340 எலும்புத்திசு
340 எலும்புத்திசு கனிம உப்புகள். எலும்புத் திசுக்களில் இழை களினூடே காணப்படும் சிமெண்ட் பாகத்தில் பெரும்பான்மையான தாது உப்புகள் தேங்கியுள்ளன. உலர்ந்த எலும்பில் 65 விழுக்காடு எடை உடையன. கால்சியம் பாஸ்ஃபேட் உப்பு மொத்த கனிமப் பொருள்களில் 85 விழுக்காட்டை எட்டு கின்றது. வை எலும்பு உப்புப் பொருள்கள், அடிப்படைத் தாதுப்பொருளால் ஆன உருவமைப்பை ஒத்து விளங்குகின்றன. இவை ஒழுங்கான முறையில் இழை களுக்கு ஏற்ற வகையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளை நார்களுக்குக் அமைப்பு குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. . சிமெண்ட். எலும்பிலிருக்கும் தனித் தனி இழை களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்க ஒரு வகை சிமெண்ட் பொருள் தேவைப்படுகிறது. இதுவே எலும்புக் கூழ்ப் பகுதியின் ஆதாரப் பொருளாகும். இந்தச் சிமெண்ட் பொருள் கொழ கொழவென்று ருக்கின்றது. அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைக் கப்படுவதுடன் ஒரு கட்டு அடுக்குகள் மற்றொரு கட்டு அடுக்குகளுடன் ணைக்கப்பட்டுள்ளன அடுத்தடுத்துக் கட்டுகளாக விளங்கும். அடுக்கு களுக்குச் சான்றாகத் திகழ்வது ஹவேர்சியன் (haver sian) பகுதியாகும். இங்கு அடுக்குகள், ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பாகுபடுத்தி உணர்ந்து கொள்ள ஏதுவாக ஒரு தனிப்பட்ட சவ்வினால் ஆனவையாக விளங்குகின்றன. இந்தச் சவ்வு மிகவும் அழுத்தமாகக் கறை உண்டாக்கக் கூடிய ரிப்ராக்டைல் பொருளால் ஆனது. எலும்புத் திசுக்கள் அழிக்கப்படும்போது தான் இந்தச் சிமெண்ட் சவ்வு மிகவும் அதிகமாகத் தென்படும். லாக்குனார் பெட்டகம். (lacunar capsule} லாக் குனாவும் (lacuna) கெனாலிகுலஸ் (canaliculi) களும் ஒருவகைச் சிறப்புச் சிமெண்ட்டால் பிரிக்கப்பட்டுள் ளன. இந்தச் சிறப்புக் கரிம சிமெண்ட்டால் உருவான லாக்குனார் பெட்டகம் சிமெண்ட் சவ்வை ஒத்த உரு வமைப்பு உடையதாகும். இது எல்லா இடங்களிலும் ஒன்று போலவும் வெகு அதிகமான விலகல் எண் கொண்டதாகவும் அமையப் பெற்றுள்ளது. இந்த லாக்குனார் பெட்டகம் ஒரு பளபளப்பான வட்டத் தைப் போன்று நுண்கருவி மூலம் நோக்கும்போது தென்படுகின்றது. வெள்ளி நிறமிகளுடன் இணைக்கும் போது இந்தப் பெட்டகம் சுறுப்பாகக் காணப்படுகின்றது. கார நிறமிகளாலும் இப்பெட்டகத்தைக் காண முடிகின்றது. இவை வேதிப் பொருள்களான அமிலங்கள், காரங்கள் போன்றவற்றின் தாக்கு தலுக்கு இடம் கொடுப்பதில்லை. அவற்றை எதிர்க் கும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. போது. புதிய எலும்புக் கூழ்ப் பகுதி அமைக்கப்படும் அது வெள்ளை இழைகளால் நிரம்பப் பெற்றுள்ளது. ஆனால் இதை நுண் கருவியால் காண இயலவில்லை. ஏனெனில் இவை மியூக்கோ பாலிசாக்கரைட்களுடன் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் தாது உப்பு வகையைச் சார்ந்த ஹைட் ராக்சி அமெடெய்ட் என்ற கால்சியம் பாஸ்பேட் புதிதாக உருவாக்கப்பட்ட எலும்புக்கூழ்ப் பகுதியுள் தேக்கப்படுகிறது. தொடக்ககாலத் திசுவியல் அறிஞர்கள் (பாமர், 1885) தாதுப் பொருள் அல்லாத எலும்புக் கூழ்ப் பகுதி ஒன்று உள்ளதாகவும் அது ஆஸ்டியாய்டு என்றும் எலும்புக்கூழ்ப் பகுதீயின் விளிம்பில் தோற்றமளிப்பதாகவும் கூறியுள்ளனர். சில்வர் நைட்ரேட் மூலம் வான்கோஸா என்பவர் நுண் ணோக்கி வாயிலாக எலும்பில் தாதுப் தாதுப் பகுதி இருப்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும் மெக்லீன், ப்ளும் (1946) ஆகிய இருவரும் எலும்புக்கூழ்ப் பகுதி கால்சியம் உப்பால் ஆனது என்றும், இந்தத் திசு எலும்புதான் என்றும் தெளிவுபடுத்த உதவினர். இப்போது எலெக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்த்ததில் ஒரு மைக்ரான் மெல்லிய இழை அடர்த்தி யில் கால்சியப் படிவு இல்லாத ஓர் எலும்பில், திசுவின் முன்னோடியைக் காண முடிகிறது. இது விலங்குகளிலும் எலும்பு உருவாக்கப்படும்போது இருப்பதை மெக்லீன், யூரிஸ்ட் ஆகியோர் 1968 இல் புலப்படுத்தினர். எலும்புத்திசு - ரா. அமுதா . இது ஓர் உறுதியான, கால்சியம் சேர்ந்த இணைப்புத் திசுவாகும். இத்திசு அடங்கிய உறுப்புகளை எலும்பு கள் எனலாம். இத்திசுவில் எலும்புச் செல்களும் (Bone cells) கனிமப் பொருள்கள், கரிமப் பொருள்கள் நிறைந்த இடையீட்டுப் பொருளும் அடங்கியுள்ளன. கரிமப் பொருள்களில் முக்கியமானவை கொல்லாஜன் ஆஸ்ஸியோ மியூகாய்டு, புரதம் முதலியன அடங்கும். எலும்புத் திசுவின் எடையில் 38% கரிம இடையீட்டுப் பொருளாகும். கனிம இடையீட்டுப் பொருள் எலும்பிற்கு உறுதியைத் தருகிறது. இதில் கால்சியம் பாஸ்ஃபேட், கால்சியம் கார்பனேட், கால்சியம் ஃபுளோரைடு, மக்னீசியம் ஃபுளோரைடு ஆகியவை அடங்கும். எலும்புகள் கடற்பஞ்சுத் தன்மையுடைய எலும்பு. அடர்த்தியான அல்லது உறுதியான எலும்பு என இருவகைப்படும். இவ்விருவகை எலும்புகளும் ஒரே எலும்பில் அமைந்துள்ளன. ஒரு நீள எலும்பின் .