பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 எல்ம்‌

320 எல்ம் அழகிய இலைகளுக்காகவும், கம்பிரமான தோற்றத் திற்காகவும் சாலைகளிலும், பூங்காக்களிலும் வளர்க் கப்படுகிறது. இம் மரங்கள் இலை யுதிர் காணப்பட்டாலும் ஒரு பொதுவாக வகைகளாகக் பாற் பசுமைத் (semi-evergreen) தன்மையும் பெற்றிருக் கும். ரோமானியர்களால் இங்கிலாந்தில் புகுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அமைப்பாக வளரியல்பு. பொதுவாக இது 20-50 மீட்டர் உயரம் வளரக்கூடிய மரமாகும். கிளைகள் மிகுதி யாகவும், பரவலாகவும் காணப்படும். இலைகள் மாற்றிலையடுக்கு இருவரிசையில் அமைந்திருக்கும். இலையடிச் செதில்கள் இலைக்கு இரண்டாகத் தனித்துக் காணப்படும். அவை விரை வில் உதிர்பவையாகும். இலைக் காம்பு சிறியது. இலைப்பரப்பு (blade) நீள் முட்டைவடிவம்; ஒழுங் கற்றது; ஒரு பகுதி அகலமாகவும் மறுபகுதி வால் போன்று குறுகியுமிருக்கும்; நீண்ட நுனி விளிம்பு இரட்டை ரம்பப் பல் போல் (biserrate) அமைந்திருக்கும். நரம்புகள் நெருக்கமாக ஒழுங்காக இருக்கும். பனிக்காலக் குருத்துகள் அடுக்கடுக்காக அமைந்த செதில் இலைகளால் காக்கப்படுகின்றன. இச்செதில்கள் கீழே 2 வரிசையிலும் மேலே போகப் போக 5 வரிசைகள் வரையிலும் அமைந்திருப்பதைக் காணலாம். மஞ்சரி. இலைக்கோண சைம். பொதுவாக இலைகள் தோன்றுவதற்கு முன்பு மலர்கள் வெளி வந்து விடும். அவை சிறிய சிவப்பு நிறக்கொத்து களாகக் காணப்படும். ஆனால் அ. பார்விஃபோலியா (U. parvifolia) போன்ற சில இலையுதிர் வகைச் சிற்றினங்களில் மலர்கள் இலையோடு கூடிய கிளை களில் தோன்றுவதும் உண்டு. ஒவ்வொரு மஞ்சரிக் கொத்திலும் பல மலர்கள் காணப்படும். ஆனால் என்ற ப்ரொசீரா (U. procera) இனத்தில் மஞ்சரி ஒரு மலரைக் கொண்டதாகும். பிற பக்க மலர்கள் படி மலர்ச்சியில் மறைந்துபோயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலர்கள் இருபாலானவை, அ. இலையுமைப்பு