பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமை 311

எருமை 311 ! சதுப்பு நில எருமைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளன. மலேசியா. பிலிப்பைன்ஸ் நாடு களில் வை காரபோ எனப்படுகின்றன. இவற்றில் நீர் எருமைகளில் உள்ளவாறு பல இனங்கள் இல்லை. இவை குறைந்த அளவு பால் (1-1.5 லிட்டர்/நாள்) அளிக்கின்றன. ஆனால் பாலில் கொழுப்புச்சத்து 10% க்கு மேல் இருக்கும். இவ்வகை எருமைகள் வேளாண் தொழிலுக்கு மிகுதியாகப் பயன்படுகின்றன. இவற் றின் கொம்புகள் இயல்பான அமைப்பில் உள்ளன இந்தியாவில் உள்ள எருமைகள் ஐந்து வகைப் படும். அவை பஞ்சாப் இனவகை (முர்ரா, நீலி, ரவி, (முர்ரா,நீலி,ரவி, குந்தி), குஜராத்தி இனவகை (சுர்த்தி, மேகசானா, ஜாபர்பாடி), உத்திரப்பிரதேச இனவகை (பத்வாரி, தாரை), மைய இந்திய இனவகை (சம்பல்புரி, நாக புரி, பனோகரபுரி, மந்தாஜராங்கி, கானகண்டி), தென்னிந்திய இனவகை என்பனவாகும். (தோடா, தென்கனரா) முர்ரா: பஞ்சாப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட கருமை நிறமுடைய இவ்வின எருமைகள் நாடு முழுதும் பரவியுள்ளன. பருத்த உடலும், நெருங்கிச்சுருண்ட கொம்பும் உடைய இவ்வினத்தில் ஆண் 500-600 கி.கி. எடையும், பெண் 500 கி.கி. எடையும் கொண்டது. ஒரு நாளுக்கு 5- 6லி. பால் கொடுக்கும். பாலில் 7% கொழுப்புச் சத்து இருக்கும். ஜாபர்பாடி : இவ்வின எருமைகள் குஜராத் மாநிலத் தின் தீர்காடுகளைத் தாயகமாகக் கொண்டவை. மிகப் பெரிய உருவமுடையவை. ஆண் 800 கி.கி எடையும் பெண் 600 கி.கி. எடையும் கொண்டவை. முர்ரா