பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலெக்ட்ரான்‌ குழாய்‌ 369

நிக்கலால் ஆன வலை போன்ற அமைப்புடைய கிரிடு காணப்படும். டிரையோடின் நேர்மின்வாய் மாறாத்திசை மின் னோட்டத்தின் நேர்மின்முனையுடனும், எதிர்மின் வாய் எதிர்மின்முனையுடனும் இணைக்கப்படும் போ து எதிர்மின்வாயி னால் உமிழப்படும் வெப்ப எலெக்ட்ரான்கள் நேர்மின்வாயினால் கவர்ந்திழுக் கப்படுகின்றன. எனவே சுற்றில் மின்னோட்டம் பாய் கின்றது. தகுந்த மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கிரிடுக்குக் கொடுப்பதால் எலெக்ட்ரான்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த இயலும். நேர்மின்வாய்க்கும், எதிர்மின்வாய்க்கும் இடை யேயுள்ள மின்னழுத்தம் (VA) மாறாதிருக்கும்போது நேர்மின்வாய் மின்னோட்டத்திற்கும் (IA) கிரிடு மின்னழுத்தத்திற்கும் (UG) வரையப்படும் வரைபடம் படம் 4இல் காட்டியபடி அமைந்துள்ளது. இது கிரிடு நிலைச்சிறப்பு வரைபடம் எனப்படும். எலெக்ட்ரான் குழாய் 369 AIG UAL UA2 UA3 UA4 UAL>UAz>UA;7UA ; UG ரு Ca Cal H ア படம் 3. மறைமுகச்சூடேறும் டிரையோடு. நேரிடைாகச் சூடேறும் டிரையோடு சுழி கட்டுப்படுத்தும் கிரிடின் மின்னழுத்தம் யாக (UG) 0) இருக்கும்போது டிரையோடு டையோடு போன்று செயல்படுகின்றது. கிரிடின் மின்னழுத்தம் எதிர்மின்வாயின் மின்னழுத்தத்தை விட அதிகமாக இருக்கும்போது அதாவது கிரிடு மின்னழுத்தம் நேர்மின்னழுத்தமாக (UG > 0) இருக்கும்போது, கிரிடினால் தோற்றுவிக்கப்படு கின்ற மின்புலம் நேர்மின்வாய்க்கும் எதிர்மின் வாய்க்கும் இடையே தோன்றுகின்ற மின்புலத்தின் திசையிலேயே அமைந்துள்ளது. இந்நிலையில் எதிர் மின் வாயிலிருந்து நேர்மின்வாய்க்குச் செல்லும் எலெக்ட்ரான்களின் வேகம் கிரிடு மின்னழுத்தம் அ. க. 6-24 படம் 4. சுழியாக இருக்கும்போதுள்ள வேகத்தை விட மிகுதி யாக இருக்கும். கிரிடு மின்னழுத்தத்தை மேலும் அதிகமாக்கும்போது நேர்மின்வாயை ஓரலகு நேரத் தில் வந்தடையும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை யும் மிகுதியாக இருப்பதால் நேர்மின்வாயில் மின்னோட்டம் மிகுந்திருக்கும். மாறாக, கிரிடுக்கு (UG < 0) கொடுக்கும்போது நேர்மின்வாயினால் கவரப்படும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை குறைகின்றது. எனவே நேர்மின்வாயில் மின்னோட்டம் குறைகின்றது. ஒரு குறிப்பிட்ட கிரிடு மின்னழுத்தத்தில் நேர்மின்வாய் மின்னோட்டம் முற்றிலும் குறைந்து சுழியாகின்றது. (IA (0-) அந்தக் கிரிடு மின்னழுத்தம் வெட்டு மின்னழுத்தம் (cut off voltage) எனப்படும். கிரிடு மின்னழுத்தத்தை மாற்றிச் சுற்றில் பாயும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்துவதால் இது கட்டுப்படுத்தும் மின்வாய் எனப்படுகிறது. டிரையோடு எலெக்ட்ரான் குழாயின் செயல் திறனை மூன்று மாறிலிகள் உணர்த்துகின்றன. அவை சுடத்துதிறன் (gm), பெருக்குதிறன் (″) நேர்மின்வாய் மின்தடை (Ra). டெட்ரோடு. டிரையோடு குழாயில் எதிர்மின் வாயினால் உமிழப்படும் எலெக்ட்ரான்கள் நேர் மின்வாய்க்கும் கிரிடுக்கும் இடையே தேக்கப்படுவ தால் அவ்விருமின்வாய்களும் ஒரு மின் தேக்கியாகச் செயல்படுகின்றன. இத்தகைய குறைபாடு நீக்கப்பட்ட எலெக்ட்ரான் குழாய் டெட்ரோடு ஆகும். இதில் கட்டுப்படுத்தும் கிரிடுக்கும் நேர்மின்வாய்க்கும் இடையில் மற்றுமொரு கிரிடான திரைகிரிடு (screen grid) படம் 5 இல் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது.