பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 எலெக்ட்ரான்‌ வில்லை

384 எலெக்ட்ரான் வில்லை 16 அணுக்கரு உறுதிநிலை பெருமமாக இருக்கின்றது.C.I அல்லது 0.1 அல்லது He' ஆகிய அணுக்கருக்களில் சம எண்ணிக்கையில் நியூட்ரான்களும், புரோட்டான் களும் உள்ளன. இவற்றில் நியூட்ரான்/புரோட்டான் தகவு = 1 என்றிருப்பதால் உறுதிநிலை மிக்கனவாய் விளங்குகின்றன. U,, 238 அணுக்கருவில் புரோட்டான் எண்ணிக்கை 92. நியூட்ரான் எண்ணிக்கை 143, எனவே நியூட்ரான் புரோட்டான் 1. யுரேனியம் கதிர் வீச்சு கொண்ட அணுக்கரு உறுதிநிலை அடை யும்வரை கதிர்வீச்சு நடைபெறும். இதுபோலவே He, அணுக்கருவும் உறுதிநிலையற்றது. நியூட்ரான்/ புரோட்டான் = 1/2. இக்கருக்கள் உறுதிநிலைபெற நியூட்ரான்/புரோட்டான் ஏறக்குறைய 1 ஆக இருக்க 3 வேண்டும். உறுதிநிலை பெரும் பொருட்டு ஓர் அணுக்கரு தன் புரோட்டான் எண்ணிக்கையைக் குறைக்க முயல் வதாகக் கொள்ளலாம். புரோட்டான் பாசிட்ரான் ஆகவும், நியூட்ரானாகவும், நியூட்ரினோவாகவும் மாறும். p] → n,' + e +, + V© Ve இதற்குப் பாசிட்ரான் உமிழ்தல் என்று பெயர். அணுக்கரு அதிக ஆற்றல் நிலையில் இருந்தால் மட்டும் இவ்வியக்கம் நடைபெறும். மற்றொரு முறையிலும் புரோட்டான் எண்ணிக் கையைக் குறைக்கலாம். புரோட்டான், அணுவினுள் உள்ள ஓர் எலெக்ட்ரானை அணுக்கருக்குள் இழுத் துக் கொள்ளலாம். இதற்கு எலெக்ட்ரான் பிடிப் என்று பெயர்.அணுக்கருவின் மின் புலம் எலெக்ட் இழுத்துக்கொள்ளும். அணுக்கருவினுள் உள்ள ஆற்றல் நிலையைவிட அணுவைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான்கள் குறைந்த ஆற்றல் நிலையிலேயே உள்ளன. எனவே எலெக்ட்ரான் பிடிப்பு குறைந்த ஆற்றல் நிலையிலேயே நடைபெறுகிறது. எலெக்ட் ரான் பிடிப்புக் காரணமாக வெளிவரும் நியூட்ரி ரானை னோக்கள் குறைந்த ஆற்றல் கொண்டிருக்கும். முதல் சுற்றுப்பாதையிலுள்ள எலெக்ட்ரான் பிடிக்கப் பட்டால் K. பிடிப்பு என்றும், ரண்டாம் சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரான் பிடிக்கப்பட்டால் L பிடிப்பு என்றும் குறிப்பிடப்படும். எலெக்ட்ரான் பிடிப்புக் காரணமாக, 0 P, ' + e1' -→ - no¹ + ve P₁e- எலெக்ட்ரான் பிடிப்பின்போது சுற்றுப்பாதையி லுள்ள எலெக்ட்ரான் அணுக்கருக்குள் செல்கிறது. வெளிச்சுற்றுப்பாதையிலிருந்து ஓர் எலெக்ட்ரான் உள்ளே தாவி. பிடிக்கப்பட்ட எலெக்ட்ரான் இடத்தை நிரப்பகின்றது. இம்மாற்றத்தால் குறிப் பிட்ட அலைநீளம்கொண்ட எக்ஸ்கதிர் கள் வெளி யிடப்படுகின்றன. எலெக்ட்ரான் பிடிப்பின்போது எக்ஸ் கதிர்களும் வரும். எலெக்ட்ரான் பிடிப்பு, அணுக்கருவினுள் புரோட்டான் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு வழியாகும். எலெக்ட்ரான் வில்லை -எஸ், லட்சுமி காந்தன் இது எலெக்ட்ரான் கற்றையின் மீது மின், காந்த அல்லது இவ்விரண்டு புலங்களும் இணைந்த செயல் பாட்டைக் குறிக்கும். இது ஒளிக்கற்றையின் மீது செயல்படும் ஒளியியல் வில்லையின் (optical lens ) செயலை ஒத்திருக்கும். எலெக்ட்ரான் வில்லைகள், எதிர்மின்முனைக் கதிர்க் குழாயைப் போன்று நன்றாகக் குவிக்கப்பட்ட எலெக்ட்ரான் கற்றையை உருவாக்கவும், அகச்சிவப்புக் கதிர் மாற்றிக் குழாய், தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள ஒளிப்படக் குழாய், எதிர்த்துகள் நுண்ணோக்கி ஆகியவற்றி லுள்ளவாறு எலெக்ட்ரான் உருவத்தை உருவாக்க வும் பயன்படுகின்றன. அச்சுடன் சமச்சீர்மை கொண்ட எந்த மின் அல்லது காந்தப்புலமும் ஒரு பொருளின் உண்மை அல்லது பொய் உருவத்தை அவ்வச்சின் மீது உரு வாக்கும் திறன் உடையது. அப்பொருள் வேறு ஓர் எலெக்ட்ரான் மூலத்திலிருந்து எலெக்ட்ரான்களை உமிழும் அல்லது உட்செலுத்தும் தன்மையுடையது. ஆகவே சமச்சீர்மை அச்சுடைய மின் அல்லது காந்தப்புலம் கோள வடிவ ஒளியியல் வில்லையை ஒத்ததாகும். இப்புலங்களில் உள்ள எலெக்ட்ரான் பாதையின் ஒளிவிலகல் எண் (n) அப்புலத்தையும், எதிர்மின் துகள்களின் வேகத்தையும், திசையையும் பொறுத்த மையும். அது கீழ்க்காணும் சமன்பாட்டினால் குறிக்கப்படுகிறது. D = 2002 +. mc² 2m Acosx = √+0.978×10-0 -0.297 Acosx இங்கு என்பது எதிர்மின்துகளின் மின்னூட்டத் தையும் (charge), m அதன் நிறையையும், மின் நிலையையும் (potential), c ஒளியின் வேகத்தையும், A காந்தத் திசையனின் மின்னிலையையும், X எதிர் மின்துகளின் பாதையையும், சமச்சீர்மை அச்சுடைய புலத்தின் காந்தத் திசையன் மின்னிலையின் திசைக் கும் இடையே உள்ள கோணத்தையும் குறிக்கும்.