392 எழில் தாவரம்
392 எழில் தாவரம் பினியேசி (caesolpiniaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இம்மரம் ஏறத்தாழ 15 -20 மீ உயரம் வளரும். இவற்றின் அடர் மஞ்சள் நிற மலர்க்கொத்துகள் கவர்ச்சியானவை. இவை ஆண்டில் இருமுறை மலரக்கூடியவை. இத்தாவரங்கள் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன: காசியா பேரினத்தில் காசியா சியாமி, கா. ரெனிஜிரா. கா. அலேட்டா. கா. டோரா, கா. டொமன்டோசா, கா. மாண்டேனா, கா. டிமொரியன்சிஸ், கா. க்ளாகா. கா. அப்சஸ், கா புமிலா, கா மைமொசாய்ட்ஸ், கா. அங்கஸ்டி ஃபோலியா, கர ஆக்சிடென்டாவிஸ், கா. ஆரிடு லேட்டா ஆகிய சிற்றினங்கள் எழில் மலர் தரும் தாவரங்களாகும். அசோக மரம். சாரகா ண்டிகா (Saraca indica) என்பது இதன் தாவரவியல் பெயராகும். இதுவும் சிசாப்பினியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது அழகான பசுமையான இலைகளைக் கொண்ட சிறிய மரமாகும். மலர்கள் 'சிவப்பு நிறமானவை: நறுமண முடையவை. புல்லிகள் நீண்ட கிண்ணம் அல்லது குழல் போன்றவை. அல்லிகள் அற்ற இம்மரத்தை ஒத்த அம்ஹெர்சியா நோபிலில் (Amherstia nobilis) பிரவுனிய காக்கினியா (Brownia coccinea) முதலிய மரங்களும் இக்குடும்பத்தின் எழில் மலர் தரும் மரங்களாகும். பசுமையான பெருமயில் கொள்றை. இது தாவரவியலில் டிலோனிக்ஸ் ரெஜியா (Delonix regia) எனப்படும். இது சிசல்பினியேசி (caecalpaeniacea) குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு குல்மொஹர் என்ற பெயரும் உண்டு. இம்மரம் அழகான இலை களையும் மலர்களையும் தரும். பொதுவாக வெப்ப மண்டலப் பகுதிகளில் அழகுக்காகத் தோட்டங் களிலும் சாலை ஓரங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மலர்கள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். இம்மரங்கள் 15-20 மீ உயரம் வளரக் கூடியவை. விதைகள் மூலம் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. LD கப்பல் அலரி. இதைக் கள்ளிமந்தாரை, பெருங் கள்ளி, பகோடாமரம் எனவும் கூறுவர். இதன் தாவரவியல் பெயர் புளுமேரியா ரூபிரா (Plumeria rubrz) ஆகும். இது அபோசைனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது 3 -4மீ உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். இதன் கணுக்கள் பருத்துக் காணப்படும். இலைகளில் இலைத்தழும்புகள் காணப்படும். இலை களையோ கிளைகளையோ வெட்டினால் வெண்மை யான பால் போன்ற நீர்மம் வடிவதைக் காணலாம். இலைகள் மாற்று அடுக்கில் அமைந்தவை; ஈட்டி வடிவமுடையவை; 10--15 செ. நீளம் யவை; மலர்கள் வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. இவை பெரும்பாலான தோட்டங்களில் பாதுகாப்பு இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. கடற் உடை காற்றின் வேகத்தால் பாதிக்கப்படாமையால் கடல் ஓரப்பகுதிகளில் இவை பெருமளவில் வளர்கின்றன. பூமருது. இதன் இதன் தாவரவியல் பெயர் லாகர் ஸ்ரோமியா ரெஜினி (lagerstromia reginae) ஆகும். இத்தாவரம் லித்ரேசி (lythraceae) லித்ரேசி (lythraceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மரத்தின் இலைகள் துளிர்விடும் போதும், மலரும்போதும் கனிகள் முற்றித் தொங்கும் போதும் அழகாக இருக்கும். இவற்றின் மலர்கள் கொத்தாக இளஞ்சிவப்பு அல்லது வெளிர் நீல நிறத் தில் காணப்படுகின்றன. கால் கொண்ட அல்லிகள் யாவும் ஒரே வடிவானவை; கண்ணைக் கவரக் கூடியவை; விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய் கின்றன. மந்தாரை. இது தாவரவியலில் பாகினியா பர்பூரியா (Bauhinia purpurea) என்று குறிப்பிடப் படும். இவற்றில் மஞ்சள் மந்தாரை, சிவப்பு மந்தாரை, கருஞ்சிவப்பு மந்தாரை, வெள்ளை மந்தாரை, ரோஜா மந்தாரை எனப் பலவகை உண்டு. பொதுவாக மஞ்சரி ரெசிம்கள் அல்லது நுனி பாலிக்கிள்களான கோரிம்போசாகும். மலர்கள் இருபக்கச் சமச்சீராகவோ உச்சியிலோ இலைக் கோணங்களிலோ காணப்படும். பூவடி இதழ்களும், பூவடிச் சிறு இதழ்களும் சிறியவை. அவை முதிரு முன்னரே உதிரும் தன்மையுடையன. சிலவகைகளில் மலர்கள் பெரிய மகரந்தத்தாள்கள் கொண்டவையாகும். கனி வெடிக்கனி அல்லது வெடியாக்கனியாகும். இவற்றின் இனங்கள் பாகினியா டொமண்டோசா பா. அகுமிலேடா. பா. ரேசிமோசா, பா. டைஃபில்லா, பா. ரெடுசா. பா. வேரிகேடாபாஃபோனிசியா, பா.மோளாண்ட்ரா ஆகும். வளமான ஹெக் எழில் மலர்தரும் குறுஞ்செடி மனோரஞ்சிதம். ஆர்ட்ரபோட்ரிஸ் ஸாபெட்டலஸ் (Artabotrys hexapetalus) என்பது இதன் தாவரவியல் பெயராகும். இது அனோனேசி (annonaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. 2-4மீ வளரக்கூடிய கொடியாகும். இதன் மலர்கள் முதலில் பச்சைநிறத்திலும், முதிரும்போது இளமஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இதன் காம்பின் அடைந்து ஒருபகுதி கொக்கி போன்ற வளர்ச்சி இருக்கும். இத்தாவரத்தின் மலர்கள் வேனிற் காலத்திலும் மழைக்காலத்திலும் மலரும்போது இவற்றின் நறுமணம் மனத்தை ஈர்க்கும். இவை விதைகள் மூலமும், முதிர்ந்த (கிளைகளை நடுவதன் மூலமும் இனப்பெருக்கம் செய்கின்றன. மல்லிகை. இது தாவரவியலில் ஜாஸ்மினம் (jasminum) என்று குறிப்பிடப்படும். ஒலியேசி (oleaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் இரு நூறுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்பட்ட