பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 எலும்பிளக்கி நோய்‌ (கால்‌ நடை)

. 332 எலும்பிளக்கி நோய் (கால் நடை) தோன்றிப் பிறகு ஒன்றுபடுகிறது. நீண்ட எலும்பு களின் முனைகள், தட்டை எலும்புகளின் விளிம்பு கள், சிறுபுடைப்புகள், முள்கள் ஆகியவை தனித்தனி தொப்பிபோல் முனையெலும்புகளால் ஆண்களை விடப் மூடப்பட் பெண்களில் எலும் டுள்ளன பாக்கம் விரைவில் நடைபெறுகிறது. எலும்பாக்க மையங்கள் தோன்றும் காலம், பிற எலும்புகளின் வளர்ச்சி முறை என்பவை அவரவர் ஊட்டச்சத்து, உடல் நலம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். முனை எலும்பு மையங்கள் (epiphyseal centre) தோன்றும் காலமும், எலும்புத்தண்டுடன் அவை ணையுங் காலமும் பின்வரும் விதிகளுக்கேற்ப அமையும்: ஒரு நீண்ட எலும்பின் முனைகளில் எலும்பாக்க மையம் எங்கு கடைசியாகத் தோன் றிற்றோ முனையெலும்பே அந்த எலும்புத் தண்டோடு முதலில் இணையும். ஓர் எலும்பின் இரு முனைகளில் எந்த முனையை நோக்கி ஊட்டத்தமனி செல்லுகிறதோ அந்த முனை எலும்புத் தண்டுடன் முதலில் இணையும். முனை யெலும்புச் சந்திப்பிலிருக்கும் குருத்தெலும்புகளி லிருந்து நீண்ட எலும்புகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. கடைசியாக இணையும் முனையெலும்பில் வளர்ச்சி விரைவாகவும் நீண்ட காலமும் நடக்கும். மிகு விரைவாக வளரும் முனையின் பக்கமாக ஊட்டத் தமனி இழுக்கப்படுவதால் தமனிப்பாதை சாய்வாகச் செல்கிறது. ஒரே ஒரு முனையுடைய எலும்பிலிருந்து முனையெலும்பில்லாத பக்கத்திற்கு வளர்ச்சித்தமனி செல்லும். மேற்பட்ட ஒரு முனையெலும்பு ஒன்றுக்கு மையங்களில் உருவாகுமானால், அவ்வாறு உருவாகும் பகுதிகளனைத்தும் ஒன்றுசேர்ந்த பிறகே எலும்புத் தண்டுடன் ணையும். எ.கா. மேற்கை எலும்பின் மேல்முனை. நீண்ட எலும்புகளின் வளர்ச்சி எலும்புத்தண் டிற்கும், முனையெலும்பிற்கும் இடையிலுள்ள குருத் தெலும்பிணைப்பில் நிகழ்கிறது. எலும்பறையின் உள்ளடுக்குகளில் கால்சியம் உப்பு மிகுதியாகப் வளரும். எலும்புத் படிவதால் எலும்பு கனமாக தண்டின் உள்சுவர் கரைந்து கொண்டே வந்தால் மஜ்ஜையறை பெரிதாகிக் கொண்டே வரும். எலும்பு நீளத்திலும் கனத்திலும் வளர்வதும், அதன் மஜ்ஜை யறை பெரிதாவதும் ஒரே சமயத்தில் நிகழும் செயல் களாகும். -கே.கே.அருணாசலம் எலும்பிளக்கி நோய் (கால்நடை) இது வளர்ந்த கால்நடைகளின் எலும்பைத் தாக்கும் நோயாகும். இந்நோய் இரத்தத்தில் வைட்டமின் D ஃபாஸ்ஃபரஸ் சத்து அல்லது இவ்விரு சத்துக் குறைவால் உண்டாகிறது. கால்நடைகளின் உணவில் ஊட்டப்பொருள்கள் குறைந்திருந்தாலோ, இப் பொருள்ளின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் விளைவாகவோ ஏற்றத்தாழ்வுகளின் இந்நிலை இந்நோய் ஏற்படலாம். மண்ணில் ஃபாஸ்ஃபரஸ் சத்துக் குறைவாக உள்ள பகுதிகளில் வளரும் கால் நடைகளிடம் காணப்படுகிறது. சினைப்பருவத்திலும், பால் கறக்கும் காலத்திலும் மாடுகளின் எலும்பி லிருந்து ஊட்டப்பொருள்கள் உறிஞ்சப்படுவதால் மாடுகள் இந்நோய்க்கு இலக்காக நேரிடலாம். மற்றும் ஃபாஸ்ஃபரஸ் சத்தின் வளர்சிதை மாற்றத் தைப் பாதிக்கக்கூடிய வயிற்றுக்கோளாறு, கல்லீரல், சிறு நீரக நோய் ஆகியவையும் இந்நோய் உண்டாக வேறு காரணங்களாகின்றன. அறிகுறி. இந்நோயால் தாக்கப்பட்ட கால் நடைகளின் பெரிய எலும்புகள், மார்பு எலும்புகள். முதுகெலும்புகளின் முள் ஆகியவை உருமாறியும் வளைந்தும் காணப்படும். எலும்பிலும் மூட்டுகளிலும் வலி இருக்கும். எலும்புகள் எளிதில் உடையும் தன்மை கொண்டிருக்கும். இந்த நோயுடைய கால் நடைகள் மாறி மாறி நொண்டும்; நடக்கும்போது எலும்பு நொறுங்குவது போன்ற ஒலி ஏற்படும். பின்கால்களின் முதுகு வளைந்திருக்கும். ஹாக் உட்பக்கமாக மூட்டுப் பாதிக்கப்பட்டு, வளைந்து காணப்படும். நடப்பதற்கு விருப்பம் இல்லாமலும், நீண்டநேரம் படுத்துக்கொண்டும் இருக்கும். இடுப் பெலும்பு தாக்கமுற்ற மாடுகள் கன்றுபோடச் சிரமப் படும். பால் உற்பத்தி குறைதல், சினைப்படாமை, கல் மண் போன்ற பொருள்களை நக்குதல், உடம்பு மெலிந்திருத்தல் போன்றவை இந்நோயின் முதல் நிலையில் காணப்படும். இறுதியில் மாடு படுத்துக் கொண்டேயிருந்து சாப்பிட முடியாமல் இறந்துவிடும். இந்நோயை அறிகுறிகள் மூலமாகவும், கதிர் வீச்சு முறைகளாலும் எளிதில் அறியலாம். உடலில் எந்தச் மருத்துவம். கால்நடைகளின் சத்துப் பொருள் குறைவாக உள்ளதோ அதைக் கண்டறிந்து அச்சத்துள்ள தீனியைக் கொடுக்க வேண் டும். சுண்ணாம்புச் சத்து, ஃபாஸ்ஃபரஸ்சத்து, வைட்டமின் D ஆகியவை ஏற்ற விகிதத்தில் நடைகளின் உணவில் தரப்படவேண்டும். எலும்பு முதுகெலும்புள்ளவற்றின் கால் -இரா. சீனிவாசன் மென்மையான தசை நரம்பு முதலிய திசுக்களுக்கும், மூளை, கண், இதயம் போன்ற உறுப்புகளுக்கும் பற்றுக்கோடாகவும், பாதுகாப்பாகவும் உள்ள உறுதியான அகச்சட்டகத் திற்கு எலும்புக்கூடு என்று பெயர். உறுதியான பல