பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 எலும்புக்‌ கூட்டு நோய்‌ (கால்நடை)

336 எலும்புக் கூட்டு நோய் (கால்நடை) அடித்தோல் திசு. கேலியா (galea) அல்லது நார்த் திசுப்படுக்கை, இதனுடன் இணைக்கப்பட்ட பிடர் முண்டு தசை மற்றும் இதன் அடியில் காற்றறைத்திசு அடுக்கு, மண்டை ஓட்டுடன் ஒட்டிய புறக் கபாலத் திசு ஆகியவை அடங்கும். மண்டை ஓட்டுத் தோலில் ஏற்படும் காயங்களை வெட்டுக்காயம், கிழிந்த காயம், குத்துக்காயம், இரத்தக்கட்டு, தோல் முழுதும் கழன்று வரும்காயம், எனப் பலவிதமாகப் பிரிக்கலாம். தோலில் உள்ள நீட்சித்தன்மையால் கிழிந்த காயத்திற்கும் வெட்டுக் காயத்திற்கும் வேறுபாடு காண்பது கடினம், இதைக் கண்டறிய உருப்பெருக்கி தேவைப்படும். நீதித்துறை யினர் இதனை அறுதியிட்டுக் கூற வேண்டுமென விரும்புவர். மண்டை த் தோலில் இரத்தநாளங்கள் கூடுதலாக இருப்பதாலும், தோலின் நீட்சித்தன்மையாலும் இரத்த ஒழுக்கு அதிகம் காணப்படும். உடனடியாக இரண்டு அடுக்குத் தையல் போடுவதாலேயே இதை நிறுத்தலாம். இவ்வாறு செய்தால்தான் இக்காயங்கள் எளிதில் ஆறும். கேலியாவின் கீழ் சேரும் இரத்தக் கட்டு, கபாலத்தின் அடிவரை பரவும். மண்டை ஓட்டை ஒட்டியுள்ள புறக்கபாலத்திசுவின் அடியில் உள்ள இரத்தக்கட்டு தலையில் எலும்புக்கிடையில் உள்ள தையலுடன் ஒட்டி இருப்பதால் தடுத்து நிறுத்தப்படும். இதை ஊசி கொண்டு உறிஞ்சியோ கத்தி கொண்டு கீறியோ வெளியேற்றலாம். இக்காயங்களில் தொற்று வந்தால் அது கபாலத் தையோ, மூளையையோ பாதிக்க ஏதுவாகிறது. நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுப்பதால் இதைத் தடுக்கலாம். சிலசமயம் தலைமயிர் மின்விசிறி அல்லது எந்திரங்களில் மாட்டிக் கொண்டு மண்டைத்தோல் முழுதும் கழன்று வர ஏதுவாகிறது. அதிக இரத்த ஓட்டம் இருப்பதாலும் உருப்பெருக்கிக் கண்ணாடி உதவியாலும் மிக நுண்மையான அறுவை செய்து தோலைக் குணப்படுத்தலாம். கழுத்துக் காயங்கள். பொதுவாகக் கழுத்தில் ஏற் படும் காயங்கள் மன நோயாளிகள் கத்திக்கொண்டு கழுத்தைத் தானே அறுத்துக் கொள்வதாலோ வெட்டு, குத்து, துப்பாக்கிக் குண்டு துளைத்தல் போன்ற விபத்தில்ஏற்பட்ட கிழிசல் ஆகியவற்றாலோ ஏற்படுகின்றன. கழுத்தில் மூச்சுக்குழல், கழுத்துத் தமனி, ஜுகுலர் சிரை மற்றும் முக்கியமான நரம்புகள், தைராயிடு போன்ற உறுப்புகள் இவை இவை இக்காயங் களால் தாக்கமுறக் கூடும். மருத்துவம், காயங்கள் எந்த இடத்தில் இருந் தாலும், சான்றாக ஹயாய்டு எலும்புக்கு அல்லது கீழே, தைராய்டு படலம், தைராய்டு மேல் குருத் தெலும்பு, கிரிக்காய்டு குருத்தெலும்பு அல்லது மூச்சுக் குழல் என எந்தப் பகுதியாயிருந்தாலும் மருத்து வத்தில் கவனிக்க வேண்டியவை மூன்று செயல்கள் ஆகும். அவை, இரத்த ஒழுக்கை வெட்டுண்ட தமனி அல்லது சிரையைப் பிடித்துக் கட்டு வதால் நிறுத்தப்படும். காற்றுப்பாதையில் தடை யில்லாமலிருக்க மூச்சுக்குழலில் துளையிட்டு உலோக அல்லது ரப்பர்க் குழாய் பொருத்த வேண்டும். துண்டிக்கப்பட்ட தசை மற்றும் நரம்புகளை இணைக்க வேண்டும். உண்டாக்கலாம். கழுத்துப்பகுதிக் காயங்களால் வரும்விளைவுகள். இரத்தப் போக்கைக் கட்டுபடுத்த உடனடியாகக் குளுக்கோஸ், தண்ணீர், பிளாஸ்மா, டெக்ஸ்ட்ரான் மற்றும் இரத் தம் ஏற்ற வேண்டும். காற்றுக் குமிழ்கள் இரத்த நாளம் வழியே சென்று தடை தூய்மையற்ற கருவிகளால் உண்டாக்கப்படும் காயங் களில் தொற்று ஏற்பட்டு மார்புப்பகுதியிலும் பரவக் கூடும். நிமோனியா அல்லது துரையீரல் அழற்சி, மூச்சுக் குழாய்ச் சுருக்கம் ஆகியவையும் உணவுக் குழல், மூச்சுக்குழல் புறத்தோலுடன் ஒரு பாதையை உண்டாக்குதல், ஒலிநாண் பாதிப்பால் பேச்சில் ஒரு மாற்றம் உண்டாதல், தோலுக்கடியில் காற்றுப் பரவித் தோலை அழுத்தும்போது நெறு நெறுவென்ற ஒலி உண்டாதல் ஆகிய விளைவுகளும் ஏற்படலாம். மா. ஃபிரெடரிக்ஜோசப் 900 எலும்புக் கூட்டு நோய் (கால்நடை] எலும்பு உடலுக்கு அமைப்பைத் தருகின்றது. எலும்பு களின் கூட்டுச் சேர்க்கையே எலும்புக் கூடு ஆகும். தசைநார்கள், கால்சியம் ஃபாஸ்ஃபேட் மற்றும் கார்ப னேட் ஆகியவற்றின் நெருங்கிய கூட்டுக்கலவை எலும்பு ஆகும். இளம் கால்நடைகளின் எலும்புகள்60% தசை நார்கள் சேர்ந்தவையாகவும், வயதான கால் நடைகளில் எலும்புகள் 60% சுண்ணாம்பு உப்புகள் சேர்ந்தவையாகவும் இருக்கும். எலும்புகள் தசைகளின் ஆழத்தில் இருப்பதாலும், அதிகமான அளவு இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினாலும், உடனடியாகத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைப்போல் நோயின் தன்மையை அறிய இயலாது. எலும்புகளில் கடும் அழற்சி. இது எலும்புகளில் வெளித்தாக்குதல் ஏற்படுவதாலும், சிதைந்த தசை கள் மூலம் நுண் கிருமிகள் எலும்புகளை அடைவ தாலும் ஏற்படுகிறது. மேலும் எலும்புகளில் தசை நார்கள் மற்றும் தசை நாண்களில் (ligaments and tendons) ஏற்படும் வீக்கம், எலும்பு சூழ் இணைப்புத் திசுப்படலத்திற்குப் பரப்பப்பட்டு இதனை உண்டாக் குகிறது.