பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 எருமை நாக்கு மீன்‌

314 எருமை நாக்கு மீன் எருமை நாக்கு மீன் சைனோகிளாசஸ் (cynoglossus) எனும் பொது வினத்தைச் சார்ந்த தட்டை மீன்கள், தோற்றத்தி லும் உருவ அமைப்பிலும் எருமையின் நாக்கை ஒத்திருப்பதால் எரு மை நாக்கு மீன் என்று அழைக்கப் படுகின்றன. நாக்கு மீன்கள் (tongue fishes) என்றும் இவற்றை குறிப்பிடுவர். எருமை நாக்கு மீன்களின் முகம் முற்பகுதியில் நீண்டு, ஒரு கொக்கி போன்று கீழ்நோக்கியும், பின் னோக்கியும் வளைந்திருக்கும். பொதுவாகத் தட்டை மீன்களுக்கு (flat fishes) இரண்டு கண்களும் வலப் புறத்திலோ. இடப்புறத்திலோ அமைந்திருக்கும். நீரின் அடித்தளத்தில் அவை வாழ்வதற்குத் துணை புரியும் வகையில் அமைந்துள்ளது. எருமை நாக்கு மீன்களின் இரண்டு கண்களும் இடப்பக்கத்தே யுள்ளன. இவற்றிற்கு ஆறு செவுள் மூடிகள் உள்ளன. செவுள் திறப்புகள் மிகக் குறைவானவை. இவற்றின் வாய் சமச்சீரற்றுக் குறுகிக் காணப்படும். இவற்றின் உதடுகளில் எவ்வித நீட்சியும் வேற்று அமைப்பு களும் இல்லை. . தட்டை மீன்கள் நீர்நிலைகளின் அடித்தளத்தில் வாழ்வதால் இவற்றின் உடல் பிற மீன்களைப் போன்றிராமல் தட்டையாக அமைந்துள்ளது. லின் மேல்பகுதி கரிய நிறத்துடனும், அடிப்பகுதி வெளிறிய நிறத்துடனும் காணப்படுகின்றன. இந்நிற உட வேறுபாடு அவை வாழும் சூழலோடு இரண்டறக் கலந்து வாழ உதவுகின்றது. அதனால் அவற்றின் பகை இனங்கள் அவற்றை எளிதில் இனங் கண்டு கொள்ள இயலாது. எருமை நாக்கு மீன்களின் கரிய நிறமுடைய பக்கத்தில் அமைந்துள்ள செவுள் துளைகள் பெரிதும் மாறுபடக் கூடியவை,வலப்பக்கத்தில் மட்டுமே நுண்ணிய பற்கள் காணப்படுகின்றன. நேர்துடுப்புகள் தொடர்ச்சியற்றுக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மார்புத் துடுப்புகள் இல்லை. எருமை நாக்கு மீன்களின் மேற்புறத்தில் இரண்டு அல்லது மூன்று மருங்கு கோட்டுப் புலன் (lateral line sense organs) வரிகள் காணப்படுகின்றன. இவ்வுணர் வுறுப்புகள் வெப்பத்தை உணர்வதற்கும் ஒலியை உணர்வதற்கும். மீன்களை நீரோட்டத்துடன் இணைந்து வாழச் செய்வதற்கும் பயன்படுகின்றன என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இக்கருத் துகள் தொடர்பான ஆய்வுகள் இன்னமும் நடை பெற்று வருகின்றன. சைனோகிளாசஸ் குவிங்கிலீனியேட்டஸ் என்னும் நாக்குமீன் சென்னையில் இயல்பாகக் காணப்படும். இனமாகும். இது சுமார் 26 செ.மீ. நீளமுடையது. இதன் செவுள் துளைகளுள் ஒன்று கண் குழிகளுக் கிடையே இடம் பெற்றுள்ளது. மற்றொரு செவுள் துளை குழல் போன்ற தோற்றத்துடன் கீழ்க்கண்ணின் முன்னால் அமைந்துள்ளது. ஒற்றை வயிற்றுத்துடுப்பு எருமை நாக்கு மீன்