பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புத்‌ தோலி 343

கொண்டிருந்தன. உடல் தலை, நடுஉடல், வால் ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தன. உடல் முழு தும் புறச்சட்டகத்தால் (exoskeleton) சூழப்பட்டி ருந்தது. ஆனால் எலும்புகளாலான உட்சட்டகங் களை (endoskeleton) இவை பெற்றிருக்கவில்லை. தலை ஒரு தடித்த கேடயம் போன்ற தகட்டாலும், உடல் குறுக்கே நீளமான எலும்புத்தகடுகளாலும் பாதுகாக்கப்பட்டிருந்தன. தலையின் மேற்புறத்தில் இரண்டு கண்கள் நெருங்கியனவாகவும் மேல் நோக்கிப் பார்க்கும்படியாகவும் அமைந்துள்ளன. அவற்றின் அருக கிவ் ஒரு நாசித்துளையும் காணப்படுகின்றது. கண்களுக்குப் பின்னால் அமைந்துள்ள பைனியல் துளை மூளையுடன் தொடர்பு கொண்டு ஓர் ஒளி யுணர் உறுப்பாகச் செயல்பட்டது. தலையின் பக்கங்களிலும் பத்துச் செவுள் துளைகள் காணப் பட்டன. வால் துடுப்பின் மேற்பகுதி நீண்டு பெரி தாகவும் மேல் நோக்கியும் கீழ்ப்பகுதி குட்டை யாகவும் சிறிய நீளத்துடன் கீழ்நோக்கியும் அமைந்து சமமற்ற வால் துடுப்பாக அமைந்திருந்தன. இவ்வால் துடுப்பு நீரில் நீந்துவதற்கு உதவியது. நீந்தும்போது உடல் பக்கவாட்டில் உருளா வண்ணம் தடுக்க முதுகுத் துடுப்பு ஒன்று வாலுக்கு முன் காணப்படு கிறது. வாலுக்கு முன்னாலுள்ள ஒரு முள், மீன்கள் நீந்தும்போது வால் துடுப்பை விறைத்து நிற்கச் செய்ய உதவியது. இவ்வகை மீன்கள் நீரின் அடித் தளத்தில் வாழ்ந்தன. எலும்புத் தோலி 343 பிளவுகள் கிடையா. துளை அமைந்துள்ளது. வாய் உடலின் நுனியில் அமைந்துள்ளது. தலையின் இருபக்கத்திலும் சாய் வாகப் பக்கத்திற்கு எட்டுச் செவுள் காணப்படுகின்றன. இணைத்துடுப்புகள் மலவாய்த் துடுப்பு சிறிதே வளர்ச்சியடைந்திருந்தது. செபலாஸ்பிடாவின் வால் துடுப்பைப் போல் அல்லா மல், இவற்றின் கீழ்வால் துடுப்பு பெரிதாகவும், மேல் துடுப்பு சிறியதாகவும் அமைந்துள்ளன. இவற் றிற்குத் தலைகீழ்ச் சமமற்ற வால்துடுப்புகள் என்று பெயர். இவ்வித வால்துடுப்பு, மீன் முன்னோக்கி நீந்த உதவுவதோடு மேல் நோக்கியும் செல்லப் பயன்படுகிறது. இவை ஒரு நீர் மேற்பரப்பு நீந்தியே ஆகும். செஃபலாஸ்பிஸ் டீரோலெபிஸ், அனாஸ்பிடா. பெர்க்கினியா போன்றவை இவ்வரிசையின் சிறந்த சான்றுகளாகும். ஆழமான உடலைக் கொண்ட இவை செபலாஸ் பிடாவை விடச் சிறிது நீளமானவை. இவற்றின் உடல் செபலாஸ்பிடாவைப் போல எலும்புத்தகடு களாலோ செதில்களாலோ போர்த்தப்பட்டிருக் கிறது. கண்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளன. ஒற்றை நாசித்துளை கண்களுக்கிடையே மேலே காணப்படுகிறது. இவற்றின் பின்னால் பைனியல் டீரோலெப்பிஸ் பழமை வாய்ந்த டீராஸ்பிடா. இவை மிகவும் என்புத்தோலியாகும். இவ்வரிசையின் சிறந்தஎடுத்துக் காட்டாக டீராஸ்ஸை கூறலாம். சிறிய இவ்விலங்கு தடித்த கவசம் பெற்றுள்ளது. உடல் முன் அகன்று, பின் குறுகிய வடிவம் கொண்டிருப்பதால் நீந்துவதற்கு ஏதுவாயிருந்தது. வேறு சிலவோ பெரியனவாகவும். தட்டையான உடலமைப்புக் கொண்டனவாகவும் இருந்தன.நீரின் அடித்தளத்தில் இவை வாழ்ந்தன. கண்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளன. தலையின் பின்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாகச் செவுள்களுக் கென்று ஒற்றை வெளித்துளை காணப்படுகிறது. தலை தவிர எஞ்சிய உடல் சிறிய செதில்களால் மூடப்பட்டுள்ளது. தலைகீழ்ச் சமமற்ற வால் துடுப் பைப் பெற்றுள்ளது. ஆனால் ஒற்றைத் துடுப்புகள் காணப்படவில்லை. இவையும் ஒரு மேற்பரப்பு நீந்தியே ஆகும். . சீலோலெபிடா. தீலோடஸ், லானார்க்கியா போன்றவை இவ்வரிசையின் சிறத்த எடுத்துக்காட்டு களாகும். தட்டையான உடலைக் கொண்ட இவை பக்கவாட்டில் கண்களையும் பிளவுபட்ட, சமமற்ற வால் துடுப்பையும் பெற்றுள்ளன. இவற்றின் உடல்கள் நுண் முள்களால் போர்த்தப்பட்டுள்ளமையால்