372 எலெக்ட்ரான் தற்சுழற்சி
372 எலெக்ட்ரான் தற்சுழற்சி போது ஓர் ஆற்றல் நிலையும் அணுவுக்கு உண்டா கிறது. 1=0 என்ற நிலை தவிர மற்ற நிலைகளில் ஆற் றல் மட்டங்கள் எலெக்ட்ரான் தற்சுழற்சியால் இரண் டாகப் பிரிகின்றன. 1=0க்கு ஓர் ஆற்றல் நிலையும் 1=1க்கு இரண்டு ஆற்றல் நிலைகளும் உள்ளன. அணு 1 = 1 என்ற நிலையிலிருந்து l = 0 என்ற நிலைக்கு மாறும்போது இரட்டைவரி நிறமாலை உண்டா கிறது. சோடியத்தின் மஞ்சள் நிற இரட்டை வரிகள் (D வரிகள்) இவ்வாறே தோன்றுகின்றன. ஆற்றல் மட்டம் பிரிதல், எலெக்ட்ரானின் சுற்றுப் பாதைக் கோண ந்தம், தற்சுழற்சிக் கோண உந்தம் இவற்றின் இணைப்பு நிலையைப் பொறுத்து எலெக்ட்ரானின் மொத்தக் காந்தத் திருப்புத்திறன் உள்ளது (படம்-2). வெளிப்புறச்சுற்றில் ஓர் எலெக்ட்ரான் உள்ள அணுவில், 1=0 என்ற நிலையில் இருக்கும்போது அணு, எலெக்ட்ரான் தற்சுழற்சி யால் மட்டும் காந்தத் திருப்புதிறன் பெறுகிறது. இந்தக் காந்தத் திருப்புதிறன் வெளிக்காந்தப்புலத் திற்கு ணையாகவோ, எதிரிணையாக கவோ செயல் படுகிறது. அணு ! = 1 என்ற நிலையில் இருக்கும் போது j-1/2 அல்லது 312 என்றும் இந்த இரு நிலை களுக்கும் லாண்டே g காரணி மதிப்பு 2/3, 4/3 என்றும் ஆகிறது. அதாவது காந்தத் திருப்பு திறனுக்கும் கோண உந்தத்துக்கும் உள்ள விகிதம் சுற்றுப்பாதை இயக்கத்தின் தனிப்பண்பையோ சுழற்சி இயக்கத்தின் தனிப்பண்பையோ காட்டுவதாக இல்லை. ஒரு காந்தப்புலத்தில் 1 மற்றும் j ஆல் குறிக்கப்படும் ஆற்றல் மட்டம், வெளிக் காந்தப்புலத் திசையில் j யின் கூறுகளான mj ஆல் குறிக்கப்படும் ஆற்றல் மட்டங்களாகப் பிரிகிறது. இங்கு மj இன் மதிப்பு mj=j, (j-1),...0... (j+1), j ஆகும். ஓர் ஆற்றல் மட்டத்தின் ஆற்றல் மதிப்பு. சுழிபுல ஆற்றலும், m; gj oH என்ற காரணியின் மதிப்பும் சேர்ந்ததாகும். இங்கு = ஒரு போர் மேக்னட்டான் மதிப்பு: H = புறக்காந்தப் புல மதிப்பு. காந்தப்புலம் அற்ற நிலையில் ஒரு வரியாக இருக்கும் நிறமாலை வரி, காந்தப்புலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேலான வரிகளாகப் பிரிவதைச் சீமன் விளைவு என்கின்றனர். எலெக்ட்ரானின் சுற்றுப்பாதை இயக்கத்தை மட்டும் வைத்து, சீமன் விளைவை விளக்க முடியாதபோது அது முரணிய சீமன் விளைவு எனக் குறிப்பிடப்படுகிறது. எலெக்ட் ரான் தற்சுழற்சியையும் கணக்கில் கொண்டால் சீமன் விளைவு அனைத்தையும் விளக்க முடியும். காண்க. சீமன் விளைவு. அணுக்கற்றை அளவீடு. எலெக்ட்ரான்களின் சுற்றுப்பாதை மற்றும் தற்சுழற்சி இயக்கங்களினால் உண்டாகும் காந்தச் சுழற்றுத் திறனை உடைய ஓர் அணுவை ஒரு சிறிய காந்தம் எனக் கருதலாம். இதன் அளவுகள் சிறியவையாயினும், வரையறுக்கப் பட்டன ஆகும். இத்தகைய அணுகாந்தம், ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது காந்தப் புலத்தின் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகிறது. ஓர் அணுக்கற்றையை ஒரு சீரற்ற காந்தப்புலத்தின வழியே, காந்தப்புலத்திற்குச் செங்குத்தான திசை யில் செல்லுமாறு செய்து அதில் ஏற்படும் விலக்கங் களை அளவீடு செய்வதன் மூலம் அணுவின் காந்தத் திருப்பு திறனையும், எலெக்ட்ரானின் காந்தத் s =1/2 1 = 0 1 = 1 j=s=1/2 j=1+s=3/2 j=1 − s = 1/2 m; = 3/2A Am = 1/2 1/2 mj mj = 1/2 1/5 = 1/2 3/2 = 1 (0) (0) (0)- -1/2 -1/2 -1/2V 3/2 H -3/2 படம் 2. திசையன் கூட்டுத்தொகையான j திசையன் மற்றும் அனுமதிக்கப்பட்ட m; இன் மதிப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சுழி (0) அனுமதிக்கப்பட்ட மதிப்பு இல்லை.