பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமை 313

சினை எருமைகளைப் பேணும் முறை. சினைப் பட்ட எருமைகளுக்கு ஊட்டக் கலப்புத் தீவன மளித்தல் மிகவும் முக்கியமாகும். இதனால் கன்று நல்ல முழு வளர்ச்சியும், பால் மிகுதியான அளவும் கொடுக்கும். கன்று ஈனுதலும் கன்று வீசுதலும் தவிர்க்கப்படும். பிற மாடுகள் முட்டுவதாலும். சினை மாடுகள் தவறி விழுவதாலும் கருவுற்ற மாடுகளுக்குக் கருச்சிதைவு ஏற்பட நேரிடும். தொடர்ந்து கருச் சிதைவு ஏற்படும் எருமைகளைக் கால்நடை மருத்து வரிடம் காட்டித் தக்க மருத்துவம் பெறவேண்டும். சினை எருமைகள் எக்காரணத்தைக் கொண்டும் முக்குவதோ, வயிற்றுவலியின் அறிகுறிகள் காட்டு வதோ கூடாது. மேற்கூறிய அறிகுறிகளும், பிறப்புறுப் பிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படுதலும் ஆபத்தான அறிகுறிகள். இவை கருச்சிதைவுக்கோ, கருப்பைச் சுழற்சிக்கோ முன் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே உடன் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். சினை எருமைகள் சிலசமயம் பிறப்புறுப் பினை முக்கி வெளிப்படுத்தும். அப்போது உடனே மருத்துவம் செய்யவேண்டும். கன்று ஈனும் முன் தோன்றும் அறிகுறி, உணவு உண்ணாமால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், மடிப் பகுதியை விரும்புதல், நிலையின்றி இருத்தல், வாலை ஆட்டுதல், அடிக்கடி படுத்து எழுந்து கொண்டி ருத்தல், அரை தளர்ந்து விடுதல், வெளிப்புறப் பிறப்புறுப்பு வீங்கி விடுதல், பழுப்பு நிறக் கசிவு வடிதல், மடியும். காம்புகளும் வீங்கியிருத்தல், பிட்டத்தில் பள்ளம் விழுதல் ஆகிய இந்நிலையில் மாட்டைத் தனியாகக் கட்டிக் கன்று ஈனும் நேரில் பார்வையிட வேண்டும். வரை கன்று ஈனும் அறிகுறி, வயிற்றுவலி வந்தது போல் படுப்பதும் எழுவதுமாக இருத்தல், நெளிதல்,அவ்வப் போது முக்குதல், வலியின் வேதனையால் அமைதி யின்றி இருத்தல், பிறப்புறுப்பிலிருந்து வழவழப்பான கசிவு வெளிப் படுதல், பனினீர்க்குடம் வெளிப்படுதல் முதலியன தோன்றும். பொதுவாக 4-5 மணி நேரத்திற்குள் கன்று ஈன வேண்டும். அவ்வாறில்லையெனில் கன்று ஈனுவதில் உதவி தேவை என்பதைத் தெரிந்து கொண்டு கால் நடை மருத்துவரின் உதவி கொண்டு மாட்டையும், கன்றையும் காப்பாற்றவேண்டும். கன்று ஈன்ற பின்னும் கண்காணிக்க வேண்டியவை. கன்று ஈன்றபின் நஞ்சுக் கொடி எனும் உறுப்பி லிருந்து கசியும் இரத்தம் அதிகமாக இருப்பின் குளிர்ந்த நீரை எருமை மீது தெளித்து முதலுதவி செய்யவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் எருமையை நடத்தாமலும். இரத்தக்கசிவு அதிகமாக விடாமலும் கால்நடை மருத்துவரைக் கொண்டு மருத்துவம் செய்யவேண்டும். எருமை இனப்பெருக்கம் 313 கல் நச்சுக்கொடியை நாய் அணுகாமல், எருமையைப் பேணவேண்டும், 8-12 மணி நேரத்திற்குள் விழாத நஞ்சுக் கொடியைப்பிடித்து இழுப்பதோடு அல்லது வைக்கோலைக் கட்டித் தொங்க விடுவதோ, பயிற்சி பெறாதவர்களை வைத்து நஞ்சுக்கொடியை நீக்க முயற்சி செய்வதோ கூடாது. அவ்லாறு செய்தால், வருங்காலத்தில் சினைப்படுதலையும். தற்போதைய பால் சுரப்பினையும் மிகுதியும் பாதிக் கும். எனவே உடனடியாகக் கால்நடை மருத்து வரிடம் அணுகி உதவி பெறவேண்டும். நஞ்சுக்கொடி விழும்வரை கன்றுக்குப்பால் ஊட்டாமல் இருந்தால் நஞ்சுக்கொடி விழத் தாமதமும், கன்றுக்கு உடல் நலக் குறைவும் ஏற்படும். எதிர்பாராத விதமாக மாடு நஞ்சுக்கொடியைத் தின்று விடுமானால் உடன் கால்நடை மருத்துவரை நாடி மருத்துவம் அளிக்க வேண்டும். ஈன்ற மாடு கருப்பையை வெளித்தள்ளினால் செய்ய வேண்டிய மருத்துவம். கன்று போட்ட எருமை சில சமயம் முக்கி முழுக் கருப்பையையும் வெளித்தள்ளி விடும். 2-3 மணிநேரத்திற்குள் மருத்துவம் செய்யா விடில் எருமை இறக்க நேரிடும். எனவே கால்நடை மருத்துவரை அணுகவேண்டும். வெளித்தள்ளப்பட்ட உறுப்புகள் காய்ந்து விடாமலும், மண்ணில் படாம் லும் செய்து ஈரத்துணியினால் மூடிவைக்கலாம். எருமையை நிலையாகக் கட்டாமல் நடக்க விட வேண்டும். வெளித்தள்ளப்பட்ட உறுப்புகளுக்கு அழிவு ஏற்படாமல் பார்க்கவேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவரை அணுகி மருத்துவம் பெறவும் வேண்டும். பிறந்த கன்றைப் பேணும் முறை. கன்று பிறந்த உடன் வாயிலும், மூக்கிலுள்ள வழவழப்பான சளி யையும். சவ்வையும், கோழையையும் அகற்ற வேண்டும். எருமை கன்றை நக்க விட வேண்டும். கன்று தளர்ந்து மயக்கமுற்றிருந்தால் குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கலாம். கன்றின் பின்னங்கால் களைத் தூக்கி மெதுவாகவும், பாதுகாப்புடனும் வட்டமாகச் சுற்றலாம். கன்று எழுந்திருக்க முயன் றால் கைகொடுத்து உதவி செய்யலாம். கன்றினை எருமை மிதித்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொப்பூழ்க் கொடியின் மீது டிஞ்சர் அயோடின் மருந்தைப் போட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சீம்பாலை மிதமான அளவு குடிக்க விடவேண்டியது மிக அவசியம். கன்று பிறந்த மறுநாள் காட்டுப் போட்டதா என்று கவனிப்ப தோடு போடாவிட்டால் தகுந்த மருத்துவம் அளித்தல் வேண்டும்.