பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான விகிதத்தில் தனிமங்கள் இரும்புத்தாதோடு கலக்கப்பட்டு ஒரு பீங்கான் அல்லது மண் பாத்திரத் தில் வைக்கப்படுகின்றன. அதிக அதிர்வெண் உள்ள மின்சாரம் இந்த மண் பாத்திரத்தைச் சுற்றி மின் சுருளில் செலுத்தப்படுகிறது. இந்த மின்னோட்டத் தின் காரணமாக மண்பாண்டத்தில் மின்தூண்டல் ஏற்பட்டுப் பாண்டத்தில் உள்ள உலோகங்கள் உருக்கப்படுகின்றன. வெற்றிட முறை. முந்தைய முறைகள் அனைத் தும் சிறிதள வேனும் ஆக்சிஜன், நைட்ரஜன். ஹைட்ரஜன் ஆகிய வளிமங்கள் உள்ள உருவாக்குகின்றன. இதன் ய காரணமாக எஃகையே எஃகின் தன்மைகளில் சிலவிரும்பத்தகாத தன்மைகளும் ஏற் பட்டு விடுகின்றன. சூழலில் இம்முறையில் மந்த வளிமங்களின் எஃகு உருவாக்கப்படுகிறது. மிக அதிகமான அளவில் எஃகு தேவைப்படுமானால், அச்சும் (mould) உலை யும் ஒரு வெற்றிட அறைக்குள் அமைக்கப்பட்டு, உலையிலிருந்து வெற்றிடத்தின் வாயிலாக எஃகு அச்சுகளில் ஊற்றப்படும். இதனால் எஃகில் வளி மங்கள் கலப்பதைத் தடுக்கலாம். வயி. அண்ணாமலை எஃகு மேற்புறம் கடினப்படுத்தல் பல்வேறு முறைகளால் எஃகின் மேற்பரப்பை மட்டும் கடினமாக்கித் தேவைப்படும் தன்மைகளைப் பெறுதல் எஃகின் மேற்புறம் கடினப்படுத்தல் (surface hardening of steel) எனப்படுகிறது. இம் முறைகளில் சிலவற்றின் கலவை விகிதம் மாறாமல் அணுக்களின் அமைப்பு மட்டும் மாறும். சிலவற்றில் கலவை விகிதமும் மாறுவதுண்டு. வெப்பப் பதனிடும் முறையால் பெறமுடியாத பல்வேறு தன்மைகளை மேற்பரப்புக் கடினப்படுத் தும் முறையால் பெறலாம் தேய்வு எதிர்ப்புத் தன்மை, உறுதித்தன்மை, குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் விசையைத் தாங்கும் தன்மை, ஒரே இடத்தில் செயல்படும் சுமையால் மேற்பரப்பில் விழும் பள்ளத்தைத் தவிர்க்கும் தன்மை போன்ற பல தன்மைகளைப் பெறலாம். எஃகின் மேற்புறம் கடினப்படுத்தப்பட்ட பிறகு. கடினமான வெளிக்கூடு மேற்பரப்பு, என்றும். பாதிக்கப்படாமல் பழைய தன்மைகளோடு இருக்கும் உட்பகுதி, உட்கூடு என்றும் குறிக்கப்படுகின்றன. . கடினப்படுத்தும் முறை. கரியூட்டல், கரி, நைட்ர ஜன் ஊட்டல். சயனைடு ஊட்டல், கரிநீரூட்டல், நைட்ரஜன் ஊட்டல், தீச்சுடர் மூலம் கடினப்படுத் தல், மின்தூண்டல் மூலம் கடினப்படுத்தல், மேற் பரப்பு பதப்படுத்தல் ஆகியவை எஃகின் மேற்புறம் கடினப்படுத்தும் முறைகளாகும். கரிக்கலவையில் உள்ள கரியின் அளவு கூடும் போது எஃகின் வலிமை கூடுகிறது. இந்த அடிப் படையில் கரியூட்டலில், எஃகின் மேற்புறம் உள்ள குறைந்த கரி விகிதம் மாற்றப்பட்டு மிகுதியாக்கப் படுகிறது. எனவே மேற்பரப்பு மிகவும் வலிமை உள்ளதாக அமைகிறது. கரி நைட்ரஜன் ஊட்டல், சயனைடு ஊட்டல், கரி நீரூட்டல் போன்ற முறைகளில் கரியூட்டலுடன் நைட்ரஜனும் ஊட்டப்படுகிறது. நைட்ரஜன் உதவி யால் குறைந்த வெப்பநிலையிலேயே கரியூட்ட முடியும். மேற்பரப்பைக் கடினப்படுத்திய பிறகு சூடுபடுத்தித் தன்மையூட்டுகையில் நைட்ரஜன் நன்கு பயனளிக்கிறது. நைட்ரஜன் ஊட்டலில் வெறும் நைட்ரஜன் மட்டும் ஊட்டப்படுகிறது. இந்த எஃகு கலவையின் கரி தவிர பொருள்களுடன் ஏனைய நைட்ரஜன், சுலவைப் ணைந்து கடினத்தன்மையைப் பெருக்குகிறது. மேற்கூறிய யாவும் கலவை விகிதத்தை மாற்றுவதன் மூலம் கடினப்படுத்துகின்றன. தீச்சுடர் முறையும் மின்தூண்டல் முறையும் மேற்பரப்பை மட்டும் சூடுபடுத்தி அணுக்களின் அமைப்பை மாற்றுவதால் கடினப்படுத்துகின்றன. (அட்டவணை காண்க) கரியூட்டல். 0.20% அல்லது அதற்கும் குறை வான விகிதத்தில் கரியோடு கூடிய இரும்பு உலோகக் கலவையின் (எஃகு) மேற்பரப்பில் கரியை ஊட்டு வதால் கலவைவிகிதம் மாற்றப்பட்டுக் கடினமாக்கப் படுகிறது. இம்முறை பற்சக்கரம், தாங்கிகள். நீள்வட்டச் சுழலி அல்லது நெம்புருள் போன்ற வற்றிற்கு மிகுதியும் பயன்படுகிறது. இம்முறையில் மேற்பரப்பு மட்டும் மிகுந்த கரி விகிதம் உள்ளதாக மாற்றப்பட்டபின் எஃகுக்கே உரிய முறைப்படி சூடுபடுத்தப்பட்டுத் தன்மையூட்டப் படுகிறது. இச்செயலால் கரியநிறமுள்ள மேற்பரப்பு மார்ட்டென்சைட் எனப்படும் உறுதியான தோற்றத் தைப் பெறுகிறது. ஆனால் உட்கூடு எந்த மாற்றமும் அடைவதில்லை. திண்மநிலைக் கரியூட்டல் வளிம நிலைக் கரியூட்டல் எனக்கரியூட்டல் இருவகைப்படும். பெட்டி திண்ம நிலைக் கரியூட்டல். கடினப்படுத்த வேண் டிய பொருள்களைக் கரியூட்டும் பொருள்களோடு ஓர் எஃகுப் பெட்டிக்குள் நிரப்பியபின் மூடப்படுகிறது. இப்பெட்டி 900° -950° C வரை சூடாக்கப்படுகிறது. இந்த வெப்பநிலை உருவாக்கும் வேதி மாற்றங்கள் பின்வருமாறு: உள்ள கரி, கரியூட்டும் பொருளில் காற்றின் கார்பன் டைஆக்சைடுடன் கலப்பதால் கார்பன்