பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புக்கூடு 337

எலும்புக்கூடு 337 இவ்வாறு ஏற்படும்போது பாதிக்கப்பட்ட பகுதி யைத் தொட்டால் வலி ஏற்படும். காய்ச்சலும், சுறு சுறுப்பு இல்லாமையும், நகருவதற்குத் தயக்கமும் ஏற் படும். பாதிக்கப்பட்ட பகுதி தொடுவதற்குச் சூடாக வும், வீக்கமாகவும் காணப்படும். தற்காலிக முடம் காணப்படும். இந்த வீக்கம் பின்பு முற்றி விடும். இதன் விளைவாகச் சீழ் வைத்தும், தசைகள் அழுகிய நிலையில் மேல் தோலைத் துளைத்துக் கொண்டு தசையும் சீழும் வெளியில் வரத் தொடங்கும். இதனால் நீடித்த முடம் ஏற்படலாம். எக்ஸ்ட்டோசிஸ். இந்நோயில் எலும்பின் திசுக்கள் தொடர்ந்த உறுத்துதலால் எலும்பின் வெளிப்பகுதி யில் தனி எலும்பாக வளர்ச்சி அடையும். எலும்புப் புற்றுநோய். இந்நோயில் சாதாரண எலும்பைவிட நான்கு பங்கு பருமனில் எலும்பு காணப் படும் ரிக்கட்ஸ். இது இளம் கால்நடைகளில் வைட்ட மின் அல்லது பாஸ்ஃபரஸ் அல்லது இவை இரண்டின் குறைவால் ஏற்படும் நோயாகும். இதில் நீண்ட எலும்பின் முடிவுகள் பெரியதாகவும், எலும்பின் நீண்ட பகுதி வளைந்தும் காணப்படும். விலா எலும்பு கள் விலாக் குருத்துடன் சேரும் இடங்களில் சிறு முடிச்சுக்களான வீக்கம் காணப்படும். து சிறிய உருத்திராட்ச மாலை போன்ற அமைப்பில் இருக்கும். ளம் கால்நடைகள் நடக்கும்போது வலி ஏற்படு வதால் சிரமப்படும். ஆஸ்ட்டியோ போரோசிஸ். இது வயதிற்கு வந்த கால்நடைகளில் காணப்படும் எலும்பு நோயாகும். எலும்புகள் மிருதுவாக இருக்கும். இது கருத்தரிக்கப் பட்ட கால்நடைகளில் சாதாரணமாகக் காணப்படும். வைட்டமின் D குறைவே இந்த நோய்க்குக் காரணம். இதனால் கன்று ஈனும் பொழுது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்படலாம். து ஆஸ்ட்டியோமெய்லிட்டிஸ். இது காயங்களுக்குப் பின் எலும்பில் ஏற்படும் நோயாகும். எலும்பு தோன்றி மஜ்ஜையில் வீக்கம் கால் நடைகளைத் துன்புறுத்தும். ஆஸ்ட்டியோ பெட்ரோசிஸ். இந்த நோயில் கோழி களின் கால்கள் தடித்துக் காணப்படும். இது பொது வாக ஏவியன் லியூகோசிஸ் காம்பிளக்ஸ்' நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளில் காணப்படும். என்ற ஆஸ்ட்டியோ ஃபைபிரோசிஸ். எலும்புகளில் சுண் ணாம்புச் சத்துக் குறைவதால் எலும்புகள் எளிதில் முறியக்கூடியவையாக இருக்கும். இது குதிரைகளில் மிகுதியாகக் காணப்படும் நோயாகும். ஆஸ்ட்டியோ கோண்ட்ரோசிஸ். எலும்புகளும், குருத்தெலும்புகளும் சிதைவுறுகின்றன. இதனால் முதுகெலும்பின் இடைப்பட்ட பகுதி நாளடைவில் சீர் அ.க.6-22 கெடும்; மேலும் முதுகெலும்பு ஒன்றிலிருந்து ஒன்று நழுவி விடும். ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ். இது இரண்டு எலும்பு களின் சேர்க்கையில் உண்டாகும் மூட்டுகளில் எலும்பு களின் நாட்பட்ட அழற்சியால் உருமாறிய மூட்டு களை உருவாக்கும். ஆஸ்ட்டியோ டிஸ்ட்ரோஃபி. இது பல வகையான தாது உப்புகள், வைட்டமின் D குறைவால், எலும்பு களில் ஏற்படும் நோயாகும். இதனால் எலும்புகள் எளிதில் முறியும் தன்மையுடையவையாக மாறிவிடும். -எஸ். ராம்பிரசாத் எலும்புக்கூடு கண். முதுகெலும்பிகளில் எலும்பாலான இருபக்கச் சமச் சீருடைய அகச்சட்டகம் எலும்புக்கூடு எனப்படுகிறது. இது உடலுக்குக் கட்டமைப்பையும் தலை. இதயம் போன்ற உறுப்புகளுக்குப் பாதுகாப்பையும் தருகிறது. உடலின் பல உறுப்புகளின் அசைவிற்கும், உடல் இயங்க உதவும் தசைகளுக்குப் பொருந்துமிட மாகவும் நெம்புகோலாகவும் பயன்படுகிறது. நடுத்தர வயதுடைய மனித உடலில் இருநூறுக் கும் மேற்பட்ட எலும்புகள் உள்ளன. இளமையில் தனித்தனியாக இருந்த சில சிற்றெலும்புகள் இந் நிலையில் ஒன்று கூடியுள்ளன. எலும்புகள், அருகில் உள்ள எலும்புகளுடன் பொருந்த மூட்டுகள் (joints) உண்டாகின்றன. மூட்டுகளில் ஓர் எலும்பு இன்னொன் றைப் பற்றிக் கொண்டு, அசையும் முறையில் இருக் கும். இவற்றில் சில மூட்டுகள் அசையா மூட்டுகள். (எ.கா. மண்டையோட்டு எலும்புகள்.) சில அசையும் மூட்டுகள் (எ.கா. கை, கால் மூட்டுகள்) எலும்பு கள் ஒன்றோடொன்று பொருந்துமாறு மூட்டுப்பரப்பு களின் வடிவங்கள் இருக்கும். அவ்வெலும்புகள் வளையத்தக்க நார்க்கட்டுகளாலும் மூட்டுறைகளா லும் பிணைக்கப்பட்டிருக்கும். எலும்புக்கூடு. அச்செலும்புப் பகுதி (axial skeleton) சேர்க்கை (தொங்கு) எலும்புப்பகுதி (appendicular skeleton) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும். தலை, கழுத்து, உடல் (சுவந்தம்) ஆகியவற்றின் எலும்புகள், மண்டையோடு முள்ளந் தண்டு, மார்பெலும்பு ஆகியவை அச்செலும்புப் பகுதி யிலும், கை கால் எலும்புகள், தோள் இடுப்பு வளையங்கள் ஆகியவை சேர்க்கை எலும்புப் பகுதி யிலும் அடங்கும். முதுகுத்தண்டு. இது எலும்புக்கூட்டின் அச்சாகும். உடலிலுள்ள மற்ற எல்லா எலும்புகளுக்கும்