பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலிக்‌ கட்டுப்பாடு 329

Meltada) ஆகிய இனங்கள் முக்கியமானவை. இவற் றைப் பற்றிய விவரங்கள் அட்டவணையில் கொடுக் கப்பட்டுள்ளது. இவை தவிர நெல் வயல்களில் காணப்படும் சுண்டெலியும் தென்னந்தோப்புகளில் காணப்படும் எலிகளும் குறிப்பிடத்தக்கவை. கட்டுப்படுத்தும் முறைகள் மறு எலிப்பொறிகள் வைத்தல். வில்வடி வமுள்ள மூங்கி லாலான இப்பொறியை வயலில் வரம்புகளினருகே ஊன்றி, மாலை நேரங்களில் பொறியின் இருபுறமும் பொரி போன்ற உணவுப் பொருள்களை வைக்க வேண்டும். பொறியின் ஊடேசென்று பக்கத்தில் உள்ள ணவை எடுக்க முயலும்போது எலிகள் பொறியின் குறுக்கே மாட்டிக்கொண்டு கழுத்து நெறிப்பட்டு மரணமடைகின்றன. ஏக்கருக்கு 20-30 பொறிகள் தேவைப்படும். ஓர் பானைப் பொறி.8" விட்டமும் 6.5 உயரமும் உள்ள மண்பானையைச் சாய்த்து. தரையிலிருந்து மூன்று அங்குல உயரத்தில் மூன்று குச்சிகளின் மேல் வைக்க வேண்டும். அருகிலேயே தரையில் அப் பானைக்குச் சரியான மூடியைக் கவிழ்த்து வைக்க வேண்டும். பானையைச் சிறிது அசைத்தாலும் மூடி யின் மேல்கவிழ்ந்து மூடிக்கொள்ளுமாறு அமைக்க வேண்டும். அரிசிப் பொரி அல்லது தேங்காய்த் துண்டுகளைப் பானையினுள்ளும், மூடியின் மீதும் வைக்கவேண்டும். எலி மூடியிலுள்ளதைத் தின்று விட்டுப் பானைக்குத்தாவும் போது பானை கவிழ் வதால் எலி உள்ளேயேமாட்டிக்கொள்ளும்,ஓர் ஏக் கருக்கு 22-25 பானைகள் வரை தேவைப்படும். வளைகளைத் தோண்டி அழித்தல். எலியின் இனப் பெருக்கக் காலமான புரட்டாசி, தை, மாசி, பங்குனி மாதங்களில் எலிவளைகளைத் தோண்டி எலிகளைக் குட்டிகளுடன் ஒழிப்பது மிகவும் சிறந்தது. நெல் வயல்களில் அறுவடைக்குப்பின் பெருமளவில் எலிகள் வரப்புகளில்தான் காணப்படுகின்றன. வரப்புகள் காய்ந்து கெட்டியாவதற்கு முன், அதாவது அறு வடை முடித்து ஒருவாரம் அல்லது 10 நாள்களுக் குள் வரப்புகளை வெட்டி எலிகளையும், குட்டி களையும் பிடிக்க வேண்டும். பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் வளைகளில் எலிகள் இருப்பதைக் கண்டு கொள்ள உதவுகின்றன. மருந்து மூலம் கட்டுப்படுத்தல். எலிகளை விரை வாசு ஒழிக்க எலிக் கொல்லி வேதிப்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றை உடன் கொல்லும் நச்சுகள் (acute poisons) காலந்தாழ்த்திக் கொல்லும் நச்சுகள் (slow acting poisons) என வகைப்படுத்த லாம். உடன் கொல்லும் நச்சுகள். சோடியம் ஃபுளுரோ அசெட்டேட், தாலியம் சல்ஃபேட், சிங்க் ஃபாஸ்ஃ எலிக்கட்டுப்பாடு 329 பைட், நார்புரோமைடு போன்ற வேதிப்பொருள்கள் வ்வகையைச் சார்ந்தவை. மரணத்தை உண் டாக்கத் தேவையான அளவு மருந்தை ஓரே தடவை யில் உணவோடு கலந்து கொடுக்கப்பட வேண்டும். இம்மருந்துகள் பின்வரும் இடர்களை விளைவிக் கின்றன; மிகுந்த நச்சுத்தன்மை கொண்டவையாத லால். மனிதர்கள், மிருகங்கள் போன்ற பிற உயிர் களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. மரணத்தை ஏற்படுத்தும் மருந்தின் அளவை ஒரே தடவையில் உணவுடன் கலப்பதால், எலி களிடம் ஐயத்தை உண்டாக்கி, பொறி உணவுக் கூச்சத்தை (bait shyness) ஏற்படுத்துகின்றன. அதனால் எலிகள் நச்சு உணவை உண்ணாமல் விட்டுவிடும் வாய்ப்பு மிகுதி. உடன் கொல்லும் நச்சுக்களில் துத்தநாக ஃபாஸ் ஃபைட் மிகுதியால் பயன்படுகிறது. இது கரிய நிறத் தூளாகும். ஒரு பங்கு மருந்தை 49 பங்கு பொறி உணவுடன் (பொறி, வறுத்த வெங்காயம், மீன், கருவாடு, வடை போன்றவற்றுடன்) சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாகக் கலந்து எலிகள் நடமாடுமிடங்களில் வைக்க வேண்டும். இது மிகவும் கொடிய நச்சுப் பொருள். அதனால் ஒரு குச்சி கொண்டுதான் தை உணவுப் பொருளுடன் கலக்க வேண்டும். இவ்வாறு மருந்து கலந்த உணலை வைக்கும் முன் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நச்சுக் கலக்காத உணவினை வைத்து எலிகளுக்குப் பொறி உணவுண்ணும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எலிகள் அந்த உணவை விரும்பி உண்ணத் தொடங்குகின்றன. மேலும் எலிகளின் நடமாடுமிடங்களையும், எண்ணிக்கையையும் கூட மதிப்பிடலாம். எவ்வளவு உணவை ஓர் இரவில் உண்ணுமோ அதைப் போல் ருமடங்கு நச்சுக்கலந்த பொறி உணவை வைக்க வேண்டும். துத்தநாக ஃபாஸ்ஃபைட் எலியின் இரைப்பையிலுள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத் துடன் சேர்வதால் ஃபாஸ்ஃபின் என்னும் நச்சுப்புகை உண்டாகி எலி மரணமடைகின்றது. ஆனால் இம் மருந்தை வீட்டுக்கு வெளியேதான் பயன்படுத்த வேண்டும். சிறிது காலந்தாழ்த்திக் கொல்லும் நச்சுகள். சிறிதாகச் சில நாள்கள் சாப்பிட்டபின் மரணத்தை உண்டாக்கும் வார்ஃபரின், குமாரின், ராகுமின் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. வை எலியின் இரத்தம் உறையும் தன்மையை நீக்கிச் செயல்படுகின்றன. இரத்தத்தின் உறை திறனை நீக்கி, காலந் தாழ்த்திக் கொல்லும் நச்சுகள் மணமற்றவை. மரணத்தை உண்டாக்கத் தேவைப்படும் அளவு நச்சி னைச் சிறிது சிறிதாக ஏறத்தாழ 5-7 நாள்கள் வரை பொறி உணவோடு கலந்து வைப்பதால்