பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலெக்ட்ரான்‌ கவர்‌, கருகவர்‌ வினைப்பொருள்‌ 363

எலெக்ட்ரான் கவர், கருகவர் வினைப்பொருள் 363 0 ஃபீனாக்சைடு அயனி எனவும், மற்றொன்றைத் தாங்கி (substrate) எனவும் கொள்ளலாம். காட்டாக, கீழ்க்காணும் வினையில், RBr + -OH ROH + Br RBr மூலக்கூறு தாங்கியாகும்; ஹைட்ராக்சைடு அயனி தாக்கியாகும். இரண்டு வினைப்படு பொருள் களில் ஹைட்ராக்சைடு அயனி போன்று ஆற்றலும் தீவிரமும் கொண்டதைத் தாக்கியெனவும், அல்க்கைல் புரோமைடு போன்று தீவிரம் குறைந்த மூலக்கூறைத் தாங்கி எனவும் கருதலாம். சூழ்நிலை மற்றும் தாக்கியின் தூண்டுதலால் தாங்கி மூலக்கூறு சமச் சீரற்ற பிளவுற்றுக் கரிம நேரயனி அல்லது கரிம எதிரயனி போன்றவேதி இடைப்பொருள்கள் உண்டா கின்றன. பின்னர் அவை தாக்கியுடன் சேர்ந்துவிளை பொருள்களைக்கொடுக்கின்றன. எனவே தாக்கியைப் பொறுத்து வினைவழி அமைகிறது. இரு யான தாக்கிகள் உள்ளன. அயனி வகை எலெக்ட்ரான் செறிவு மிகுந்த ஃபீனாக்சைடு போன்றவற்றை நேர்மின்னேற்றமுடைய டயசோனியம் அயனி (PhN,) அல்லது அயினிகள் அல்லாத, எலெக்ட்ரான் செறிவுகுறைந்த கரு-மையம் அல்லது அணு (O V0, )தாக்கி வினை நிகழச் செய்யும். இவ்வாறு ஒரு சேர்மத்தில் எலெக்ட்ரான் செறிவு மிகுந்துள்ள இடங்களை நாடிச் சென்று தாக்கி வினை நிகழச் செய்யும் வினைப்பொருள்கள். எலெக்ட்ரான் கவர்வினைப் பொருள்கள் (electro philes) எனப்படும்.electro = எலெக்ட்ரான், phile விரும்பும், அதாவது எலெக்ட்ரான் விரும்பும் வினைப் பொருள்கள் பின்வரும் எலெக்ட்ரான் கவர் வினைப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள்: H. H,O+, HNO₁, H₂SO,, PhN,+ BF, AICI,. ZnCl₂, FeCl3, Bra CC=O >g=0 , RCOC! எலெக்ட்ரான் கவர் வினைப்பொருள்கள் பங்கு கொண்டு நிகழ்த்தும் வேதி வினைகள் எலெக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள் (electrophilic substitution reactions) எனக்குறிக்கப்படுகின்றன. எலெக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள் அரோமாட்டிக் சேர்மங் களில் மிக அதிகமாக நடைபெறுகின்றன. (எ.கா.) நைட்ரோ ஏற்றம், சல்ஃபானேற்றம், அல்க்கைல் ஏற்றம் போன்றவை. எலெக்ட்ரான் செறிவு குறை வாக உள்ள கருமையத்திற்கு எடுத்துக்காட்டாக மெத்தில் குளோரைடிலுள்ள கரியணுவைக் கூறலாம். H H -C---CI H மிக்க எலெக்ட்ரான் செறிவு கரு-மையத்திற்கு எடுத்துக்காட்டாக அம்மோனியா (NH ) அமீன்கள் (RN) ஆகியவற்றைக் கூறலாம். இவ்வாறு எலெக்ட் ரான் செறிவு குறைவாக உள்ள இடங்களை நாடிச் சென்று தாக்கி வினை நிகழ்த்தும் வினைப்பொருள் கள். கருகவர் வினைப்பொருள்கள் (nucleo- philes) எனப்படும் (nuclco = அணுக்கரு, phile = விரும்பும்; அதாவது அணுக்கரு விரும்பும் வினைப் பொருள்கள்).எ.கா.

-OH, RO-, RS-, X-, HSO-,, CN- >o: H H- N: H H 7 S: H RMgBr, R-Li, LiAlH