எள் 397
STGT 397 துகளின் ஓய்வு நிலை நிறை, மின்னூட்டம் இவற் றைக் குறுப்பிடலாம். நியூட்ரினோக்கள் குறிப்பிட்ட ஓய்வு நிறையுடையனவாக இருந்தால் அவை எப் போதும் ஒளியின் வேகத்திற்குக் குறைவான வேகங் களில் மட்டுமே இயங்க முடியும். இதனால் நியூட்ரி னோவின் வேகத்தைவிட அதிகமாகவும், ஒளியின் வேகத்தைவிடக் குறைவாகவும் வேகங்கொண்ட ஓர் ஆய அமைப்பில் காண்போர்க்கு, நியூட்ரினோ பின் னோக்கிச் செல்வது போலத் தோன்றும். இயக்கத் திசை நேர் எதிராக மாறிப் போனதால், அவருக்கு நியூட்ரினோ எதிர் நியூட்ரினோ போலத் தோன்றும். அதாவது துகளானது, காண்போரின் இயக்கத்தைப் பொறுத்து தன் சிறப்பியல்புப் பண்புகளை மாற்றிக் கொள்ளும். இது முற்றிலும் இயற்கை விதிமுறைக்கு முரண்பட்டது. எனவே நியூட்ரினோக்கள் ஒளியின் செல்கின்றன திசைவேகத்தில் மட்டுமே என்றும் அதனால் அவற்றின் ஓய்வு நிலை நிறை சுழி என்றும் கருதலாம். மெ.மெய்யப்பன் எள் பெடாலியேசி வரிசையைச் சார்ந்த எள் செடியின் தாவரவியல் பெயர் சீசாமம் இண்டிகம் (Sesamum பூவின் நீள்வெட்டுத் தோற்றம் காயின் நீள்வெட்டுத்தோற்றம் எள் இலை