பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலெக்ட்ரான்‌ 349

வேகத்துடன் அணுக்கருவிற்கு வெளியே குறித்த பாதைகளில் இயங்குகின்ற துகளாகும். எலெக்ட்ரா னின் நிறை பருப்பொருளின் நேர் மின்னூட்டம் பெற்ற துகளான புரோட்டான், மின்னூட்டமற்ற துகளான நியூட்ரான் ஆகியவற்றின் நிறையில் 1/1836 பங்கே ஆகும். இதன் நிறை me=9.1×10-31 கிலோ கிராம் ஆகும். மின்னூட்டம். எலெக்ட்ரானின் மின்னூட்டம் எதிர்த்தன்மை கொண்டது. இதன் எதிர் மின்னூட் டம் 8 ~1.6 × 10--19 கூலும் ஆகும் (-e. 4.8 × 10-10 நிலை மின் அலகு). இதன் மின்னூட் டம் புரோட்டானின் நேர் மின்னூட்டத்திற்குச் சமம். எலெட்ரானின் மின்னூட்டம் 1909 இல் முல்லிகன் என்பாரால் எண்ணெய்த்துளி ஆய்வு மூலம் மிக நுட்பமாகக் கணக்கிடப்பட்டது. இம்முறையில் காற் றில் தெளிக்கப்பட்ட எண்ணெய்த்துளி ஒன்று ஈர்ப் புப்புலம், மின்புலம் ஆகியவற்றின் செயற்பாட்டில் காற்றின் பாகுநிலை விசைக்கு எதிராக இயங்கும் போது அது திரட்டிக் கொள்ளும் மின்னூட்ட அளவு அளந்தறியப்பட்டது. இவ்விதம் அளந்தறியப்பட்ட மின்னூட்ட அளவுகள் ஒரு சிறும மதிப்பின் முழு மடங்குகளாக இருந்தமை காணப்பட்டது. இச்சிறும மதிப்பே எலெக்ரானின் மின்னூட்டமாகும். எலெக்ட்ரானும் பருப்பொருளும். கதிரியக்கத்தின் போது அணுக்கரு வெளியிடும் பீட்டாக் கதிர்கள் எலெக்ட்ரான்களால் ஆனவை. வேறு சிதைவு நிகழ்வு களிலும் எலெக்ட்ரான்கள் வெளியாகின்றன. மின் னூட்டமுள்ள மேசான்கள் சிதைவுறும்போது இறுதி விடு துகளாக மேசானின் மின்னூட்டத்தைச் சுமந்து எலெக்ட்ரான்கள் வெளியாகின்றன. இதுவரை அறிந்த விவரங்களின்படி எலெக்ட்ரான் நிலைப் பாடுடையதே. பருப்பொருளின் பெரும்பாகத்தை எலெக்ட்ரான்களே அடைத்துக் கொள்கின்றன. அணுக்கரு அணுவின் 10-13 பங்கையே அடைக்கிறது. மிகுதி இடத்தைக் கருவைச் சூழ்ந்துள்ள எலெக்ட்ரான் மேகமே அடைத்துக்கொள்கிறது. பருப்பொருளின் வேதிப் பண்புகள் எலெக்ட்ரான் மேகத்தாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. எலெக்ட்ரான் ஃபெர்மி - டிராக் புள்ளியியல் விதிக்குக் கட்டுப்படுவதால் அது ஒரு ஃபெரிமியான் எனக் குறிப்பிடப்படுகிறது. ஃபெர்மியானாதலால் எலெக்ட்ரான் பாலி ஒதுக்கல் கோட்பாட்டிற்கு உட்படுகிறது. எ அடி எலெக்ட்ரானின் தற்சுழற்சி. எலெக்ட்ரானின் டிப்படைப் பண்புகளுள் ஒன்று சுழற்சி. இதன் காரணமாகவே தன்னுள் அமைந்த அச்சைப் பற்றிய கோண உந்தத்தை எலெக்ட்ரான் பெற் றுள்ளது. நுண்ணமைப்பு வரிகள், சீமன் விளைவு போன்ற நிகழ்ச்சிகளை விளக்க கூட்ஸ்மிட்டும் ஊலன்டெக்கும் 1925 இல் எலெக்ட்ரான் தற்சுழற்சி எலெக்ட்ரான் 349 பற்றிய கருத்தினை வெளியிட்டனர். புவி தனக்கென அமைந்த ஓர் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு அதே சமயத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டிருப்பதைப் போல் எலெக்ட்ரான் தனக்கென அமைந்த ஓர் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதுடன் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் அணுக்கருவையும் சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே எலெக்ட்ரானுக்குச் சுற்றுப்பாதை இயக்கம் காரண மாக ஒரு கோண உந்தமும் சுழற்சி இயக்கம் காரணமாக ஒரு கோண உந்தமும் ஆக இருகோண உந்தங்கள் உண்டு. எலெக்ட்ரானின் மொத்தக் கோண உந்தம் என்பது இவ்விரு கோண உந்தங் களின் தொகுபயனே ஆகும். எலெக்ட்ரானின் h 27 தற்சுழற்சியின் அளவு 雪飘 17 ஆகும். என்பது ஆகும். (h- ப்ளான்க் மாறிலி) ஓர் எலெக்ட்ரான் இரு தற்சுழற்சி நிலை களைப் பெற்றுள்ளது. இவை காந்தப்புலத் திசைக்கு இணையாகவோ எதிரிணையாகவோ அமைந்த நிலை களே ஆகும். எலெக்ட்ரான் துகளாகக் கருதப் பட்டாலும் அதற்கு அலைப் பண்பு உண்டு என டீ ப்ராக்லி என்பார் விளக்கினார். இந்த எலெக்ட் ரான் அலையின் பண்புகளைக் கொண்டு எலெக்ட் ரானின் இயக்கம் கணிக்கப்பட்டது. ஒப்புமைக் கொள்கை மற்றும் குவாண்டம் இயக்கவியல் கோட் பாடுகளுக்கேற்ப டிராக் என்பார் எலெக்ட்ரானின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சமன்பாடுகளை வெளியிட்டார். ஒப்புமையற்ற அலைக்கோவை கூறமைந்த கோவை என்பதனை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரானின் இரு தற்சுழற்சி நிலை களை விளக்கலாம். அலைக்கோவையின் ஒன்றை யொன்று நேர் சாராத தன்னிச்சையான திசையன்கள் எலெக்ட்ரான் பெற்றிருக்கக்கூடிய இரு தற்சுழற்சி நிலைகளைக் குறிக்கும். பாசிட்ரான். 1928 இல் டிராக் ஒப்புமை அலைச் சமன்பாட்டை அமைத்தார். இதன்படி எலெக்ட் ரானின் அலைக்கோவை நான்கு கூறுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே குறித்த உந்த முள்ள அலை நான்கு அகநிலைகளைப் பெற்றிருக்கும். இவை இரு மதிப்புகள் கொண்ட தற்சுழற்சி நிலை களும் ஆற்றல் நிலைகளுமே ஆகும். p எனும் உந்தத்திற்கு ஆற்றல்+(mec?)? + p*c? ஆகும் c ஒளியின் திசை வேகமாகும். டிராக் சமன்பாடுகள் எலெக்ட்ரானின் செயற்பாட்டினை நிறைவுபட விளக்கியதோடன்றி வேறோர் உண்மையையும் முன்னுரைத்தன. அதாவது எலெக்ரான்கள் தமது பொது நிலையான எதிர் மின்னூட்ட வடிவில் மட்டுமன்றி எதிர் ஆற்றலையும் நேர்மின்னூட்டத்தை யும் பெற்றிருக்க முடியும் என்பதை இச்சமன்பாடுகள் விளக்கின. இத்தகு எதிர் ஆற்றலையும் நேர் மின்னூட்டத் துகளையும் கற்பனை செய்வது