எறிபொருள் 401
மேற்கூறப்பட்ட கலவையில் உள்ள உலோகக் கலவைகளின் விகிதமானது கீழ்க்காணுமாறு கிடப்படுகிறது. கணக் B 20%. A 80% உள்ள கலவையில் A உலோகத் தின் திண்மநிலை விகிதம் (வரைபடத்திலிருந்து) C, S CS - 40 60 = 66.67% எளிதில் உருகி உலோகக் கலவையில் A உலோகத்தின் விகிதம் =0 C, E S, E 20 60 33. 33% மேற்கூறப்பட்ட முறைப்படி எளிதில் உருகிகளின் விகிதமும் தனி உலோகங்களின் விகிதமும் கணக்கிடப் படலாம். இதில் உள்ள உலோகக் கலவையில் எளிதில் உருகிகளின் உலோகக் கலவையுடன் உள்ள தனி உலோகப் படிகங்களையும் தனித்தனியாகப் பிரித்து எடுக்க முடியாது என்பது முக்கியமான குறிப்பாகும். எளிய அக்கி டி. நாகராஜ் இது ஒரு வைரஸ் நோயாகும். பொதுவாக உடல் சீர்கெட்ட நிலையில், நாள்பட்ட நோயிலும், உடலின் எதிர்ப்பாற்றல் குறையும்போதும் ஹெர்பிஸ் வைரஸ் தாக்குகிறது. அரிதாகக் கொடிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் இந்நோய் உடலின் எப்பகுதியையும் தாக்கலாம். பொதுவாக முகத்திலும் பிறப்புறுப்பிலும் காணப்படும் வெண்ணிறக் கொப்புளங்கள் குண்டூசித் தலை அளவு முதல் விதையளவு வரை காணப்படும். காய்ச்சல் மிகுதியால் பாதிக்கப்பட்டோரின் உதட்டி லும், வாய் ஓரங்களிலும் இக்கொப்புளங்கள் காணப் படும். இவ்வக்கி மீண்டும் மீண்டும் அதே இடத்தில் வரலாம். நோயின் தொடக்கத்தில் சூரிய வெப்பம், காற்று, குளிர் ஆகியவற்றால் எரிச்சல் உணர்வு தோன்றும். எளிய அக்கி தோன்றும் இடம் சிவந்து அரிப்புடன் காணப்படும். விரைவில் கொப்புளங்கள் தோன்றும். சில நாள்களில் இவை உலர்ந்து மஞ்சள் நிற வடு உண்டாகும். தழும்புகள் உண்டாவதில்லை. மாறாகச் சளிப்படலத்தில் வாயினுள் வரும் அக்கிக் கொப்பு ளத்தின் மேற்பகுதி உடைய, புண்கள் தோன்றி மிகுதி யான வேதனை ஏற்படும். இந்த நிலை 7-14 நாள் வரை நீடிக்கலாம். புணர்ந்த ஒரு வாரத்திற்குள் பிறப்புறுப்புக்களில் எர்ப்பீஸ் பொரிப்பு காணப்படும். எறிபொருள் 401 ஹெர்பிஸ் ஹோமினிஸ் என்னும் வைரஸ் செவிலி யர்களின் விரல்களைத் தாக்கித் தொற்றில்லா தோல் அடி அழற்சியை உண்டாக்கும். பிற நோய்க்குறிகள் ஏதுமில்லாமல் அடுத்துள்ள நிணநீர்க் கணுவீக்கத்தை வைத்து இதனைக் கண்டுபிடிக்கலாம். மருத்துவம். இதற்கெனத் தனி மருத்துவம் ஏதும் ல்லை. ஜெனிஷியன் வைலட் என்ற மருந்தைத் தடவலாம். சீழ் உண்டாக்கும் நுண்ணுயிர் தொற்றா வண்ணம் பாதுகாக்க வேண்டும். ஆரியோமைசீன் களிம்பு பயன் தரும். தீராத நோயில் நிணநீர் வேக் சின், சுய வேக்சீன், சுன்னத்து முறை, எத்தில் குளோ ரைடு தெளிப்பு ஆகியவை பயனளிக்கின்றன. எறிபொருள் அ.கதிரேசன் -மா. ஃபிரெடரிக்ஜோசப் ஏதாவதொரு கோணத்தில் எறியப்படும் ஒரு துகள் எறிபொருள் (projectile) எனப்படும். புவியிலிருந்து எறியப்படும் எப்பொருளும் மீண்டும் புவியை வந்தடையும். புவிக்குச் செங்குத்தான நேர்கோட்டில் எறியப்படும் துகள் மீண்டும் அதே நேர்க் கோட்டில் கீழே விழும். ஓர் எறிபொருளின் மீது அதன் எடை மற்றும் காற்றின் தடை என செயல்படும். இரு விசைகள் புவிக்கு மேலே செல்லும் எந்த ஒரு பொருளின் மீதும் செயல்படும் புவியீர்ப்பு விசையையே அதன் எடை படம் 1.