356 எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு
356 எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு ஒளிர்வு நிகழ்ச்சி. எலெக்ட்ரான் கனத்தாக்கு நிகழ்ச்சியில் ஒளிர்வு உண்டானதுபோலவே அயனி கனத்தாக்குதலிலும் உண்டாகிறது. பொருளினுள் ஏற்படும் அயனி ஒளிர்வு எதிர்மின் ஒளிர்வைப் போன் றது . அனி கனத்தாக்குதலால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்பைச் சார்ந்து சிக்கலாக இருக்கும். ணையாக படிகக் கட்டமைப்பு விளைவு, எளிய கனசதுரப் படிகத்தில் அதன், பக்கங்களுக்கு அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகவும் வரிசையாகவும், அவற்றிற்கிடையில் திறந்த பாதையாகவும் இருக்கும். இந்தப் பாதைகளின் வழியாகச் செலுத்தப்படும் துகள்கள் எலெக்ட்ரான்களின் மீது மட்டும் மோதிச் சிறிதளவு ஆற்றலை மட்டும் இழப்பதால் நெடுந் தொலைவு செல்ல முடியும். பிரதிபலிப்பு எண்ணும், வெளியேற்று எண்ணும் மிகவும் குறைவாக இருக்கும். கட்டமைப்புக் குறைபாடுகள் இருந்தால் திறந்த பாதையில் சில இடங்களில் அணுக்கள் தடையாக இருக்கும். இவற்றில் மோதும் துகள்கள் பிரதிபலிப்ப தாலும் மற்ற அணு, அயனிகளை வெளியேற்றுவதா லும் பிரதிபலிப்பு எண்ணும், வெளியேற்று எண்ணும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் கட்டமைப்புக் குறைபாடுகளை ஆராயலாம். பயன்கள்.பரப்பிலுள்ள அணுக்களை ஆராய்ந்து தேவைக்கேற்ப மாற்றியமைக்க எலெக்ட்ரான் மற்றும் அயனி கனத்தாக்கு நிகழ்ச்சி பயன்படுகிறது, தூய்மை யான பரப்பை உருவாக்கி வெற்றிடத்தில் அதன் மீது எலெக்ட்ரான் மற்றும் அயனி கனத்தாக்கு நடத்தும் போது வெளிப்படும் ஆகர் எலெக்ட்ரான்களின் ஆற் றலை அளவிட்டுப் பரப்பின் தன்மையை ஆராயலாம். க்கருவி ஆகர் எலெக்ட்ரான் நிறமானி எனப்படும். விளைவு எலெக்ட்ரான் வெளியேற்ற எண் 1 ஐவிட அதிகமாக உள்ள பொருளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த மின்சாரத்தை அதிகப்படுத்தலாம். ஒளி பெருக்கிக் குழாயில் (photomultiplier tube) இந்நிகழ்வு நடைபெறுகிறது. அணுத்தெறிப்பு மூலம் பொருளிலி ருந்து ஒவ்வோர் அணுப் பரப்பாகப் பிய்த்து உட் பரப்பை ஆராயலாம். ஒரு பரப்பைத் தூய்மைப்படுத் தவும், சமப்படுத்தவும், மேலுள்ள அணுப்பரப்பை நீக்கி உட்பரப்பைக் காணவும் அணுத்தெறிப்பு பயன் படுகிறது. தெறித்த அணுக்களின் நிறையை அளவிட் டுப் பரப்பின் தன்மையை ஆராய விளைவு அயனி நிறைமானி உதவுகிறது.பரப்பில் மோதிச் சிதறிய குறைந்த ஆற்றல்கொண்ட முதன்மை அயனிகளின் ஆற்றலை அளந்து பரப்பை ஆராயலாம். இக்கருவி அயனிச் சிதறல் நிறைமானி எனப்படும். படிகக் கட்ட மைப்பின் திறந்த பாதைகளில் முதன்மைத் துகள் களைச் செலுத்திப் பிரதிபலிப்பு எண், வெளியேற்ற எண், அயனிகளின் நிறை முதலானவற்றை அளவிட் டுக் கட்டமைப்புக் குறைபாடுகளைக் கண்டறியலாம். ஆர்.கேசவமூர்த்தி எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு காந்தத் தற்சுழற்சித் தன்மையுள்ள ஓர் அணு வமைப்பை வலிவான நிலைக்காந்தப் புலத்தில்வைத்து அதனூடே மாறுதிசை கொண்ட மற்றொரு காந்தப் நுண்ணலைபிறப்பி வீச்சலைபிறப்பி ஆய்பொருள் அலைபெருக்கி மற்றும் அலைதிருத்தி மின்காந்தம். படம் 1. காந்த ஒத்திசைவு ஆய்வு அமைப்பு பதிவுக் கருவி