எலி 325
எலி 325 பல்கிப் பெருகும். வெளியில் சுற்றித் திரிந்த எலிகள் மழையில் நனைவதைத்தவிர்ப்பதற்காகவே வீடுகளின் உள்பகுதியில் வாழ்கின்றன. பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் ஏற்படும் கேடுகளைத் தவிர்ப்பதற்காக மேடான பகுதிகளில் ஒருசில எலிகள் வளைகளை அமைத்துக் கொள்ளும். வயல் வெளிகளின் வரப்பு உயரமான பகுதி இவற்றை வளை அமைப்பதற்கு ஏற்ற இட மாகத் தேர்ந்தெடுக்கும். இருப்பினும், தாழ்வான பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான எலிக் குஞ்சுகள் ஆண்டுதோறும் பருவமழையின் வெள்ளப் பெருக்கால் அடித்துச் செல்லப்படுகின்றன. எலிகள் வியக்கத்தக்க வகையில் இனத்தைப் பெருக்கவல்லன. வறட்சி நாளில் வெள்ளப் பெருக்கு எலிகள் ஏற்படாமையால் அழிக்கப்படுவதில்லை. பிறந்த குஞ்சுகளில் பல பெரும்பாலும் பிழைத்துக் கொள்கின்றன. இதனால் எலிகளின் இனக்கூட்டம் பல்கிப் பெருகுகிறது. வரட்சிக் காலங்களில் மாறு பட்ட உணவுகள் இவற்றின் வாழ்விற்குப் போது மானவையாக இருக்கின்றன. வறட்சி முடிந்த பின் னர் மிகுதியான உணவு கிடைக்கும் நிலையில் இனப் பெருக்கத்தில் இவை முனைப்புடன் ஈடுபடுகின்றன. ஓர் இணை எலிகள் ஓராண்டிற்குள் ஏறத்தாழ 40.000 எலிகளைப் பெருக்கும் எனக் கண்டுள்ளனர். அடுத்த பருவத்தில் இவற்றின் பெருங்கூட்டம், அவை வாழும் எல்ை லையைக் கடந்து நாட்டின் பல பகுதி களிலும் தலைப்படுகின்றன. எனவே, நாட்டின் பெரும்பகுதி பாழ்படுகின்றது. ஆண்டுதோறும் குறிப் பிட்ட பருவங்களில் ஜெர்பில்லிகள் மெடாட்டுகள் வயல் எலிகள் கொள்ளை நோயால் பாதிக்கப்படுவ தோடு மனிதர்களுக்கும் இதனால் கேடு விளைவிக் கின்றன. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நெறிக்கட்டுக் கொள்ளைநோய் (bubonic plague) பல்லாயிரக்கணக் கான மனிதர்களைப் பலிகொண்டுள்ளது, இக்கொடிய. கொள்ளை நோய் முக்கியமாக எலிகளுடனும் அவற்றைத் தாக்கும் குறிப்பிட்ட பூச்சிகளுடனும் தொடர்புடையதாகும். இயற்கையாகவே இந்நோய் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க குறிப்பிட்ட பருவங்களில் தோன்றி அவற்றின் இனக்கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. நோய் கண்ட எலிகள் செத்ததும் அவற்றின் இரத்தத்தைக் குடித்த பூச்சிகள் இரத்தத் திற்காகப் பிற விலங்குகளை நாடும்போது அவையும் இந்நோயால் தாக்கப்படுகின்றன. குதிரை, நாய், பன்றி, குரங்கு போன்றவை தாக்கப்பட்டாலும் மனிதனே அதிகமாகப் பாதிக்கப்படுகிறான். பொது வான எலி-ராட்டஸ் ராட்டஸ், பழுப்பு நிற எலி, கொள்ளை வீட்டு எலி போன்றவை நம் நாட்டில் கொள்ளை நோய் பரப்புவதற்குக் காரணமான முக்கிய இனங் களில் ஒருசிலவாகும். எலிக்கடிக் காய்ச்சல் என்னும் நோயையும் எலிகள் பரப்புகின்றன. எலிகள் தாவர உண்ணிகளாக இருப்பதால் பாழாக்குகின்றன. பயிர்வகைகளைப் ஆனால் வீட்டு எலி