380 எலெக்ட்ரான் நுண்ணோக்கி
380 எலெக்ட்ரான் நுண்ணோக்கி பொதுவாக எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் எலெக்ட்ரான் உமிழ்வான் (electron gun) அல்லது எதிர்மின் கதிர்க் குழாய் (cathode ray tube) எலெக்ட் ரான் மூலமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எலெக்ட் ரான் உமிழ்வானில் டங்ஸ்டன் இழை, குவிப்பான் மற்றும் நேர்மின்வாய் ஆகியன இருக்கும். டங்ஸ்டன் இழை மின்சாரத்தால் வெண்சூட்டை அடையும் போது, பெருவாரியான எலெக்ட்ரான்களை உமிழ் கின்றது. ஒரு நேர்மின் முனையைக் கொண்டு 50,000 வோல்ட் மின்னழுத்தத்தை ஏற்படுத்தி எலெக்ட்ரான்களைத் தேவையான அளவு கொள்கின் றனர். எதிர்மின் குழாயில் தாழ்ந்த அழுத்தத்தில் மின்னிறக்கம் செய்வதால் எலெக்ட் ரான்கள் உமிழப்படுகின்றன. உயர் மின்னழுத்தத்தி னால் இவை முடுக்கப்படுகின்றன. இவ்வாறு முடுக்கப் பட்ட எலெக்ட்ரான்கள் சிறியதொரு துளைவழியாக வெளியேறுகின்றன. 10 5 3 8 படம் 2. எலெக்ட்ரான் நுண்ணோக்கி முடுக்கிக் 1. எலெக்ட்ரான் உமிழ்வான் மின் இழை 3. நேர் மின்வாய் 4. குவிப்பு வில்லை 5. பொருள் 6. ஒளியியில் துனை 7. பொருளருகு வில்லை 8. இடைநிலைக் காட்சி காட்சி வில்லை 10. காட்சி. 9, பொருளில் விழுந்து சிதறும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமானால் அதன் உருப்பெருக்கமுற்ற காட்சி தெளிவாக இருக்கும். அதனால் குவிக்கப்படும் எலெக்ட்ரான்களின் செறிவை அதிகரிக்க வேண்டியது இன்றியமையாததாக இருக் கின்றது. இதற்குக் குறைந்த குவியத் தொலை வுடைய காந்த வில்லைகள் பயன்படுகின்றன. காந்த வில்லை என்பது உயர் காந்தப் புலத்தை ஏற்படுத்த வல்ல காந்தங்களின் அமைப்பாகும். எனினும் இவ் வமைப்பு இயல்பான காந்தங்களிலிருந்து மாறுபட்டுப் பல சிறப்புக் கூறுகளை உடையதாக இருக்கின்றது. உட்பக்கம் ஓர் இடைவெளியுடன் கூடிய இரும்பு உறையால் மூடப்பெற்றுள்ள மின்சுருள்கள் காந்தப் புலத்தை ஏற்படுத்தும்போது, காந்தப் பாய்வு (magnetic flux) அக்குறுகிய இடைவெளியில் அதி கரித்துக் காணப்படுகின்றது. இது புலத்தை ஊடுரு விச் செல்லும் எலெக்ட்ரான்களைக் குவிக்க வல்ல தாக இருக்கின்றது. எலெக்ட்ரான்கள் குவிக்கப்படும் குவியத்தை, காந்தப் புலத்தை ஏற்படுத்தப் பயன் படுத்தப்படும் மின்னோட்டத்தைத் தக்கவாறு மாற்றித் தகுந்தவாறு மாற்றிக் கொள்ள முடியும். பொதுவாகக் காந்த வில்லைகளையே எலெக்ட் ரான் நுண்ணோக்கிகளில் பயன்படுத்துகின்றார்கள். எனினும் மின் வில்லைகளையும் பயன்படுத்தலாம். இவ்வாறு காந்த வில்லையால் குவிக்கப்படும் எலெக்ட்ரான்கள் ஆய்வுப் பொருளின்மீது விழுந்து சிதறி, இரண்டாம் காந்த வில்லை வழியாகச் செல் கின்றன. அப்போது பொருளின் பெரிய உருவம் உண் டாகின்றது. மூன்றாவதாக ஒரு காந்த வில்லையை அமைத்து, பொருளின் உருவத்தை மேலும் மிகைப்படுத்தலாம். இவ்வாறு பெரிதுபடுத்தப்பட்ட உருவம் ஓர் ஒளிர்திரையில் (fluorescent screen ) விழுந்து, பொருளின் உருவத்தைத் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டுகின்றது. காந்த வில்லைகளை அதிக அளவில் தக்க இடங்களில் பயன்படுத்திக் கொள்வதன் வழி ஓர் எலெக்ட்ரான் நுண்ணோக்கி யின் உருப்பெருக்கத் திறனைப் பத்து இலட்சம் வரை உயர்த்த இயலும். உருப்பெருக்கம் அதிகரிக்க ஒளிர்திரையில் ஓரலகுப் பரப்பில் விழும் எலெக்ட் ரான்களின் எண்ணிக்கை குறைவுறுவதால், காட்சித் தெளிவில் குறைவு ஏற்படுகின்றது. இதனால் எலெக்ட் ரான் நுண்ணோக்கியின் பயனுறு உருப்பெருக்கமும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கின்றது எனலாம். எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் ஒரு பொருளை ஆராய வேண்டுமானால், அப்பொருள் மிகவும் மெல்லிய தடிப்புள்ளதாக இருக்கவேண்டும். அப் போதுதான் சிதறலுக்கு அதிகம் உள்ளாகாமல். எலெக்ட்ரான்களை ஊடுருவிச் செல்லப் பொருளை அனுமதிக்கக் கூடியதாக அமையும். இதற்கென பொருள் ஓர் ஒளியியல் கண்ணாடித் தகட்டில் மென்படலமாகப் படியவைத்துக் கொள்ளப்படுகிறது. காற்று மூலக்கூறுகளுடன் எலெக்ட்ரான்கள் மோதித் திசை திரும்பக் கூடுமாகையால், அத்தகைய மோதல்களைத்தவிர்க்க வேண்டியது இன்றியமையாத தாகும். இதற்கு எலெக்ட்ரான் நுண்ணோக்கியை