பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 எலேட்டரைட்‌

390 எலேட்டரைட் அட்டவணை ஆற்றல் அலகுகளின் மாற்றுக் காரணிகள் அலகு செ.மீ. -1 எர்க்/மூலக்கூறு காலரி/மோல் எ வோ( அ.நி.அ.( I 1.செ.மீ. எர்க்/மூலக்கூறு 5.0348×10-18 1 1 காலரி/மோல் 0.3497 6.9467X10-17 I 1 எ.வோ. 1 அ.நி.அ. 8.0658-10° 1.602× 10-12.306×10* 1 7.513×10 1.492× 10-3 2.1483X1019 1.9865×10-16 2.859 1,2388×10-| 1.3310x10-13 1.4395X1018 6.24 21 10 6.7009×10" 4.3361X10-8 4.6548X10-14 1.0735x10-0 9.3150X108 1 வழக்கமாயிற்று. எலெக்ட்ரான் வோல்ட் அலகின் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய வற்றின் ஓய்வு நிலை நிறைகள் முறையே 0.511. 938, 940 மி, எ. வோ. ஆகும். எலேட்டரைட் மெ. மெய்யப்பன் உடைய வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறம் வரை இயற்கையில் காணப்படும் கார்போனேசியப் பொருளே எலேட்டரைட் (claterite) ஆகும். இதன் அடர்த்தி எண் 0.90 - 1.05; இது உருகாத்தன்மை யும், கார்பன் டைசல்ஃபைடில் கரையாத் தன்மை யும், மிதமான மென்மையும், மீட்சியும் தாகும். வெப்பப்படுத்தும்போது 2-5% நிலையான கார்பனை வெளிப்படுத்துகிறது. இது கடற்பாசியி லிருந்து உருவானது என்றும் கருதப்படுகிறது. இங்கி லாந்தில் டெர்பினஷர் மாவட்டத்திலும், தென் ஆஸ்திரேலியாவில் கூராங்கு மாவட்டத்திலும், சோவியத் ஒன்றியக் குடியரசில் டர்கெஸ்டானிலும் இது கிடைக்கிறது. எலோப்பிஃபாம்ஸ் இரா. சரசவாணி இவ்வகை மீன்கள் வெப்ப மண்டலக் கடல்களில் (tropical seas) வாழ்கின்றன. கிரிடேசியக் காலத்தில், (ஏறத்தாழ எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இவை தோன்றியதற்கான புதை படிவச் சான்றுகள் கிடைத்துள்ளன. முதலில் தோன்றிய சில இனங்கள் அழிவுபட்டாலும், பின்னர் இயோசீன் காலத்தில் அதாவது ஏறத்தாழ ஐம்பது மில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றியவை இன்றும் வாழ்ந்து வரு கின்றன. எலோப்பிஃபாம்ஸ் ((elopiformes) மீன்கள் பொதுவாக டார்ப்பான்கள் எனக் குறிப்பிடப்படுகின் றன. இவற்றுள் சிலவற்றைப் பிடிக்கும் செயல் ஆர்வமூட்டத்தக்கதாக இருந்தாலும். மீன் பிடிப் போரை அவை மிகவும் அலைக்கழிக்கச் செய்வதால் விளையாட்டு மீன்கள் என்றும் சுட்டப்படு கின்றன. இவை சிறந்த உணவு மீன்களாக மக்களால் விரும்பப்படுகின்றன. இவை வட வட அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரையிலும், தென் அமெரிக்காவில் பிரேசில் கடற் கரையிலும், இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடல் களிலும் எண்ணற்ற அளவில் மிகுந்துள்ளன. ஃப்ளோ ரிடாவில் இவற்றின் உடற்பகுதிகளைக் கலை நுணுக்க முள்ள அழகுப் பொருள்களாகச் செய்து மிகுந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இவை . பொதுப் பண்பு. பலவித அளவுகளில் உள்ள இம் மீன்களின் செதில்கள் ஓரளவுக்கு அகன்று பெரியன வாக உள்ளன. மேல்தாடையின் ஓரங்கள் முன் மேல்தாடை எலும்பு, மேல்தாடை எலும்பு ஆகிய வற்றால் ஆனவை. இவற்றுள் மேல்தாடை எலும்பு நன்கு வளர்ந்து பெரியதாக உள்ளது. சில மேல் தாடை எலும்புகள் இருக்க வேண்டிய எண்ணிக் கையைவிட மிகுதியாகவே இருத்தலும் உண்டு. அத்தகைய மிகுதியான எலும்புகள் பெரியவை யாகத் தலையின் பக்கங்களில் சாய்வாக அமைந் தும், ஏனைய மேல்தாடை எலும்புகளுடன் தும் காணப்படுகின்றன. ணைந்