334 எலும்பு
334 எலும்பு வைட்டமின் D குறைவானால் எலும்பு நன்கு வளரா மலும், உரம் பெறாமலும் மென்மை ஆகிவிடும். இதனால் ரிக்கெட்ஸ் என்னும் கணை நோய் உண் டாகும். இந்நோய் வந்தால் எலும்பின் வடிவ மைப்பு மாறி உடல் அருவெறுப்புடன் தோன்றும். புகையிலை. சாராயம், அபின் போன்ற போதைப் பொருள்களால் எலும்பின் நலம் கெடும். வளரும் பருவத்தில் எலும்புக்கூடு செம்மையாக வும் சமமாகவும் இருக்க உடற்பயிற்சி செய்வதும் இயல்பாக நிற்கும் போதும் நடக்கும் போதும் நல்ல நிலையைப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம். இம் முறையைப் பின்பற்றாவிடில் கூன், முடம் போன்ற ஊனங்கள் ஏற்படலாம். இளமைக்காலத்தில் எலும்பு எளிதில் வளையுமாதலால் எலும்பு வளர்ச்சிக்கோ அமைப்புக்கோ நலம் தரும் பயிற்சிகளை அப்பருவத் தில் மேற்கொள்வது நல்லது. ஓரெலும்புக்கு ஒரே திசையில் எப்போதும் அழுத்தம் ஏற்பட்டுக் கொண் டிருந்தால் அவ்வெலும்பு சிறிது வளைந்து கோணலாக லாம். இவ்விதமான அழுத்தமும்,தவறான நிலைகளில் நிற்பதும், உடம்பை இறுக்கும் உடை அணிவதும், உடலில் சில தசைகளுக்கு மட்டும் அளவுக்கு மீறிய வேலை கொடுப்பதும், உடலின் சமநிலைக்குச் சீர் கேட்டை விளைவிக்கும். அச் சமநிலையை உண் டாக்கக்கூடிய வேறு சில தசைகளுக்கு வேலையே கொடுக்காமலிருந்தாலும் ஊனம் ஏற்படலாம். முதுகுத்தண்டின் கழுத்து, இடை ஆகிய பகுதி களில் இரண்டு முன்வளைவுகளும் மார்பு, பிட்டம் ஆகிய பகுதிகளில் இரண்டு பின் வளைவுகளும் உள்ளன. இவ்வாறு இரு பகுதிகளிலும் முன்பின் வளைந்திருப்பதால் முதுகுத்தண்டு ஒரு வில் போல அமைந்து நடப்பது, குதிப்பது. ஓடுவது முத லியவற்றால் ஏற்படும். அதிர்ச்சி, தலை மூளை முதலியவற்றைத் தாக்காமல் காக்கின்றது. இவ் வளைவுகள் முதுகுத்தண்டிற்கு மீள்சக்தியையும் அளிக் கின்றன. உடலின் அமைப்புக்கும் அழகூட்டுகின்றன. ஆனால் மார்புப்பகுதியில் முதுகுப்புறம் அதிகமாக வளைந்துவிட்டால் அதைக் கூன் என்பர். இது முதுமையில் இயல்பாக உண்டாவதோடு பெரும் பாலும் நின்றுகொண்டோ அமர்ந்துகொண்டோ வேலை செய்வோர் முன்னுக்கு வளைந்துகொண்டே இருப்பதாலும் நாற்காலியில் உட்காருவோர் முன் னுக்கு வளைந்து உட்காருவதாலும், முன்னால் மிகவும் தாழ்வான பலகை, மேசை முதலிய வற்றில் எழுத வளைந்து உட்காருவதாலும், மண்வெட்டுதல், களை பறித்தல், நாற்று நடுதல். நெல்லரித்தல் முதலியவற்றில் வளைந்தே வேலை செய்வதாலும், முதுகுத் தசை வலிமை குன்றுவதா லும், தலையை முன்னுக்கு வளைத்துக் குனிந்தே நடப்பதாலும் எந்த வயதிலும் இத்தகைய கூன் ஏற் பட வாய்ப்பு உண்டு. முள்ளந்தண்டின் பின்புறத்தில் நன்கு இறுகப் பிணைந்திருக்கும் தசை நாண்கள் 1. நிற்கும் நிலை சரியான முறை 2. தவறான முறை 2 பலமுறை இழுக்கப்படுவதால் அவை தளர்ந்து நீண்டு விடுகின்றன. முள்ளெலும்புகளுக்கிடையே உள்ள நார்க்குருத்தெலும்பு வில்லைகள் முன்பக்கமே அழுந் தியழுந்தி, அப்பக்கம் ஆப்புவடிவமாகி விடக்கூடும். கூன் ஏற்பட இவையும் காரணமாகலாம். முதுகுத் தண்டு உடலை வளைப்பதற்கும் முறுக்கித் திருப்பு வதற்கும் ஏற்ப அமைந்திருப்பது பல வழிகளில் நன்மையாயிருந்தாலும் கூன் போன்ற குறைகளும் எளிதாக ஏற்பட ஏதுவாகிறது. கூன் விழுந்தவர்களின் மார்பு தட்டையாகிவிடுவதால் மூச்சு இழுத்தல் மேலாகவே நடக்கும். இதுவும் உடல்நலத்துக்குக் கேடு விளைக்கும். பெரும்பாலான மனிதர்கள் வலக்கையையே மிகு தியாகப் பயன்படுத்துவதால் முதுகுத்தண்டின் மார் புப்பகுதி நேர் செங்குத்தாக இராமல் இடப்பக்கம் சிறிது வளைந்திருக்கும். இதைச் சமன் செய்ய இடப்பகுதியில் சிறிது வலப்பக்கம் வளைந்திருக்கும். ஆனால் மிக உயரமான மேசையின் மேல் வைத்து நீண்டநேரம் எழுதுவதாலும், ஒரே வகையில் புத்தகத்தையோ வேறு சுமையையோ எப்போதும்