எல்டோப்பா 319
எல்டோப்பா 319 மனமருட்சி மருந்துகளில், வேண்டா விளைவு களை உண்டாக்கும் மருந்து எல்.எஸ்.டி. ஆகும். முனைப்புடன் பணி புரியத் தேவையான எல்.எஸ்.டி. யின் அலகும், தீய விளைவுகளை உண்டாக்கும் எல்.எஸ்.டி.யின் அலகும் வெவ்வேறானவை. எல்.எஸ்.டி.ஆல் ஏற்படும் மரணங்கள். விபத்துக் கள் எல்.எஸ்.டி.ன் நச்சு விளைவால் ஏற்படுவன வல்ல, எல்.எஸ்.டி. யால் ஏற்படும் மனக் கோளா றால் ஏற்படுகின்றன. எல் எஸ்.டி யின் தீய விளைவுகளை மட்டுப் படுத்த ஃபீனோ தையசின்கள் உதவும். நீண்டகால மனக் கோளாறு பல நாள்களிலிருந்து பல மாதங்கள் வரை நீடிக்கும். சில போது, எல்.எஸ்.டி.ஐ நிறுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர் கூட அதன் தீய விளைவுகள் வெளிப்படும். இதற்கு ஃபீனோதய சின்கள் நல்ல பலனளிக்கும். எல்.டோப்பா -அ. கதிரேசன் இது டோப்பமைனின் முன்னோடி (precursor)ஆகும். எல். டோப்பா (L. Dopa) என்ற வார்த்தை டைஹைட்ராக்சி ஃபீனைல் அலனின் என்பதன் சுருக் கமாகும். இது கேட்டகால், அமீன்கள் உருவாக்கத் தின் L.டைரோசினின் இடை சிதைவுமாற்றப் பொரு ளாக உண்டாகிறது. பார்க்கின்சோனிசம் எனப்படும் நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் லீவோடோப் பாவும் ஒன்றாகும். பார்க்கின்சன் நோயாளிகளுக்கு மூளையில் டோப்பமைன் அளவை அதிகரிக்க எல்.டோப்பா பயன்படுத்தப்படுகிறது. டோப்பாமைனை உட்செலுத் தும்போது, இரத்தம் மூளைத் தடையைக் கடக்க இயலாமையால் அது பலனளிக்கவில்லை. எல்.டோப் பாவை உட்செலுத்தினால், நொதிகள் மற்றும் இணை அம்சங்கள் இடையே, எளிதில் அது டோபாமைனாக மாற்றப்படுகிறது. 1970 இல், அமெரிக்காவில், பார்க் கின்சன் நோய்க்கு மருந்தாக லீவோ-டேபோ ஏற்றுக் கொள்ளப்பட்டது. லிவோடோப்பா, முனைப்பான கடத்தல் முறை மூலம், இரைப்பை சிறுகுடல் பாதையில் ஏற்கப்படு கிறது. லீவோ-டோப்பா, ஒரு மருந்தாக மட்டும். செயல்படாமல், டோபாமைனின் முன்னோடியாகவும் இயற்கையிலேயே கிடைக்கும் அமினோ அமிலமாக வும் பணி புரிகிறது. பெருமளவில் எல்-டோப்பா கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் உட்சென்ற மருந்தின் 1% தான், மூளையை அடைகிறது. எஞ்சி யவை வளர்சிதை மாற்றங்களுக்குட்பட்டு வெளியேற் . றப்படுகின்றன. டோபாமைனின் ஒரு சிறு பகுதி நார் எபிநெஃப்ரினாகவும், அதிலும் ஒரு சிறு பகுதி எபி நெஃப்ரினாகவும், மாற்றப்படுகின்றன. மருந்துகளால் உண்டான பார்க்கின்சன் நோயைத் தவிர மற்ற அனைத்து வகையான பார்க்கின்சன் நோய்களுக்கும் லீவோ டோப்பா நல்ல பலனளிக் கிறது. 75% நோயாளிகள் நல்ல நிலையை அடை கின்றனர். நோயின் எல்லா அறிகுறிகளுமே மிகவும் விரைவாகச் சீரடைகின்றன. பார்க்கின்சன் நோயின் முக்கிய அறிகுறிகளான தசை இறக்கம், செயலாற்ற லின்மை, கை நடுக்கம் ஆகியவற்றில் முதல் இரண்டு அறிகுறிகளும் மிகுவிரைவாகச் சீரடைகின்றன. லீவோ டோப்பாவின் நல்ல விளைவுகள் பல ஆண்டு கள் நீடிக்கின்றன. பார்க்கின்சன் நோய் ஒரு நாட் பட்ட நோயாக இருப்பதால், அதற்கு முழுமையான தீர்வு கிடையாது. எனினும் லீவோ டோப்பா. நோயாளிகளின் வாழ்க்கையின் தரத்தை அதிகரிக் கவும், நீடிக்கவும் செய்கிறது. எல்.டோப்பா பயன் படுத்தப்பட்ட பின்னர், பார்க்கின்சன் நோயின் இறப்பு விகிதம் 50% குறைந்துள்ளது. மேலும் 10 வருடம் நோயுடன் வாழ்பவர்கள். லீவோ டோப்பா விற்குப் பின்னர் 20 ஆண்டுகள் வாழ்கின்றனர். . வேண்டா விளைவுகள். குமட்டல், வாந்தி, நிலை மாற்றக் குறை இரத்த அழுத்தம், இதயத் துடிப்பின் லய மாற்றம் போன்றவை. லீவோ டோப்பாவின் அல கைக் குறைத்தும் வை சீரடைகின்றன. சிலசமயம், கை, கால், முகம் ஆகியவற்றின் தசைத் தடிப்புகள் உண்டாகின்றன. சிலரிடம் மனத் தளர்ச்சியும், தற் காலை மனப்பான்மையும் உண்டாகின்றன. பைரிடாக்சின், ரிசெர்பின் ஆகியவை எல்.டோபா வினை புரிவதைத் தடை செய்கின்றன. லீவோ டோப்பா மாத்திரையாகவோ, குளிகையாகவோ. 100,250,500 மி.கி. அலகில் கிடைக்கிறது. துவக் கத்தில் 500-2000 மி.கி. வரை கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 8 கிராமுக்கு அதிகமாக லீவோ டோபா வைக் கொடுக்கக் கூடாது. இந்த மாத்திரையை உண விற்குப் பின் எடுத்துக் கொள்வது நல்லது. சில போது 250 மி.கி. லீவோ டோபாடைன் 25 மி.கி. கார்பி டோபா (carbidopa) அல்லது 50 மி.கி. பென்சர சைடை (benzerazide) சேர்த்துக் கொடுப்பதும் பலன ளிக்கும். அ. கதிரேசன் எல்ம் இதன் தாவரவியல் பெயர் அல்மஸ் (ulmus) ஆகும். இது அல்மேசி எனப்படும் இரு வித்திலைக் குடும் பத்தைச் சேர்ந்ததாகும். எல்ம் (elm) மரம் அதன்