பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 எலெக்ட்ரான்‌ காந்தத்‌ திருப்புமை

366 எலெக்ட்ரான் காந்தத் திருப்புமை அமிலம், நாஃப்தலீனிலிருந்தும் ஆந்தத்ர சீனிலிருந்து முறையே கிடைக்கும் சாய அடிப்படைப் பொருள்கள், அலிசரின் சாயம் பெறுதல் போன்ற வினைகளும், விளைபொருள்களும் எலெக்ட்ரான் கவர்வினைகளின் இன்றியமையாமையை விளக்குகின்றன. வ.ந. வேதாந்த தேசிகன் E எலெக்ட்ரான் காந்தத் திருப்புமை எலெக்ட்ரான், எதிர்மின்னூட்டத்துடன் தற்சுழற்சி கொண்டுள்ளதால். காந்தப் புலத்தில் இருக்கும் போது அது தன் காந்தத் தன்மையை வெளிக் காட் டுகிறது. எலெக்ட்ரானுக்குக் காந்தத் திருப்புமை உண்டென்பதை முதன் முதலில் ஜார்ஜ் உலன்பெக். கூல்ட்ஷ்மிட் என்போர் விளக்கினர். முரணிய சிமன் விளைவை (anamolous Zeeman effect) ஆய்வு செய்து அதற்கு அடிப்படை இக்காந்தத் திருப்புமைதான் எனத் தெரிவித்தனர். தற்சுழற்சியால் எலெக்ட்ரா னுக்குக் கோண உந்தமும், காந்தத் திருப்புமையும் உண்டென்பது பின்னர் தெளிவாயின. டிராகின் சார்பியல் கோட்பாட்டில் செல்லும் எலெக்ட்ரானும் இச்சிறப்புப் பண்புகளுடன் செல்கிறது என்பதும் தெளி வானது. சாமர்ஃபீல்டு என்பாரின் கொள்கைப்படி, ஓரணு விலுள்ள எலெக்ட்ரான்கள், நீள் வட்டப் பாதைகளி லும் சுற்றி வரலாம். இதன்படி எலெக்ட்ரானின் இயக்கக் கோண உந்தம், P. = Me lh 27 படம் 1 m - எலெக்ட்ரான் பொருண்மை = 1 ஆனால் " eh 4πm இது pb ஒரு போர் மேக்னட்டான் அலகு. He Pe = காந்தத் திருப்புமை எந்திரக் கோண உந்தம் என்பது சுழலியக்கக் காந்தத் தகவு (gyromagnetic artio) எனப்படும். th P. = 2n எனக் குறிப்பிடப்படுகிறது. 1= 1,2,3 என்ற கோண உந்த குவாண்டம் எண்ணாகும்; h - பிளாங்க் மாறிலி. தற்சுழற்சியால், எலெக்ட்ரானின் சுழற்சிக் கோண உந்தம் Pe sh S 2 T +1 அல்லது - 4 ஆகும். -தற்சுழற்சிக் குவாண்டம் எண்ணாகும். வட்டப் மின்னூட்டமுடைய எலெக்ட்ரான் பாதையில் சுற்றுவதால் காந்தப்புலன் ஏற்படுகிறது. பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரானை ஒரு நுண்காந்தமாகக் கருதினால் காந்தத் திருப்பு மையை e எனக் கொள்ளலாம். Ho Po - எலெக்ட்ரான் மின்னூட்டம் படம் 2. S Mo N.