பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்ம்‌ 321

5 எல்ம் 321 1. மஞ்சரிக்கிளை, எல்ம் கோணக்குருத்து, 3. மஜர் 1. சூலகம் க. ஒழுங்குமலர்கள்; அல்லி அற்றவை. அரிதாக ஒருபால் மலர்களும், இருபால் மலர்களும், சேர்ந்து காணப்படுவதுண்டு. புல்லிவட்டம். இணைந்த புல்லிகள் 4-9 ஆகப் பிளவுபட்டிருக்கும்; அல்லிவட்டம் இல்லை. மகரந்தத் தாள்கள் புல்லி இதழ்களுக்குச் சமமாகவும் அவற் றிற்கு எதிராகவும் அமைந்திருக்கும். சூலகம் மேல் மட்ட சூல்பை, சூலறை ஒன்று, சூல் ஒன்று, தொங்கு ஒட்டு முறை, சூல்தண்டு இரண்டாகப் பிளவுபட்டி ருக்கும். கனி. வெடியாக்கனி, சிறகுக்கனி ஆகும். கனித் தோல் மெல்லியதாக ஜவ்வுபோல் இருக்கும். மகரந் தச்சேர்க்கை பொதுவாகக் காற்று நாட்டம் கொண்டது. வகைப்பாடு, இந்த இனத்தில் 18 சிற்றினங் களுண்டு. குளிர் மிதவெப்ப அமெரிக்க, ஐரோப்பா. தென் ஆசியாவின் மலைப் பகுதிகளிலும் சமவெளி களிலும் காணலாம். வளர்ப்பு முறை. பொதுவாக விதைகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறும். பதியன்போட்டும், தூர்க் கன்றுகளைக் (suckers) கொண்டும் பெருக்கம் செய்வதுண்டு. விதைகள் மே அல்லது ஜூன் மாதங் களில் முதிர்ச்சியடையும். அவற்றை உடனே விதைக்கலாம். நட்ட விதைகளில் பெருவாரியானவை சில நாள்களில் முளைத்துவிடும். மற்ற விதைகள் அ.க. 6-21 சிறகுக் கனி 8. மலர் நெடுக்கு வெட்டுத்தோற்றம் அடுத்த இளவேனிற்காலம் வரை உறக்கநிலையி லிருக்கும். பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யும் போது குச்சிகளை இலையுதிர் காலத்தில் நடுவர். பிறகு வேர் விட்ட குச்சிகளை ஓராண்டு கழித்து எடுத்துத் தேர்வு செய்த இடங்களில் நடுவர். பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் மரங்கள் குறைவான விதைகளைக் காலம் தாழ்த்தித் தோற்று விக்கின்றன. இவ்வித மரங்களில் இலைகள் மிகுதி யாகக் காணப்படுவதால் இவை சிறந்த சாலை மரங்க ளாக உள்ளன. நன்கு வளர்ந்த மரங்களை இடம் விட்டு இடம் பெயர்த்து நடுவதுண்டு. இதற்குக் கிளைகளை வெட்டிச் சீர்செய்து கொள்ள வேண்டும். பொருளாதாரச் சிறப்பு. இவற்றின் கட்டைகள் கெட்டியாக முரடான பட்டையால் சூழப்பட்டிருக் கும். கட்டை உறுதியாக, கனமும் வலிவுமுள்ளதாக இருப்பதால் உடைப்பது எளிதன்று. வேளாண்தள வாடங்கள், வண்டிச் சக்கரம். குடம், கப்பல், படகு உறுப்புகள் முதலியன தயாரிக்க இதைப் பயன்படுத் துவர். கப்பல் கட்டும் தொழிலில் இம்மரத்தைப் பயன் படுத்தக் காரணம் அது நீரினுள் நாட்படக் கெடாமல் இருப்பதேயாகும். அ. கெம்பஸ்ட்ரிஸ் (U. campestris). இதை ஆங்கி வேய எல்ம் என்பர். இது உயரமான அழகு வாய்ந்த, கம்பீரமான மரமாகும். ஏறத்தாழ 45 மீ வரை வளரக்கூடியது. அ. ஃபோலியேசியா