பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரியும்‌ பாதம்‌ 299

சிலசமயங்களில், எரிமலைக் கண்ணாடிப் பாறை களில் ஆங்காங்கே களிப்பாறைத் (shale) துகள்களும் கனிமத் தனிமங்களும் சிறிய பட்டக வடிவில் காணப்படும். பொதுவாக, எரிமலைக் கண்ணாடிப் பாறைகள், கண்ணாடி போன்ற தன்மையையும், அமைப்பையும் பிற படிக ஊடுருவல் யும் கொண்டிருக்கும் ல்லாமையை எரிமலைக் கண்ணா யின் புறப்பகுதி வழ வழப்புத் தன்மை அதிகம் கொண்டதாக அமைந் திருக்கும். கரும்புகை வண்ணத்தில் இருக்கும். இது உடையும்போது சங்கு முறிவாக (conchoidal frac- ture) உடையும் இயல்பு கொண்டது. இதன் கடினத் தன்மை 6-7; எரிமலைக் கண்ணாடியின் ஒளியியல் பண்புகள் மற்ற பாறை வகைகளைவிட மாறுபட்டே இருக்கும். ஒளி முழு அகப்பிரதிபலிப்பும், ஒளி ஊடுருவும் தன்மையும் கொண்ட பண்புகள் அமைந் திருப்பதே இதன் சிறப்புத் தன்மையாகும். எரிமலைக் கண்ணாடி அதன் மூல - பாறைக் குழம்பின் (parent magma) இயற்பியல் தன்மைகளை விளக்குகிறது. மேலும் அருகிலுள்ள புவிப்பாறை களின் வரலாறுகளையும் வயதையும் குறிப்பிடுகின்ற குறிப்புப் பாறையாகவும் பயன்படுகிறது. எரிமலைக் கண்ணாடி மூலம் அருகிலுள்ள பாறைகள், அவற்றின் மூலப் பாறைக் குழம்பின் வெப்ப வரலாறு போன்ற வற்றை நுட்பமாக அறியலாம். எரிமலைக் கண்ணாடியைப் பழங்காலத்தில் ஆபரணக் சுற்களாகப் பயன்படுத்தினர். அதன் வழவழப்பு மற்றும் ஒளிப்பிரதிபலிப்புத் தன்மையைக் கொண்டு, பலவிதமான ஆபரணங்களைப் பழங்காலத் தில் செய்தனர். கற்கால மனிதர்கள் இப்பாறையை ஈட்டி போன்ற ஆயுதமாக விலங்குகளை வேட்டை யாடப் பயன்படுத்தினர். எரியும் பாதம் விக்டர் ஜே.லவ்சன் இந்நோயில், குறிப்பாக இரவில் இரண்டு பாதங் களும் எரிச்சலுடன் இருக்கின்றன. போதுமான ஊட்டம் இன்மையால் முதியோர்களிடையே எரியும் பாதம் (burning feet) நோய் தோன்றுகிறது. வலி, சிலசமயம் ஊசி குத்துவது போன்று, தாங்க முடியாத வாறு இருக்கும். இத்துடன் வேறுபல புற நரம்பு பாதிக்கப்படுகின்றன. பேண்டோதெனிக் களும் அமிலக் குறைபாட்டால் இந்நிலை தோன்றுகிறது. சர்க்கரை நோயுள்ளவர்கள், விடாக் குடியர், நீண்ட 'நாள் புகையிலை பயன்படுத்துவோர் ஆகியோரி டையே இந்த நோய் ஏற்படலாம். இந்நோய்க்கு வைட்டமின் B, குறிப்பாக கொடுப்பது இதமளிக்கும். எரியும் பாதம் 299 வைட்டமின் B12 எரிவிண்மீன் (விண்வீழ் கொள்ளி) அ. கதிரேசன் இருள் சூழ்ந்த இரவில் வானத்தைப் பார்க்கும்போது சில நேரங்களில், சில இடங்களிலிருந்து தீப்பொறி போன்ற துகள் புறப்பட்டு, வேகமாகச் சென்று சில நொடிகளில் மறைந்து விடுவதைக் காணலாம். வை எரிவிண்மீன்கள் (meteors) எனப்படும். இவ் விண்மீன்கள் விழும் விண்மீன்கள், பாயும் விண் மீன்கள், விண்வீழ் கொள்ளி என வேறு பல பெயர் களாலும் குறிப்பிடப்படும். கோள்களுக்கிடையே இயங்கும் சிறு துகள்கள் புவிக்கு அருகில் வரும்போது, புவியின் ஈர்ப்புவிசை யால் ஈர்க்கப்பட்டு, வளிமண்டலத்தில் புகுந்து மிகு வேகத்துடன் செல்லும்போது, காற்றுடன் உராய்வு ஏற்பட்டு அதனால் மிகுந்த வெப்பம் உண்டாகிறது. இவ்வெப்பத்தால் துகள்கள் வளிமமாக மாறிச் சுடர் விட்டு எரிகின்றன. இவ்வாறு தீப்பொறிகளாக மாறிக் கீழ்நோக்கி ஊடுருவிச் சென்று மறைந்து விடுகின்றன. ஆனால் சில துகள்கள் முற்றிலும் எரிந்துவிடாமல் எஞ்சியுள்ள பாகத்துடன் புவியில் வந்து விழுகின்றன. அண்டவெளியில் இயங்கும் இப்பொருள்களுக்கு மீடி ராய்டு (meteoroid) என்றும், புவியின் வளிமமண்ட லத்தில் எரிந்துகொண்டு செல்லும்போது இப்பொருள் களுக்கு 'எரிவிண்மீன்' என்றும், புவியில் விழும் எஞ்சியுள்ள பாகங்களுக்கு விண்கற்கள் (meteorites) என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன. B . இருண்ட வானத்தில் நன்கு கவனித்தால் ஒரு மணிக்கு ஏறத்தாழ ஆறு எரிவிண்மீன்களைப் பார்க்க லாம். ஏறக்குறைய 150 200 கி.மீ. தொலைவு வரையிலுள்ள எரிவிண்மீன்கள் கண்களுக்குப் புல் னாகும். உலகம் முழுதும் கருத்திற்கொண்டால் ஒரு நாளைக்கு 2. 5 கோடி எரிவிண்மீன்கள் காணப் படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எந்த இடத் திலும் நள்ளிரவுக்குமுன் காணப்படும் எரிவிண்மீன் களைவிட நள்ளிரவுக்குப் பிறகு தெரியும் எரிவிண்மீன் களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அறியப் பட்டுள்ளது. நள்ளிரவுக்குமுன் புவி அச்சுச் சுழற்சி, புவியின் பாதைச் சுழற்சிக்கு (orbital motion) எதி ராகவும், நள்ளிரவுக்குப்பின் இவை ஒன்றாகவும் இருப்பதுதான் இதற்குக் காரணமாகும். எரிவிண்மீனின் எடை சராசரியாகக் கால் கிராம் தான் உள்ளது. ஒவ்வொரு நாளும் மொத்தம் ஏறக் குறைய 10-100 டன் வரையிலும் எடை கொண்ட