எருக்கு 305
எருக்கு 305 வரும் வண்டுகளின் கால்களில் பொலீனியா ஒட்டிக் காள்ள மகரந்தத் துகள்கள் ஒரு பூவிலிருந்து மற் றொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும். பயன். எருக்கின் அனைத்து உறுப்புகளிலும் பால் (latex) போன்ற நீர்மம் காணப்படுகிற கிறது. இதில் நீரும் நீரில், கரையக்கூடிய பொருள்களும் ஏறத்தாழ 95% இருக்கும். எஞ்சிய பகுதி ரப்பர் போன்ற பொருளாகும். இதை கட்டாபர்ச்சா (gutta percha) என்ற பெயரால் குறிப்பிடுவதுண்டு. எருக்கம்பாலில் ஜைஜேன்டின் (gigantin) எனப்படும் நச்சுப்பொருள் உள்ளது. இதற்குப் பொருளாதாரச்சிறப்பு இருப்ப தாகத் தெரியவில்லை. தோல் பதனிடும் போது, தோலிலுள்ள மயிரை நீக்கவும், நாற்றத்தை அகற்ற வும், தோலுக்கு மஞ்சள் வண்ணம் கொடுக்கவும் பயன்படுகிறது. எருக்கம் பாலைப்பெர்சிய ஓபியத் துடன் (persian opium) கலப்படம் செய்வர். . செடியின் பட்டையிலிருந்து நார் எடுப்பர். இது வெண்மையாக, கெட்டியாக, நாட்பட, பட்டுப் போன்ற நயத்துடன் காணப்படும். இது பருத்தி இழையை விடக்கெட்டியானது. அதனால் இதைக் கொண்டு மீன் வலை, தூண்டில், கயிறு,வில்,நாண், ட்வைன் நூல் தயாரிப்பர். இந்த நாரைப் பட்டை யிலிருந்து பிரித்தெடுப்பது சற்றுச் சிக்கலானது. எருக் கங்குச்சிகளை நீராவியிவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் அழுகவைப்பர். அதன் பிறகு சம்மட்டியால் அடித்து நாரைப் பிரித்தெடுப்பர். எருக்குக் குச்சிகளை எரித்து கரி தயாரிப்பதுண்டு. இது எடை குறைவாக இருக் கும். வெடி மருந்துகளும் வாணவெடிகளும் தயா ரிக்கப் பயன்படுகிறது. எருக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்குப் பயன் மிகுதி யாக இல்லை. விதைகளில் காணப்படும் இழைகள் மென்மையாக, பளபளப்புடன் பட்டுப்போன்ற நயத் துடன் காணப்படுவதால், அவற்றைக் கொண்டு மெத்தை மற்றும் தலையணை தயாரிப்பர். மேலும் இவற்றைப் பருத்தி இழையோடு சேர்த்து நூலாகத் தயாரிப்பர். மருத்துவப் பயன். எருக்கங்குச்சி, வேர், பட்டை, இலை, பூ மருந்தாகப் பயன்படும். இலையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்குச் சிறந்ததாகும். இதன் இலைகளை யானைப்பாகர்கள் யானையின் சீழ்பிடிந்த கட்டி களுக்கு ஒற்றடம் கொடுக்கப் பயன்படுத்துவர். பொடி செய்யப்பட்ட மலர்கள் சளி, இருமல், ஆஸ்த்மா, செரியாமை முதலியவற்றுக்குக் குறைந்த அளவில் கொடுக்கப்படுகிறது. பொடி செய்யப்பட்ட வேரின் பட்டை வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத் தும். மேலும் இது காசத்தொடர்பான நோய் களுக்கு நலமளிக்கும். இதை மெழுகு போல் அ.க.6-20 அரைத்து யானைக்கால் நோய்க்குப் பற்றுப் போடுவது வழக்கம். நச்சுத்தன்மை. எருக்கம் பால் தோலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதுண்டு. இச்செடியின் சாறு ஹைட் ரோசயனிக் அமிலம் போன்ற நச்சுத்தன்மை கொண்டதாகும். ஆனால் இது தாமதமாக செயல் படக் கூடியது. இச்சாற்றை உட்கொண்டால் இதயத்துடிப்பு மெதுவாகக் குறைந்து வரும். மேலும் உணவுக்குழாய் மண்டலமும் பாதிக்கப்படுவ துண்டு. எருக்கம் பாலைக் கொண்டு சில குழந்தை களைக் கொல்வதும் இந்தியாவில் காணப்படும் கொடிய பழக்கமாகும். குறிப்பாக, பிறந்த பெண் குழந்தைகளின் வாயில் புதிதாக எடுத்த எருக்கம் பாலை உட்செலுத்துவர். மேலும் கருச்சிதைவிற்கும் இதைப் பயன்படுத்துவதுண்டு. சூலுற்ற பெண்கள் எருக்கஞ்சாற்றை உட்கொள்ளவோ கருப்பையின் வாயிலில் தடவவோ செய்வர். மேலும் எருக்கம் இலைகளை உணவுடன் கொடுத்துச் கொலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது மருத்துவ நூல்களால் அறியப்படுகிறது. பொதுவாக எருக்கு கால்நடை களுக்கு நஞ்சாக அமைவதுண்டு. எருக்குச்செடியில் பப்பாளி செடியிலுள்ள பப்பைன் என்பது போன்றப் புரதத்தைச் செரிக்கக் கூடிய நொதியுள்ளது. வெள்ளெருக்கு. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இச்செடி எருக்கைவிட உயரம் குறைவாகக் காணப்படும். இச்செடியின் மலர்கள் வெண்மையாக ஊதாப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அல்லி மடல்கள் நேராக நிமிர்ந்து காணப்படும். மலர்கள் மணமுள்ளவை. வெள்ளெருக்குப் பாலில் ட்ரிப்சின் எனப்படும் நொதி காணப்படுகிறது. மேலும் இதயத் தைப் பாதிக்கக் கூடிய நச்சுப்பொருளும் அதிலுண்டு. வெள்ளெருக்குப் பண்புகள் எருக்கை ஒத்திருப்பதால் அதைப் போலவே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. வாதநோய் நீக்கியான மாவேலிச் சூரணம் குஷ்ட நோய் நீங்கப் பயன்படும் குமரன் சூரணத் தயாரிப் பிலும் வெள்ளெருக்கு சேர்க்கப்படுவதுண்டு. வெள் ளெருக்கு விதைகளின் இழைகள் நீளம் குறை வானவை, இவ்விழைகளையும் எருக்கு விதை களையும் கலந்து பயன்படுத்துவர். ழை வளரு வெள்ளெருக்கு வயல்களில் களையாக வதைக் காணலாம். அவற்றை 0.3% அடர்த்தியுள்ள 2-4 டை குளோரோஃபீனாக்சி அசெட்டிக் அமிலம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். எருக்கு வெள்ளெருக்கு இவற்றின் சாறு கொண்ட போதை யூட்டும் மது தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்கள் தயாரிக்கும் மதுவான பார் (bar) என்பதில் எருக்குச் சாற்றையும் சேர்ப்பதுண்டு. இப்பழக்கம் ஆப்பிரிக்க பழங்குடி களிடமும் காணப்படுகிறது. அங்கு தயாரிக்கும்