312 எருமை
312 எருமை இனப்பெருக்கம் மேல் மையான நிறமும் பின்னோக்கி வளைந்து கருமை நோக்கியுள்ள பெரிய கொம்புகளும் கொண்டுள்ளன. கொம்புகள் முர்ரா இனத்தைப் போன்று நெருக்க மாகச் சுருண்டிருக்கா. ஒரு நாளுக்கு 6-7 லி. பால் கொடுக்கும். பாலில் கொழுப்புச்சத்து மிகுதியாக உள்ளது. ஆண் க சுர்த்தி. இதுவும் குஜராத் மாநிலத்தைத் தாயக மாகக் கொண்டது. நடுத்தர உடலுருவமுடையது. 500 கிலோ எடையும் பெண் 350-400 கி.கி. எடையும் கொண்டவை. கறுப்பு, சாம்பல், வெள்ளை நிறங்களில் இருக்கும். கொம்புகள் பின் புறம் வளைந்து அரைவட்டவடிவமாக இருக்கும். நாளுக்கு 4.5 லி. பால் கொடுக்கும். இராஜஸ்தான் மேகசாளா. மாநிலத்தைச் சார்ந்த இவை முர்ரா, சுர்த்தி எருமைகளுக்கு டைப்பட்ட உடல் எடை கொண்டவை; எடை குறைந்தவை: ஆண் 500-600 கி.கி. எடையும் பெண் 450 கி.கி. எடையும் இருக்கும். கறுப்பு. பழுப்புச் சாம்பல் நிறம் கொண்டவை. முகத்தில் வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். கொம்புகள் சற்று நீளமாகச் சுருண்டு இருந்தாலும் முர்ரா இனங் களைப் போன்று நெருக்கமாகச் சுருண்டு இருக்கா. நாளுக்கு 2-3 லி. பால் கொடுக்கும். இனக்கணக்கீடு. உலகில் உள்ள எருமைகளில் 50%க்கு மேல் இந்தியாவில் உள்ளன. ஆறு கோடிக் கும் மிகுதியான எருமைகளைக் கொண்ட இந்தியா உலகில் முதலிடத்தையும் மூன்று கோடி கொண்ட சீனா இரண்டாம் இடத்தையும், ஒரு கோடி எருமை களைக் கொண்ட பாகிஸ்தான் மூன்றாம் இடத் தையும் பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளில் பசுக் களை விட எருமைகள் மிகுதியாக உள்ளன. இங்கு வேலைக்கும் இறைச்சிக்கும் எருமைகளை மிகுதி யாகப் பயன்படுத்துகின்றனர். வேறு சில நாடுகளில் பசுக்கள் எருமைகளை விட மிகுதியாக இருந்தாலும் பால், இறைச்சி, வேலை இவற்றிற்காக எருமை களைப் பசுக்களுக்குச் சமமாகப் பயன்படுத்துகின் றனர். இந்தியாவில் பசுவினமும் எருமையினமும் 3:1 என்ற அளவில் இருந்தாலும், நாட்டில் கிடைக்கும் மொத்தப் பால் அளவில் 55% எருமை மூலம் கிடைக் கின்றன. இனப்பெருக்கத்திற்குப் பிறகு பால் பெருக் கம் மிகக் கூடும். பால் வள நிறுவனங்களால் நகர்ப் புறப்பகுதிகளுக்கு வழங்கப்படும் பாலில் பெரும் அளவு எருமையிலிருந்தே கிடைக்கிறது. மேலும் இறைச்சியில் 60% எருமையிலிருந்து கிடைக்கிறது. பா. மரியதாஸ் எருமை இனப்பெருக்கம் எருமைகள் பசுக்களைப்போலல்லாமல் காலங் கடந்து, மூன்று, நான்கு வயதில் தான் பருவத்திற்கு வரும். பருவம் அடைந்தவை ஒவ்வோர் ஆண்டும் ஈனுதல் வேண்டும். ஆண்டு முழுதும் எருமை சினைக்கு வந்தாலும், மழைக்காலத்தில் பெரும்பாலானவை, பதமான சினைத் தருணத்திற்கு வரும். எருமை தொடர்ந்து கருத்தரிக்க வேண்டிய வழிமுறை. உயர்ந்த வகைப் பொலிகாளையின் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்திரியத்தை பயன்படுத்தல், சரியான, தேர்ந்த முறையில் கருத்தரிக்கச் செய்தல், செயற்கை முறைக் கருத்தரிப்பு நிலையத்திற்குச் சினைப் பருவ மான உரிய நேரத்தில் கொண்டு வருதல் ஆகியன மிகவும் இன்றியமையாத பணியாகும். சினைப்பருவத்தில் பக்குவமுள்ள சினைக்கு விட்டால்தான் சினைபிடிக்கும். பக்குவமுள்ள ஒரு சினைப்பருவத்தை ஒரு முறை விட்டுவிட்டால் பக்கு வமான மறுசினைப் பருவத்திற்குப் பதினெட்டி லிருந்து இருபத்து நான்குநாள் வரை தாமதமாகிச் னை நிலைக்கு வரும். சினைத்தருணம். எருமையும், கிடாவும் ணையும் அறிகுறிகள் 18-24 மணி நேரம்தான் தொடர்ந்து இருக்கும். சினைப்பருவம் நாள்களுக்கு ஒருமுறை வரும். 18-24 சினை பருவ அறிகுறி. பொதுவாக எருமைகளின் சினையை எளிதில் அறிய முடியாது. எருமை அமைதியின்றி, வைகறையில் கத்திக்கொண்டே இருக்கும். தேவையான அளவு உணவு உண்ணாது; நீர் குடிக்காது. பால் சுரப்பு விடாது; பாலளவு மிக மிகக் குறைந்துவிடும். மிகு உணர்ச்சி வயப்பட்டிருக் கும், வாலை உயர்த்தியிருக்கும், அடிக்கடி சிறுநீர் சுழிக்கும்,பிறப்புறுப்பு சிவந்து வீங்கி, ஈரப்பசையுடன் இருக்கும். உட்புறப்பிறப்புறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற வழவழப்பான கசிவு (மொடை அடித்தல்) வால், தொடைப் பகுதிகளில் வடிந்து காணப்படும். மற்ற எருமைகளின் மீதோ மற்ற எருமைகள் தன் மீதோ தாவுமாறு நின்று கொண்டிருக்கும். எருமைக்கு சினை நிலை அறிதல். நாட்டு உயர்ந்த வகைப் பொலி காளையின் இந்திரியத்தைக் கருத்தரிப்பு செய்தபின் இரண்டு மாதங்கழித்துச் சினை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். சரியான முறையில் கருத்தரிப்பு செய்து சினை ஆகாவிட்டால் பிறகு அது சினைப்பருவத்திற்கு வராது. இருப்பினும் சினை படாத எருமைகள் சினைக்கும் வரலாம். இவற்றிற்கு மீண்டும் சரியான முறையில் கருத்தரிப் புச் செய்தல் வேண்டும். எனவே, சினை அறிதல் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.