பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமைப்புல்‌ 315

மலவாய்த் துடுப்போடு ஒட்டிக் கொண்டுள்ளது. சீப்பு வடிவத்திலுள்ள செதில்கள் கரியநிறமுடைய பக்கத் தில் அமைந்துள்ளன. நிறமற்ற பக்கத்தில் வட்டச் செதில்களும்,நிறமுள்ள பக்கத்தில் இரு பக்கக்கோடு களும் உள்ளன. இவ்வகை மீன்களின் செவுள் மூடி கள் கருமை நிறமுடையவை. உடல் பழுப்புப் படர்ந்து காணப்படும். வேறுசில தட்டை மீன்களும் எருமை நாக்கு போன்று உள்ளன. அவற்றுள் ப்ளூரோநெக்ட்டெஸ், சைனாப்டா என்பன குறிப்பிடத்தக்கவை. சிறிய தட்டை மீன் வளர்ச்சியடைவதற்கு முன்பு ஏனைய மீன்களைப் போன்றே உருவமைப்பினைப் பெற்று. அவற்றைப் போன்று நீந்தி வாழ்கின்றன. ஆனால் பிறகு வளர்ச்சியடையும் பொழுது இம் மீன்கள் ஒரு பக்கம் (பொதுவாக வலப்புறத்தில்) சாய் வாகப் படுக்கின்றன. வளர்ச்சியின் பொழுது இவற்றின் மேற்புறம் கரிய நிறத்தினைப் பெறுகின்றது. வளர்ச்சி யடையும் பொழுது இவற்றின் தலை திருகி விடுகின் றது. இதனால் இரண்டு கண்களும் இம்மீன்களின் மேற்புறத்தினை அடைகின்றன. வாய் கீழ்ப்புறத்தை விட, மேற்புறத்தில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சி பெற்ற பெரிய தட்டை மீன் நன்கு நீந்து எருமைப்புல் 3/5 வதில்லை. சுருங்கி விரியும் முறையில் மேற்புறம் வெளியே தெரியும்படி பக்கவாட்டில் நீந்துகின்றது. நாக்கு மீன்களைப் பெரும்பாலும் மனிதர் உண வாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் கோழிகளுக் கும், பன்றிகளுக்கும் இவற்றை உணவாகப் படுத்துகிறார்கள். எருமைப்புல் பயன் - எம். ஜெய்லானி இதன் தாவரவியல் பெயர் ப்ராக்கியாரியா மூட்டிகா (Brachiaria mutica) என்பதாகும். எருமைப் புல், போயேசி (poaceae) எனப்படும் ஒருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதற்கு நீர்-புல், பாரா மாரீஷியா-புல் என்று பல வட்டாரப் பெயர்களுண்டு. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்ரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இப்புல், தற்சமயம் அனைத்து வெப்ப நாடுகளிலும் புகுத்தப்பட்டு அந்நாடுகளில் தன்னிச்சையாக வளர்கிறது. இது பள்ளத்தாக்கு களிலுள்ள சதுப்பு நிலங்களில் யல்பாகக் காணப் எருமைப்புல் எருமைப்புல் மெல்உமி சிறுஸ்பைக் பெலியா முதல் உமி சிலம்மா S SECON