பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரு 301

புவிக்கு அருகே காணப்பட்டால், அவை புவியில் விழக் கூடிய இடத்தை ஊகித்து அந்த இடத்தில் தேடி னால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் காணப்படு கின்றன. இரண்டாவதாக, புவி சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாகச் சில கற்கள் இரும்புப் பூச்சு காண்டவையாகக் காணப்படுகின்றன. இவை முன்னதாக விழுந்த விண்கற்கள். விண்கற்கள் ஏறத் தாழ 5, 6 செ.மீ நீளம் உள்ளவை. சில கூம்பு வடி வத்திலும் சில கோளவடிவத்திலும் உள்ளன. பகுப்பாய்வு விண்கற்களை வேதி முறையில் செய்யும்போது அவற்றில் புவியில் காணப்படும் மூலங்களே உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 30% இரும்பு, 30% ஆக்சிஜன். 15% சிலிகான், 12% மக்னீசியம் மீதியில் கந்தகம், நிக்கல், கால்சியம், சோடியம், கரி. ஈயம் போன்ற பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்கற்களின் வாழ்நாளைக் கணக்கிடும்போது, அவையும் புவியைப்போல் ஏறத்தாழ ஐந்நூறு கோடி ஆண்டுகள் வயதுடையன எனத் தெரிகிறது. இவற்றைத் தவிர மிகவும் நுண்ணிய விண் கற்கள் அன்றாடம் புவியில் விழுகின்றன. காற்றில் இவற்றின் வேகம் குறைவதால் இவை வெப்பமாவ தில்லை: தரையிலும், வீட்டுக் கூரைகளிலும், கடலின் அடிப்பகுதியிலும் படிந்து எடுக்கப்படுகின்றன. இவையும் விண்கற்கள் வகையைச் சேர்ந்தவையே. கோள்களுக்கு இடையேயான பொருள். கோள்களுக் கிடையே துகள்கள் மிக அதிகமாக உள்ளன. எரி விண்மீன்களை உருவாக்குவதோடுகூட இவை இராசி ஒளி (zodiacal light), எதிர் ஒளி (counter glow) என்ற நிகழ்ச்சிகளையும் உண்டாக்குகின்றன. சூரியனின் தோற்றப் பாதையில் உள்ள இத்துக்கள் கண்சூரிய ஒளியை நன்கு பிரதிபலிக்கின்றது. சூரியன் உதயமாவதற்கு முன்னும், மறைந்த பிறகும். சூரியப் பாதையில் சற்று உயரம் வரை மெல்லொளி காணப்படுகிறது. இதற்கு இராசிஒளி எனப்பெயர். சில சமயங்களில் காலையிலோ மாவையிலோ, சூரியனுக்கு நேர் எதிர்த் திசையில் ஒளிரும் ஒளி காணப்படுகிறது. இதற்கு எதிர் ஒளி (counter glow) எனப் பெயர். பௌர்ணமி அன்று முழுநிலவு எப்படிச் சூரிய ஒளியை முற்றிலும் எதிர்பலிக்குமோ அதே போல இத்துகள்கள் இந்த நிலையில் சூரிய ஒளியை முழுதும் பிரதிபலிக்கின்றன. சிறுகோள்கள் (minor planets) என்ற சிறு துகள் கள் செவ்வாய்க்கும் (mars), வியாழனுக்கும் (jupiter) டையே பலவாக உள்ளன. இவை ஒரு கோளின் சிதறுண்ட பகுதிகள் எனக் கருதப்படுகின்றன. இதே எரு 301 போல எரிவிண்மீன்களைத் தோற்றுவிக்கும் துகள் களும் இக்கோளின் சிதறல்களாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. வால்விண்மீன்கள், சிதறுண்ட கோள் இவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் துகள்களால், த தனிப்பட்ட எரிவிண்மீன், எரிவிண்மீன்மழை, தீப்பந்து, இராசிஒளி எதிர்ஒளி முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எரு -எல். இராஜகோபாலன் ஊட்டச்சத்து ஆகும். து தாவரங்களின் தாவரங்களுக்கு எரு ல்லையேல் அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டு அவற்றிலிருந்து உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போய்விடும். மனிதன் முதல் புழுக்கள் வரை எல்லாவித உயிரினங்களுக்கும் தேவைப்படுவது உணவு. இந்த உணவு தாவர உணவாகவும் இருக்கலாம் அல்லது மாமிச உணவாக வும் இருக்கலாம் அல்லது இரண்டுமே இருக்கலாம். உயிரின உடலின் பல பாகங்களில் உணவு செல்லும்போது உணவுப் பொருள் பக்குவமடைந்து உடலில் முக்கியமாகச் சிறு குடலிலும் பிறகு பெருங் குடலிலும் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்து உயிரினங்களுக்குத் தேவையான சக்திக்கும் வளர்ச் சிக்கும் உபயோகப்படும். உடலுக்குத் தேவையில்லா ததும், தேவைக்கு மேல் உள்ளதும் மலமாகவும், சிறு நீராகவும் வெளியேற்றப்படுகின்றன. அவற்றைக் கழிவுப்பொருள் எனலாம். இந்தக் கழிவுப் பொருளில் மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல் சத்துகள் இருப்ப தால் இவற்றைப் பக்குவப்படுத்தித் தாவரங்களின் வளர்ச்சிக்கு எரு அல்லது உரமாக உபயோகப்படுத்த லாம். மனிதன் மற்றும் உயிரினங்கள் தாவரத்தைச் சாப்பிட்டுத் தேவையான சத்துகளை எடுத்துக் கொண்டு எஞ்சிய பொருளை வெளியில் மலமாகவும், சாணமாகவும், சிறுநீராகவும் வெளியிட அவை தாவரங்களுக்கே மீண்டும் உரமாகப் பயன்படு கின்றன. தாவரங்கள் வளர்ந்து மீண்டும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றன. ஆகவே, இது ஒரு சுழற்சியாகும். க எடுத்துக்காட்டாக, சில உயிர்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்ளும்போது தேவைக்கு அதிக மாக உள்ளவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படு கின்றன. எருக்களில் தேவைக்கு மேல் உணவுச் சத்துகள் உள்ளன. தீமை விளைவிக்கக் கூடிய கிருமிகள் இல்லாமலிருந்தால் மாட்டுச் சாணம், ஆட்டுப்பிழுக்கையை 15% விகிதம் சுலந்து கோழி களுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். அதே