பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 எலி

326 6768

இப் பழக்கங்களே வை பிற ஊன் உண்ணிகளுக்கு இரையாகிவிடக் காரணமாக அமைகின்றன. பூனை கீரி, பறவை, பாம்பு, போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப் படாவிடில் நாட்டில் பல பகுதிகளில் மனிதன் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எண்ணிக்கை பெருகும்போது எலிகள் அவற்றின் இனத்தையே தாக்கிக் கொன்று இரையாக்கிக் கொள்வதும் உண்டு. பாலூட்டி வகையைச் சார்ந்த எல்லா ஒட்டுண்ணி களையும்விட மனி தனுக்கு எலிகளும், சுண்டெலி களுமே மிகுந்த தொல்லையையும், பயிர் அழிவை யும் விளைவிக்கின்றன. இவை பெரிய பொது மெடாட் இனம் எனப்படுபவை மிருதுவான மென்மயிர் உடைய வயல் எலிகள், இந்திய முந்நீர் கத்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவை உருண்டை வடிவக் காதுகள் உடையவை. வாக விளைச்சல் உள்ள வயல்வெளிப் பகுதிகளின் அருகிலும், அடர்த்தியான புதர்களருகிலும் காணப் படும். புதரின் வேர்களில், அல்லது புதர் வேலியின் அடியில் மிகச் சிறிய துளை செய்து வளையை அமைக்கும். பருத்திக்கும் நெல்லுக்கும் பேரிழப்பை விளைவிப்பதில் முதன்மையான இவை ஒருமுறையில் 6-8 குட்டிகளை ஈனும். வீட்டு எலி. இவற்றில் மூன்று வகை உண்டு. இராட்டஸ் இராட்டஸ் இராட்டஸ் (Rattus rattus rattus) இல் முதுகுப்பக்கம் குறுமென்மயிர் கறுப்பு நிறத்தோடும் வயிற்றுப் பக்கம் கறுத்த சாம்பல் நிறத்தோடும் காணப்படும். இராட்டஸ் இராட்டஸ் அலெக்சாண்டிரினிஸில் (Rattus rattus alexandrinus) முதுகுப் பக்கம் காவி கலந்த சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பக்கம் மங்கலான நிறத்திலும் இருக்கும். இவ்வினம் மத்திய தரை நாடுகளில் காணப்படுகிறது. இராட்டஸ் இராட்டஸ் ஃபுருஜிவோ ரஸ் (Rattus rattus frugivorous) என்னும் இனம் முதுகுப் பக்கத்தில் மஞ்சள் அல்லது சிவப்புக் காவி நிறத்தைக் கொண்டுள்ளது. வயிற்றுப் பக்கம் தூய வெள்ளை நிறம் காணப்படும். இவை நம் நகரங்களிலும் மாநகரங்களிலும் வீடுகள் நெருக்க மாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. ( பழுப்புநிற எலி-இராட்டஸ் நார்வெஜிகஸ். (Brown Rat - Rattus Norwegicus). இது மத்திய ஆசியாவின் வெப்பப் பகுதிகளிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய வகையாகும். தலையும் உடலும் சேர்ந்து 16-25 செ.மீ நீளமிருக்கும். வால் மட்டும் 15-18 செ.மீ. நீளம் இருக்கும். பெரிய நகரங்களில் இந்த எலி அங்கணத்திலும், (சாக்கடை) கழிவு நீர்க்கால் வாய்களிலும் காணப்படுகிறது. வெப்பமான சூழ் நிலைக் கேற்ப நீரின் அருகில் வாழ்வது மிகவும் அவசியமாகிறது. இந்தியப் புதர் எலி. கோலுண்டா எல்லியோட்டி (Golunda ellioti). இது குட்டையான உருண்டை வடிவத்தலையையும், வட்டவடிவக் காதுகளையும். ஓரளவிற்கு மயிர்களுடன் கூடியவாலையும் கொண்ட -து பழுப்புநிற எலி இந்தியப் புதர் எலி