எருக்கு 303
ஆகவே எருக்களைக் கழிவுப் பொருள் என்று சொல்வதற்குப் பதில் உணவின் எஞ்சிய பொருள் என்றும் கூறலாம். எருக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று. இயற்கை எரு. மற்றொன்று செயற்கை எரு. . இயற்கை எரு. 1. விலங்குகள் மூலம் கிடைக்கும் கழிவுப் பொருள்களைத் தொழுஉரம் எனலாம். 2. (1) தாவரங்களின் மூலம் கிடைப்பது பசுந்தழை உரம் ஆகும். பசுந்தாள் உரப்பயிர்களை வயலிலேயே மடக்கி உபயோகிக்கலாம். எ. BIT. சணப்பை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி. 2. பசுந்தாள் பயிர்களை வேற்றிடத்தில் பயிர் செய்து வயலில் இட்டு உரமாக்குதல். GT. கா. கிளைசீரிடியா, கொளுஞ்சி. செயற்கை எரு. வேதி உரம்: தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து மூன்றும் கொண்ட கலப்பு வேதி உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.. இவை அதிக விலையுள்ளவை. இவை இரண்டில் இயற்கை எருவே சிறந்தது. ஏனெனில் (1) இவை மண்ணின் வளத்தை அதிகமாக்கும். (2) மட்கு தொழு உரத்தி லுள்ள உரச்சத்து 2 முதல் 3-பயிர்களுக்கு நிலத்தில் நின்று பயனளிக்கும். (3) வேதிய உரம் ஒரு பயிருடன் பலன் முடிகிறது. (4) வேதிய உரத்தின் மூலம் பயன் பெற அதிக கவனம் தேவை. (5) இயற்கை இடுவது மூலம் மண்ணின் ஈரப்பிடிப்புத்தன்மை நீடிப் பதால், பயிர்கள் நீண்ட காலத்திற்கு வறட்சியைத் தாங்கும். உரம் தொழு எருக்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மிகவும் குறைவாகும். எனவே பயிர்களுக்கு அதிக அளவில் இட வேண்டியுள்ளது. இவ்வாறு அதிக அளவில் இடுவதற்குத் தேவையான அளவு எரு கிடைப்பதில்லை: இந்த அதிக அளவு எருவை நிலத் தில் இடுவதற்கு அதிகமாக வேலை ஆட்களும் தேவைப்படுகின்றனர். ஆகவே எருக்கள் தாவரங்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளின் தீவனத்தில் பங்கு கொண்டு நாட்டு வளத்தையும், கால்நடை வளத்தை பெருக்கிடவும், உணவுப் பற்றாக்குறையை நீக்கவும் மிகவும் உதவுகின்றன. எருக்கு சையத் தாஜுதீன் இதன் தாவரவியல் பெயர் கலட்ரோபிஸ் ஜைஜேன்டியா (calotropis gigantea) என்பதாகும். எருக்கு 303 இது அஸ்கலபியடேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கலட்ரோபிஸ் என்ற இனத்தில் ஆறு சிற்றினங்களுண்டு. அவற்றில் மூன்று சிற்றினங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் ஏனை யவை வெப்பச்சார்பு பகுதிகளிலும் காணப்படுகின் றன. இச்சிற்றினங்களில் க. ஜைஜேன்டியா எனப் படும் எருக்கும், க. ப்ரொசீரா (C. procera) படும் வெள்ளெருக்கும் குறிப்பிடத்தக்கவை. எனப் வளரியல்பு. எருக்கு 2-3 மீ உயரம் வளரக்கூடிய செடி அல்லது சிறு மரமாகும். இச்செடி அடியி லிருந்தே கிளைப்பதால் புதர் போன்ற தோற்றத் தைக் கொண்டிருக்கும். லை எதிரிலையடுக்கு அமைப்பு, தனித்தவை, காம்பற்றவை, நீண்ட முட்டை நீண்ட முட்டை அல்லது நீண்ட வட்டவடிவம் கொண்டவை. இலைப்பரப்பின் அடிப் பகுதியில் காது மடல் போன்ற நீட்சிகள் காணப் படும். இலையின் கீழ்ப்பரப்பு சாம்பல் பூசியது போல் இருக்கும்.இலை தோல் போன்றிருக்கும். மஞ்சரி. இலைக்கோண அம்பல் (umbel) ஆகும், கொத்தாகக் காணப்படும். பூவடிச் செதில்களும், பூக்காம்புச் செதில்களுமுண்டு. மலர். முழுமையானவை; இருபால் ஆரச்சமச்சீர் ஐந்தங்கப்பூக்கள்: காம்புடையவை. பொதுவாக வெளிர் ஊதாநிறம் கொண்டவை. புல்லிவட்டம். 5 புல்லிமடல்கள்; ஓரங்களில் தூவிகொண்டவை. தொடு ஒட்டு அமைப்புடையவை. மடல்கள் அல்லிவட்டம். 5 அல்லிகள்; அடிவரையில் பிரிந்து காணப்படும். விரிந்து வெளிநோக்சி காணப்படுவது எருக்கின் சிற்றினப் பண்பாகும். இதழ்கள் ஒரே மாதிரியான இளம் ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும். மேலும் இதழ்களில் சுரப்பிகள் உண்டு. தொடு ஒட்டு அமைப்புடையவை. பாலின் உறுப்பு. எருக்கு மலரின் நடுவில் வேலைப்பாடோடு கூடிய அழகிய அமைப்பே - பாலின் உறுப்புகளான மகரந்தத் தாள்கள் சூலகம் ஆகிய வற்றின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பு கைனோஸ் டீஜியம் (gynostegium) எனப்படும். மகரந்தத்தாள்கள் 5; உருமாறியவை. அல்லிக்குழலின் அடியிலிருந்து புறப்படும். மகரந்தக் கம்பிகள் 5 உம் இணைந்து குழல் போலிருக்கும். இவற்றின் இவற்றின் வெளிப்புறத்தில் அவை காணப்படும். பக்கவாட்டில் தட்டையாக அடிப்பகுதி உள்நோக்கி வளைந்தும் இருக்கும். மேலும் அவற்றின் அடிப்பகுதி போல் நீர்த்த பூத்தேனைக் கொண்டிருக்கும். 5 வளரிகள் பைப்