது உருவா கிறது. அனற்குழம்புப் பாறைகளில் அடங்கியுள்ள தனிமங்களின் அமைப்பு, அதன் நுண் இழைமை (texture) இவற்றைக் கொண்டு பலவகைப் பாறை களாகப் பிரிக்கலாம். இவ்வகை அனற்பாறைகளில், அடங்கியிருக்கும் தனிமங்கள், கண்களுக்குப் புலப் படும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் எரிமலைக் கண்ணாடி இதற்கு விதிவிலக்காகும். எரிமலைக் கண்ணாடியில் இருக்கும் தனிமங்களை வெறுங்கண் ணால் பார்க்க இயலாத அளவிற்கு, மிக நுண்ணிய தாக இருப்பதே இதன் சிறப்புத் தன்மைக்குக் காரண மாகும். எரிமலைக் கண்ணாடி பொதுவாக, பாறைக் குழம்பு குளிரும்போது, உள்ளீட்டுப்பாறைகளையும் வெளி உமிழ் பாறைகளை யும் உண்டாக்குகிறது. பாறைக் குழம்பு புவிக்கு உட் புறத்திலுள்ள வலிமையற்ற பகுதிகளையும், முன்னைய பாறைச் சந்துகளையும், விரிசல்களையும் பயன் படுத்தி, பின்பு வெப்பநிலைத் தாழ்வால் குளிரும் போ து, பாறைக் குழம்பின் வெப்பநிலை படிப்படி யாகக் குறைகிறது. இதனால் ஏற்படக்கூடிய படிக மாதல் நிகழ்வு (crystallisation) மெதுவாக நடை பெறுவதால் தனிமங்கள் பொதுவாகப் படிக அமைப் பில் படிகின்றன. ஆனால் பாறைக்குழம்பு, உமிழ்நேரத் தில் மிகவிரைவில் குளிர்ச்சியடைவதால் கண்ணாடி அமைப்பில் விரைவாகக் குளிர்ந்து அதன் அமைப்பை எரிமலைக் கண்ணாடி அடைகிறது. எரிமலைக் கண்ணாடியில் ஆக்சிஜன் அதிக அள விலும் சிலிக்கா 35-75%-உம், அலுமினியம் ஆக்சைடு 12-18%-உம், ஃபெர்ரஸ் ஆக்சைடு, ஃபெர்ரிக் ஆக்சைடு, மாங்கனீஸ் ஆக்சைடு, சோடியம் ஆக் சைடு, கால்சியம் ஆக்சைடு, பொட்டாசியம் ஆக் சைடு முதலியன மிகக் குறைந்த அளவிலும் இருக்கும். உயர் பிசுப்புமை (viscosity) நிலைமிக்க பாறைக் குழம்பிலிருந்து சிலிக்கா கலவை அதிகமாயிருக்கும் சமயத்தில், திடீரென்று குளிர்ச்சியடையும்போது எரி மலைக் கண்ணாடி உண்டாவதாக வேறுவிதமாக விளக்கலாம். பாறைக்குழம்பு திடீரென்று உடன் குளிர்வதால் ஏற்படக்கூடிய பாறைத் தொகுதிகளின் ஓரப்பகுதிகளில் பாறைக் கண்ணாடி அதிகமாகத் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கண்ணாடிப் பொருள்கள், பொதுவாக வெளி உமிழ் பாறைகளில் அதிகமாகவே இருக்கும். இருக்கும். கார அனற்பாறைகளில் கண்ணாடிப் பொருள் குறை வாகவே காணப்படும். கார வகைப் பாறைக்குழம்பின் பிசுப்புமை நிலை, மிகக்குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் அமில அனற் குழம்புப் பாறைகளில், கண்ணாடி மிக முக்கிய பொருளாக அமைந்திருக்கும். ரயோலைட், ட்ராக்கைட் போன்ற வெளி உமிழ் அனற்பாறைகளில் ஏறக்குறைய முழுமையாகக் கண்ணாடிப்பொருள்கள் ஒரு சில சிறிய படிகத் தனிமங்களுக்கிடையே அமைந்திருக்கும். எரிமலைக் கண்ணாடி ஏற்படும்போது கண்ணா டிப் பொருள்களின் குளிரும் தன்மை, மிகச்சிறிய ஒழுங்கான அடுக்கு வளைவுகளாக நுண் உருப் பெருக்கி மூலம் தென்படுகிறது. நுண் உருப்பெருக்கி யில் எரிமலைக் கண்ணாடியை ஆராயும்போது, வெண்மைப் பொருளாகவும், ஒளிபிரதிபலிப்புத் தன்மை அதிகம் கொண்டதாகவும் புலப்படும். எரிமலைக் கண்ணாடி, சிறிது வெப்பம் உயர்வத னால் உருகிவிடும் தன்மை கொண்டதால், அரிதா கவே புவியின் மேற்பரப்பில் கிடைக்கின்றது. எனவே எரிமலைக் கண்ணாடிப் பாறைகள் பழங்காலப் பாறை காலப் வகையில் அதிகமாகக் காணப்படாமல் நவீன பாறை வகைகளில் அதிகமாகக் காணப்படும்.