பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலி 327

எலி 327 வெள்ளை வால் மர எலி முதுகுப் பக்கத்தில் சீராக அமையப்பெறாத மேல் மயிர் மஞ்சள் கலந்த காவி நிறத்தில் ஆனால் கறுப்பும் செம்மஞ்சளும் கலந்த நேர்த்தியான புள்ளி களைக் கொண்டதாக இருக்கும். இது இந்திய முந்நீரகத்தின் பெரும்பகுதி முழுதும் பரந்து காணப் படும். பெரும்பாலும் புதர்க்காடுகளிலும், காடுகளி லும் காணப்பட்டாலும் விளைநிலப் பகுதிக்கு அடிக் கடி வரும். அடர்த்தியாக வளர்ந்த புதர்களில் புல். நார் மெல்லிய குச்சி இவற்றால் ஆன நெருக்கமாகப் பின்னப்பட்ட கூட்டை அமைத்துக் கொள்ளும். இந்த எலி 10-12 செ.மீ. நீளமுடையதாக அதே அளவு நீளமுடைய வாலுடன் காணப்படும். வெள்ளை வால் மர எலி. (rattus blanfordi) 15-20 செ.மீ. நீளமுடைய இதன் வால் நிறம் மிகவும் தெளிவாக அமைந்திருக்கும். வாலின் நீளத்தில் முக்கால் பகுதி காவி நிறத்தில் உள்ளது. வாலின் நுனிப்பகுதி நுனிப்பகுதி நீளமான வெண் மயிரால் போர்த்தப்பட்டிருக்கும். இது தெற்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதியின் வறண்ட ஈரமான லையுதிர்க் காடுகளிலும், எப்பொழுதும் பசுமையாக உள்ள காட்டு மண்டலங்களிலும் காணப்படும். காடுகளில் இது பெரும்பாலும் மரங்களிலேயே வாழ்கிறது. மரப் பொந்து அல்லது பிளவுகளில் பெரிய கூட்டை அமைத்துக் கொள்ளுகிறது. மரங் களற்ற திறந்த வெளிப் பகுதிகளில் குன்றுகளின் இந்திய ஜெர்பில்லி அடியிலும் புதர்களிலும் தங்கும் இடத்தை அமைத்துக் கொள்ளும். ஜெர்பில்லி, இது மறிமான் எலி (antelope rat) என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்திய ஜெர்பில்லிக்கு- டாட்டெரா இண்டிகா (Tatera indica) என்று பெயர். இமயம் முதல் குமரி வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், இலங்கையிலும் காணப்படுகி கிறது. வாலைக் கொண்டு எலியினின்று இதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் வால், மயிரால் போர்த்தப்பட்ட நுனிக்குஞ்சத்துடன் tassel) இருக்கும். எலியின் பின் நுனிக்கால்கள் நீள மானவை.இப்பண்பு இதன் இயங்கும் தன்மையுடன் தொடர்பு கொண்டுள்ளது. விரைவாக ஓடும்போது பலமுறை தாவியும் துள்ளியும் குதித்தும் செல்லும். இந்தியாவில் வாழும் ஜெர்பில்லிகள் பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. இவற்றில் முக்கியமானவை இந்திய ஜெர்பில்லி, டாட்டெரா இண்டிகாவும், இந்தியப் பாலைவன ஜெர்பில்லியு மாகும். இரண்டிலும் இந்திய ஜெர்பில்லிதான் பெரியது. இது சிவப்புக்காவி நிறத்திலும், இளம் மஞ்சள் நிறம் அல்லது சாம்பல் நிறம் கலந்த பல நிறச் சாயலிலும் காணப்படும். டாட்டெரா இண்டிகா இந்திய முந்நீரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கிறது. வழக்கமாக ஒரு முறையில் 4-6 குஞ்சு களை ஈனுகின்றது. -கே.கே. அருணாசலம்