பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 எரிவிண்மீண்‌ (விண்வீழ்‌ கொள்ளி)

300 எரிவிண்மீண் (விண்வீழ் கொள்ளி) எரிவிண்மீன்கள் புவியில் விழுகின்றன. விழுந்த விண் கற்களை ஆய்வு செய்யும்போது சில முற்றிலும் இரும் பாகவும், பாறையாகவும், சில இரும்புப் பூச்சு கொண்ட பாறைகளாகவும் காணப்படுகின்றன. மாகக் சில சில சமயங்களில் எரிவிண்மீன்கள் மிகவும் வெளிச்ச காணப்படுகின்றன. இவற்றிற்குத் தீப்பந்து எனப்பெயர். சில தீப்பந்துகள் பகல் நேரத்திலும் காணப்படும்; சில நடுவானத்தில் வெடித்துச் சிதறும்; வெடிக்கும் சத்தம் தரையில் உள்ளவர் களுக்குக்கூட கேட்கும். தீப்பந்தங்கள் புகைமண்ட லத்தை விட்டுச் செல்லும். இம்மண்டலம் ஏறத் அரைமணிநேரம் வரையிலும் தோன்றும். எரிவிண்மீன்களின் தொலைவுகளை ராடார் கருவி தாழ மூலம் கண்டுபிடிக்கலாம். எரிவிண்மீன்கள் புவியிலிருந்து சராசரி 95 கிலோ மீட்டர் உயரத்தில் எரியத் தொடங்குகின்றன.சில 130 கி.மீ. உயரத்திலும் உருவாகின்றன. ஏறக் குறைய 80 கி. மீ. உயரத்துக்கு வரும்போது முற்றி லும் எரிந்து சாம்பலாகி மறைந்துவிடுகின்றன. எரி விண்மீன்கள் வானத்தில் மணிக்கு ஏறத்தாழ 12-72 கி.மீ. வேகம் வரை செல்லுகின்றன. வேகம் அதிக மாகும்போது ஒளியும் அதிகமாகிறது. எரிவிண்மீன் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கும்போது அவற்றில் மாங்கனீஸ், சிலிகான், அலுமினியம், மக்னீசியம், சோடியம், நைட்ரஜன் போன்ற பல தனிமங்கள் இருப்பது தெரிய வருகிறது. எரிவிண்மீனாகும் துகள்கள் கோள்களைப் (planets) போலச் சூரியக் குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கூட்டங்கூட்டமாகச் சூரியனை மிகவும் நீண்ட நீள்வட்டப் பாதைகளில் சுற்றுகின்றன. பாதை முழு தும் துகள்கள் பரவியுள்ளன. இப்பாதைகள் சூரி யனைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் உள்ளன. ஆகையால் புவி தொடர்ந்து இவற்றைத் தாக்கவும், வை புவியைத் தாக்கவும் செய்கின்றன. காண்பது எரிவிண்மீன் மழை. ஒவ்வோர் ஆண்டிலும் சில குறிப்பிட்ட நாள்களில் ஆயிரக்கணக்கான எரிவிண் மீன்கள் குறிப்பிட்ட புள்ளிகளிலிருந்து தொடங்கி அனைத்துத் திசைகளிலும் செல்வதைக் ஒரு விந்தையான நிகழ்ச்சியாகும். ஒரே இரவில் சமகால இடை டவெளிகளில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். இதற்கு எரிவிண்மீன் மழை (meteoric shower) என்று பெயர். இதற்கான துகள்கள் கூட்டங் கூட்டமாகத் தங்கள் பா தை களில் செல்கின்றன. இப்பாதைகள் இணை யாக உள்ளனவாகும். கோடுகள் வெகுதொலைவில் சந்திப்பனபோலத் தோன்றும். எடுத்துக்காட்டாக, ஓர் இருப்புப் பாதையில் ணையாக ரண்டு உள்ள ணையான தண்டவாளங்கள் வெகு தொலைவில் சந்திப்பவைபோலத் தோன்று கின்றன. இப்படிப்பட்ட பல பாதை இணையான களில் துகள்கள் இணைந்து வரும்போது இவை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி விரிந்து வருவன போலக் காணப்படுகின்றன. இப்புள்ளிக்கு எரிவிண் மீன் தொடங்கு புள்ளி எனப் பெயர். குறிப்பிட்ட மாதங்களில் இப்புள்ளிகள் குறிப்பிட்ட விண் மீன் மண்டலங்களில் காணப்படுகின்றன. எடுத்துக்காட் டாக, ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் ஓர் எரி விண்மீன் தொடங்கு புள்ளி பெர்சியஸ் (perseus) விண்மீன் குழுவில் காணப்படுகிறது. ஆகையால் இதிலிருந்து வரும் எரிவிண்மீன் மழைக்குப் பெர்சியாடுஸ் (persiads) எனப் பெயர். இப்பாதைகள் வெவ்வேறு வால்விண் மீன்களின் (comets) பாதைகளோடு ஒன்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இத்துகள்கள் வால் விண்மீன்களிடமிருந்து சிதறுண்டு அவற் றின் பாதைகளிலேயே செல்கின்றன என ஊகிக்கப் படுகிறது. அட்டவணையில் சில எரிவிண்மீன் மழைகளின் பெயர்களும் அவை தெரியும் நாள்களும் காணப்படும் விண்மீன் குழுக்களும் அவற்றைச் சார்ந்த வால் விண்மீன் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நாள் மே 4 பெர்சியஸ் 18621 பெயர் விண்மீன் குழு வால்விண்யின் ஏப்ரல் 21 லிரிட் (Lyrid) லிரா (Lyra) 1861 I அக்வேரியட் கும்பம் ஹாலி |(Aquariad) (Aquarius) (Halley) ஆகஸ்ட் 11 பெர்சியட் (Persiad) (Perseus) அக்டோபர்20ஓரியனாய்டு ஓரியன் ஹாலி (Orionoid) (Orion) (Halley) அக்டோபர் 31 டௌரிட் (Taurid) நவம்பர் 16 லியோநிட் இடபம் என்கே (Taurus) (Enche) (Leonid) சிம்மம் (Leo) 1866 I விண்கற்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் விண் கற்கள் விழுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் உலகம் முழுதும் ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ ஆயிரம் கற்கள் விழுகின்றன எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விண்கற்கள் பூமியில் இரண்டு விதங்களில் கண்டு பிடிக்கப்படுகின்றன. முதலாவதாக எரிவிண்மீன்கள்